ஒன்னு, ரெண்டு இல்ல 3 பேர் எர்டிகாவுக்கு குறி வச்சிருக்காங்க! என்ன நடக்கப்போகுதோ?
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு போட்டியாக மார்கெட்டில் 3 எம்பிவி கார்கள் அடுத்தடுத்து களம் இறங்கவுள்ளன. சிட்ரோன், நிஸான், டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் எர்டிகா மார்கெட்டிற்கு குறி வைத்து தலா ஒரு காரை திட்டமிட்டு வருகின்றன. இந்த கார்கள் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் எம்பிவி செக்மெண்டில் ஆட்டி படைத்து வருகிறது. குறைவான விலை, அதிக வசதிகள் நிறைந்த காராக இருப்பதால் குடும்பத்துடன் இருக்கும் பலர் இந்த காரை தான் தங்கள் விருப்பமாகத் தேர்வு செய்கின்றனர். இந்த கார் மார்கெட்டில் தற்போது ரூ8.35 லட்சம் முதல் ரூ12.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த மாருதி எர்டிகா காருக்கு அதே செக்மெண்டில் போட்டியாகப் பல கார்கள் இருந்தாலும் விலை அதிகமாக இருப்பதால் தனிக்காட்டு ராஜாவாக இருந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக 3 நிறுவனங்கள் எம்பிவி கார்களை தயார் செய்து வருகின்றன. அதைப் பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.
சிட்ரோன் 7- சீட்டர் எம்பிவி : சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரின் அடிப்படையில் 3 வரிசை சீட்டர் கொண்ட காரை உருவாக்கி வருகிறது. இந்த காருக்கு சிட்ரோன் நிறுவனம் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் என பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் செடாலின்டீஸ் சிஎம்பி ஆர்க்கிடெக்ஷரில் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் பேஸ் வேரியன்ட் மாருதிஎர்டிகா காருக்கு போட்டியாகவும் டாப் வேரியன்ட் கியா கேரன்ஸ் காருக்க போட்டியாகவும் களம் இறங்கும்.
இந்த காருக்கான இன்ஜின் குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது சிட்ரோன் நிறுவனத்திடம் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் பொருத்தப்படலாம். லோயர் வேரியன்டிற்கு 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸான் 7-சீட்டர் எம்பிவி : நிஸான் நிறுவனம் தனது புரோட்ஃபோலியோவை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 2 எஸ்யூவி மற்றும் 1 எம்பிவி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போக ஒரு எலெக்ட்ரிக் காரும் விற்பனையாகி வருகிறது. இதில் எம்பிவி காரை பொருத்தவரை 7 சீட்டர் ரெனால்ட் டிரைபர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய எம்பிவி கார் சிஎம்எஃப்-ஏ+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை நிஸான் மேக்னைட் காரின் டிசைனை ஒத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ரூமியான்: டொயோட்டா நிறுவனம் ரூமியான் என்ற பெயரைக் கடந்த 2021ம் ஆண்டு பதிவு செய்ததது. ஆனால் இந்த காரை எப்பொழுது வெளியிடும் என்ற தகவல் இல்லை. ஆனால் மாருதி - டொயோட்டா இடையே உள்ள ஒப்பந்தப்படி மாருதி எர்டிகா காரின் ரீபேட்ஜ் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் வெளியிடுவது பாக்கியுள்ளது. இந்த காருக்கு இந்த ரூமியான் என்ற பெயரை வைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த கார் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பு எர்டிகா காரை போல இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இதில் முன்பக்கம் வித்தியாசமான கிரில் ஹெட்லைட், ரிவர்ஸ்டு ரியர் செக்ஷன் ஆகிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15சி டூயல் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 103 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், கியர் பாக்ஸை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்படும்.


Click it and Unblock the Notifications








