பணக்கார ஏழைகளுக்கான மினி லேண்ட் க்ரூஸர் கார் வரப்போகுது! மாருதி கார் தான் டார்கெட்டே!
டொயோட்டா நிறுவனம் மினி லேண்ட் க்ரூஸர் காரை தயாரித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸூகி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் ஆகிய கார்களுக்கு போட்டியாக லைப் ஸ்டைல் ஆப் ரோடு எஸ்யூவி காராக தயாரிக்கப்படும் என தெரிகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் கார் உலக அளவில் மிகவும் பிரபலமான காராக இருக்கிறது. இந்த காரை உலக அளவில் உள்ள சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் சிலர் இந்த கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த காரின் விலை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது புதிய லைப் ஸ்டைல் காம்பேக்ட் ஆஃப் ரோடு எஸ்யூவி காரை உருவாக்கப் போவதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த கார் மினி லேண்ட் க்ரூஸர் காராக அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த காரின் கான்செப்ட் வெர்ஷன் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் ஆகியிருந்த நிலையில் இந்த கார் தான் தற்போது தயாரிப்பு வெர்ஷனாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரை டொயோட்டா நிறுவனம் லைட் க்ரூஸர் அல்லது யாரிஸ் க்ரூஸர் என்ற பெயரில் அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. ஏற்கனவே கான்செப்ட் க்ரூஸர் ஈவி கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இதன் புரொடக்ஷன் வெர்ஷன் 2021 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காம்பேக்ட் டொயோட்டா காரை பார்க்கும்போது காரில் உள்ள அதே உயரமான பில்லர்கள் பிளாட்டான ரூஃப் லைன்கள் ஆகியன உள்ளன. உங்க காரின் அளவுகளை பொருத்தவரை கொரோலா கிராஸ் காரின் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோலா கிராஸ் கார் தற்போது இந்தியாவில் விற்பனை ஆகி வரும் ஐந்து டோர் மாருதி சுசுகி ஜிம்னி காரை விட பெரியதான காராக இருக்கும்.
அதனால் இந்த மினி லேண்ட் க்ரூஸர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் இது மாருதி சுஸூகி ஜிம்னி காருக்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மினி லேண்ட் க்ரூஸர் கார் பாடி ஆன் பிரேம் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 4350 மிமீ நீளமும் 1860 மிமீ அகலமும் 1880 மிமீ உயரமும் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை. இதற்கு தகவலின் படி கொரோனா கிராஸ் காரின் இஞ்சினான 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல்/ ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.8 லிட்டர் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் இந்த காரில் ஒரு ஆப்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
ஜப்பானில் இந்த கார் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்ச்சூனர் மற்றும் ஹில்லிக்ஸ் ஆகிய கார்களும் ஜப்பானில் இது போல் தான் விற்பனைக்கு வந்துள்ளன. இதுபோக இந்த காரும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாகும் என தெரிகிறது. அப்படி அறிமுகமானால் அதுவும் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்தியாவில் விற்பனையாகி வரும் லைப் ஸ்டைல் ஆப் ரோடு எஸ்யூவி கார்களான மாருதி ஜிம்னி மற்றும் கார் ஆகிய கார்களின் விற்பனையை கணக்கிட்டு இந்த காரை டொயோட்டா நிறுவனம் எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகமானால் இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பது அச்சமில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் லைஃப்ஸ்டைல் ஆஃப் ரோடு ஜிம்னி காரை அறிமுகப்படுத்தும் போது மிகப்பெரிய அளவில் பிரபலம் ஏற்பட்டது. பலர் இந்த ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இனி இந்த மினி லேண்ட் க்ரூஸர் கார் இந்தியாவிற்கு வந்தால் அதற்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








