பெட்ரோல்/டீசல் காரை விட மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பெஸ்ட் எப்படி தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள கார் தயாரிப்பாளர்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தனது தயாரிப்புகளை விரிவுபடுத்துவரும் நிலையில் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனமும் தனது தயாரிப்புகளை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி விரிவுபடுத்தி வருகிறது. இதுகுறித்த புதிய டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதற்காக மக்கள் பல நிறுவனத்தின் தயாரிப்புகளை புக் செய்து வாங்கி வருகின்றனர். மஹிந்திரா நிறுவனத்தின் பல கார்களுக்கான காத்திருப்பு காலம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை எல்லாம் அறிமுகப்படுத்த வரிசையாக தனது அனுபவங்களை தயார் செய்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் மூன்று எலெக்ட்ரிக் கார்கள் குறித்த டீசல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி. இ 8 எக்ஸ்யூவி. இ9 மற்றும் பிஇ. 05 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை தற்போது டீஸ் செய்துள்ளது. இந்த வீடியோவில் கார் டிசைன் மொழி வெளியே தெரியாமல் இருப்பதற்காக முற்றிலும் ஸ்டிக்கர் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கார்களில் எக்ஸ்யூவி.இ8 என்ற கார் மிக முக்கியமான காராக இருக்கிறது. இது மார்க்கெட்டில் விற்பனையாகும் எக்ஸ்யூவி 700 என்ற காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக எக்ஸ்யூவி.இ 9 என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த கார் எஸ்யூவி.இ9 காரின் கூபே வெர்ஷனாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மூலம் மஹிந்திரா நிறுவனம் கூப்பே செக்மெண்டிற்குள் நுழையப் போகிறது.

அடுத்ததாக பிஇ.05 என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வருகிறது இந்தக் காரின் இறுதி கட்ட பணிகள் தற்போது மஹிந்திரா நிறுவனத்தால் செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் முக்கியமாக கிளாஸ் ரூஃப், ஸ்கல்ப் பானட், ரூப்பில் ஸ்பிளிட் ஸ்பாய்லர்கள் என பல்வேறு அம்சங்கள் இருக்கிறது இந்த கால் ரோட்டில் போனாலே ரோட்டில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள இந்த டீசர் இந்த காரை காட்சிப்படுத்துவதற்காக அல்ல இந்த காரின் உண்மையான பவரை வெளியில் சொல்வதற்காக தான் இந்த டீசரின் படி இந்த காரில் உள்ள முக்கியமான ஒரு விஷயம் பொது வெளிக்கு மக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்த கார் அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை காட்ட இந்த கார் இந்த காரை மஹிந்திரா நிறுவனம் சென்னையில் உள்ள தனது ஸ்டேட் ஆஃப் ஆர்ட் டிராக்கில் ஒட்டி 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதை கேமராவில் பதிவு செய்து அதை டீசராக வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த மூன்று எஸ்யூவி கார்களும் மஹிந்திராவின் இன்க்லோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்மில் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வில் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் காரை உருவாக்க முடியும். அதிகபட்சமாக இந்த பிளாட்பார்மில் உருவாக்கப்படும் கார் 400 பிஎச்பி வரை பவர் கொண்ட காராக உருவாக்க முடியும்.
இந்த அளவு பவர் கொண்ட கார் பிரீமியம் செக்மென்ட் காரில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பிளாட்பார்ம் மூலம் தான் மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அணிவகுப்பை விரிவுபடுத்த தயாராகியுள்ளது. விரைவில் பல கார்கள் இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டீசர் மூலம் மஹிந்திரா நிறுவனம் தங்களால் பெட்ரோல் டீசல் கார்களை விட மோட்டாரிலேயே தயாரிக்க முடியும் என நிரூபணம் செய்துள்ளது. இதற்காக தான் அதன் அதிகபட்ச வேகத்தை டீசராக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மீது ஒரு நம்பிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications









