இந்த தீபாவளிக்கு கார் வாங்கி காசை வீணாக்கிடாதீங்க! பொங்கலுக்கு புது கார் வாங்க பிளான் பண்ணுங்க!

இந்த தீபாவளிக்கு நீங்கள் கார் வாங்கும் ஐடியாவில் இருந்தால் கொஞ்சம் யோசிங்கள் பொங்கலுக்கு கார் வாங்குவது தான் தற்போது பெஸ்ட் ஐடியா ஏன் என கீழே காணலாம்.

டாடா, மஹிந்திரா, டொயோட்டா மற்றும் ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்கள் எஸ்யூவி காரர்களை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளனர். நீங்கள் தீபாவளிக்காக கார் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருந்தால் கொஞ்சம் வெயிட் பண்ணலாம். உங்களுக்கு நல்ல காரை வாங்க வாய்ப்புள்ளது. இப்படியாக அடுத்த 2-3 மாதங்களில் வரவுள்ள கார்களை பற்றி இங்கு விரிவாக காணலாம்.

upcoming suv cars

பஞ்ச் இவி: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024ஆம் ஆண்டை பஞ்ச் இவி அறிமுகத்துடன் துவங்கப் போகிறது. சமீபத்தில் தான் இந்நிறுவனம் நெக்ஸான் காரை அப்டேட் செய்து வெளியிட்டது. அதன் பின்பு தற்போது ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்ததாக தனது இவி கார்களை பலப்படுத்தும் விதமாக பஞ்ச் இவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இ இது இவி கார் மார்க்கெட்டில் சிட்ரோன் இசி3 காருக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இந்த கார் நெக்ஸான் இவி காரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming suv cars

டாடா பஞ்ச் இவி கார் குறித்த சில ஸ்பை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அதை பார்க்கும்போது இந்த காரின் சார்ஜிங் பாயிண்ட் காரின் முன் பக்கம் உள்ள ஃபென்டர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த காரில் இரண்டு பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் இந்த காரை 350 கிலோமீட்டர் வரை எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் ஏகப்பட்ட அப்டேட்கள் வர உள்ளன. முக்கியமாக நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெறும்.

upcoming suv cars

மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ்: மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் தனது பொலிரோ நியோ பிளஸ் ஆம்புலன்ஸ் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இதில் பயணிகள் கார் வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 7 மற்றும் 9 சீட்டர் காராக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இன்ஜினை பொறுத்தவரை 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம் ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த கார் டியூவி300 பிளஸ் காரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்கார்பியோ கிளாசிக்கிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்: மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் கார்களை பகிர்ந்து வருகின்றன. அதன்படி மாருதியின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரில் வெளியிட உள்ளது. இதில் மாருதி ஃபிராங்க்ஸ் காரில் இருந்து வெகு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட உள்ளன.

உட்புறத்தில் பெரும்பாலும் மாருதி ஃபிராங்க்ஸ் காரை போலவே இந்த டைசர் காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ சார்ஜர் பூஸ்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்ஸ் கூர்கா: ஃபோர்ஸ் நிறுவனம் தனது கூர்கா காரை பல்வேறு வெர்ஷன்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கார் தயாராகும் பிளாட்ஃபார்ம் அதிக பிளக்ஸிபிலிட்டி கொண்ட பிளாட்பார்மாக இருப்பதால் இப்படியாக பல்வேறு வெர்ஷன் கூர்கா கார்கள் அறிமுகமாகி வருகிறது. அதில் ஒன்றாக 5 டோர் கொண்ட ஃபோர்ஸ் குர்கா கார் விரைவில் அறிமுகமாக உள்ளது.

தற்போது உள்ள 3 டோர் ஃபோர்ஸ் கூர்கா காரை விட இந்த 5 டோர் கூர்கா கார் அதிக பிராக்டிகல் அம்சம் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 2.6 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை மெஸ்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தான் தயாரித்து ஃபோர்ஸ் நிறுவனத்திற்கு வழங்குகிறது. இதே இன்ஜின் தான் 3 டோர் கூர்கா காரிலும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் தீபாவளியை ஒட்டி போனஸ் வந்ததும் கார் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள், தற்போது கார் வாங்குவதைவிட இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்தால் மேலே உள்ள பட்டியலில் உள்ள கார்கள் எல்லாம் விற்பனைக்கு வந்து விடும். அப்பொழுது உங்களுக்கு பிடித்த காரை நிச்சயம் வாங்கி போடலாம். தீபாவளிக்கு கார் வாங்குவதை விட பொங்கலுக்கு கார் வாங்குவது தான் தற்போதைய நேரத்தில் பெஸ்டான ஐடியா.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 18, 2023, 12:03 [IST]
English summary
4 upcoming suv launches in india within 2 3 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X