இந்தியாவுல எங்கே தேடினாலும் இப்படியொரு ஃபோக்ஸ்வேகன் காரை பார்க்க முடியாது!! இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ (Volkswagen Polo GTI) கார் ஒன்று இந்தியாவில் அதிகப்பட்சமாக சுமார் 340 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெற்று இயங்கும் வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை போலோ காரை பற்றிய கூடுதல் விபரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளவில் மிகவும் ஸ்டைலிஷான ஹேட்ச்பேக் கார் என்று பார்த்தால், அதில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகனின் போலோ ஜிடிஐ காரை சொல்லலாம். இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த வழக்கமான ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் செயல்படுதிறன்மிக்க வெர்சனாக போலோ ஜிடிஐ விற்பனை செய்யப்பட்டது. மேலும், வழக்கமான போலோ காருடன் தோற்றத்திலும் இந்த கார் வித்தியாசப்படுகிறது.

340bhp modified volkswagen polo gti

குறிப்பாக, போலோ ஜிடிஐ காரில் 3-கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதாவது, முன் இருக்கை பயணிகளுக்காக இரு கதவுகள், பின் இருக்கை பயணிகளுக்காக ஒரு பின்பக்க கதவு ஆகும். இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் 2016இல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இந்த 3-டோர் ஹாட் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.30 இலட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

போலோ ஜிடிஐ காரில் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.8 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகிறது. ஆனால், போலோ ஜிடிஐ காரை பயன்படுத்திவரும் நபர் ஒருவர் தனது காரை அதிகப்பட்சமாக 340 பிஎச்பி வரையிலான என்ஜின் ஆற்றலை பெறக்கூடிய வகையில் மாடிஃபை செய்துக் கொண்டுள்ளார்.

340bhp modified volkswagen polo gti

இந்தியாவில் மாடிஃபை செய்யப்பட்ட முதல் போலோ ஜிடிஐ கார் இது என கூறப்படுகிறது. 340 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறக்கூடிய வகையில், இந்த போலோ ஜிடிஐ காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால், இந்த காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் போலோ ஜிடிஐ கார்களில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வந்தது.

மிக விரைவாக கியர்களை மாற்றுவது டிஎஸ்ஜி கியர்பாக்ஸின் சிறப்பம்சமாகும். ஆனால், இந்த குறிப்பிட்ட மாடிஃபை போலோ ஜிடிஐ காரில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் போலோ ஜிடிஐ காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கடைசி வரையில் இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

340bhp modified volkswagen polo gti

இந்த குறிப்பிட்ட போலோ ஜிடிஐ கார் ஓனருக்கு தனது காரின் இயக்க ஆற்றல் போதவில்லை. இதன் காரணமாகவே, மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக காரின் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே, 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் செட்-அப் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

காரின் டிரான்ஸ்மிஷன் செட்-அப்பை மாற்றியது மட்டுமின்றி, இந்த குறிப்பிட்ட போலோ ஜிடிஐ காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கங்களில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. காரின் உட்பக்க டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் காராக இருந்து மேனுவல் காராக மாற்றப்பட்டு உள்ளதால் காரில் மூன்றாவதாக ஒரு பெடல் சேர்க்கப்பட்டுள்ளது.

340bhp modified volkswagen polo gti

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ஒரு ஃபோக்ஸ்வேகன் போலோ காரை காண்பது அரிது. ஏனெனில், காரின் பவர் அப்படியே டபுள் மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 340 பிஎச்பி ஆற்றலில் போலோ காரை ஓட்டினால் சூப்பராக இருக்கும். மேலும் அதற்கேற்ப காரின் தோற்றத்தையும் மெருக்கேற்றி உள்ளனர். ஆகையால், மற்ற போலோ கார்களுடன் ஒப்பிடுகையில் இது தனித்துவமான போலோ ஜிடிஐ கார் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 19, 2023, 19:44 [IST]
English summary
340bhp modified volkswagen polo gti car check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X