15 மாதங்களாக காத்திருந்து பெற்ற கார்.. கைகளுக்கு வந்த மூனே நாட்களில் பிரேக் டவுன் ஆனதால் ஓனர் செம்ம அப்செட்..

வாங்கி மூன்றே நாட்கள் ஆகின்ற புத்தம் புதிய கார் பிரேக் ஒன்று பிரேக் டவுனாகி இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நடுரோட்டில் காலை வாரி விட்டதால் அதன் உரிமையாளர் பெரும் சிரமதத்திற்கு ஆளாகி இருக்கின்றார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் எம் நாதன். இவரே புத்தம் புதிய காரால் கடும் சிரமத்திற்கு ஆளாகியவர் ஆவார். இவர் வேறு யாரும் இல்லைங்க, அங்காடி தெரு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பதிவாற்றியவரே இவர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பே நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் இவருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) கார் டெலிவரி கொடுக்கப்பட்டது.

Mahindra xuv700 breaks down

பல மாதங்களாக காத்திருந்த பெற்றிருந்தநிலையில், இந்த காரில் தன்னுடைய பயணங்களை ரிச்சர்ட் மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றார். அந்தவகையில், சென்னையின் மிகுந்த பிசியான ஏரியாக்களில் ஒன்றான லஸ் சர்ச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த புத்தம் புதிய கார் பிரேக் டவுனாகி இருக்கின்றது.

நடு ரோட்டில் பிரேக் டவுன் ஆகியதால் ரிச்சர்ட் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றார். குறிப்பாக, ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அவரது உதவி கோரலுக்கு சரியான பதிலை வழங்காதது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் கடும் மன வேதனைக்கு ஆளாகிய ரிச்சர்டு தன்னுடைய ஆதங்கத்தையும், வேதனையையும் சமூக வலைதள பதிவின் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கின்றார்.

Mahindra xuv700 front look

இந்த பதிவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவருடைய பதிவின் வாயிலாக இந்த கார் அவருக்கு டெலிவரிக் கொடுக்கப்பட்டு மூன்று நாட்கள் மட்டுமே ஆவது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 நடு ரோட்டில் பிரேக் டவுன் ஆகி இருக்கின்றது.

ஜூன் 2 ஆம் தேதி டெலிவரி கொடுக்கப்பட்ட நிலையில் ஜூன் 5 ஆம் தேதியே இந்த பிரேக் டவுன் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக எக்ஸ்யூவி 700 மாறி இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Mahindra xuv700 front beauty

இதன் விளைவாகவே இந்த காரின் குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கு மாதக் கணக்கில் காத்திருப்பு காலம் நீடித்துக் காணப்படுகின்றது. சில நகரங்களில் வருடக் கணக்கில் இந்த காரை புக் செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கின்றனர். அந்தவகையில், புக் செய்து விட்டு 15 மாதங்களாக காத்திருந்து எக்ஸ்யூவி 700 காரை பெற்றவரே ரிச்சர்டு எம் நாதன் ஆவார்.

இவ்வாறு தவம் இருந்து வாங்கிய காரே தற்போது அவரை இன்னல்களுக்கு ஆளாக்கி இருக்கின்றது. இதனால், ரிச்சர்டு தற்போது ஃபுல் அப்செட்டில் இருக்கின்றார். இதை கூடுதலாக்கும் விதமாகவே மஹிந்திரா நிறுவனத்தின் ரோடு அசிஸ்டன்ஸ் குழு நடந்துக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்யூவி 700 காரின் உரிமையாளர் கார் பிரேக் டவுன் ஆனது குறித்து புகார் அளித்தும் நீண்ட நேரமாக சம்பவ இடத்திற்கு வந்து உதவி அளிக்கவில்லை என அவர் புகார் கூறுகின்றார்.

பல மணி நேரம் தன்னை அவர்கள் காத்துக் கிடக்கச் செய்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்திருக்கின்றார். ஆகையால், தன்னுடைய இந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் அவர் தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றார். குறி்ப்பாக, நிறுவனத்தின் சேர்மேன் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து தான் சந்தித்த அனைத்து இன்னல்களையும் அவருக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்.

மேலும், தான் 15 மாதங்கள் காத்திருந்து இந்த காரை பெற்றதாகவும், இத்தகைய ஓர் காருக்காகவே இத்தனை மாதங்கள் காத்திருந்தேன் என்றும் அவர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார். இது மஹிந்திரா நிறுவனத்திற்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு, தான் இனியும் இந்த காரை வைத்திருக்கப் போவதில்லை, இந்த கார் இனி எனக்கு வேண்டாம் என்கிற முடிவிற்கும் வந்திருக்கின்றார்.

இந்தியர்கள் பலர் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை ஆஹோ, ஓஹோவென புகழ்ந்துக் கொண்டிருக்கின்றநிலையில், சென்னையைச் சேர்ந்த ரிச்சர்டு அக்காரை கழுவி கழுவி ஊத்தத் தொடங்கி இருக்கின்றார். இன்னும் அந்த காருக்கு பதிவெண்கூட ஒட்டப்படவில்லை. இத்தகைய புத்தம் புதிய கார் பிரேக் டவுன் ஆகி இருப்பது ரிச்சர்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வாகன பிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்ளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் சார்ந்து இதுமாதிரியான சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்த விஷயங்கள் அனைத்திலும் மஹிந்திரா நிறுவனம் உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை எட்டி இருக்கின்றது. இதுமாதிரியான ஓர் நல்ல தீர்வு இந்த விஷயத்தில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 15:09 [IST]
English summary
3 days old mahindra xuv700 suv breaks down at luz corner chennai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X