கார் மார்க்கெட்டில் ஓர் சாம்ராஜ்யமே நடந்து முடிந்துள்ளது!! மாருதி 800, எத்தனை பேருக்கு பிடிக்கும்?

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துக் கொண்டே செல்கிறது. இருந்தாலும் சில கார்களின் பெயர்கள் மட்டும் நம் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும். அவ்வாறு நம்மை கவர்ந்த கார் தான் மாருதி 800. அதிகம் உழைக்கும் நம்பகத்தன்மையை கொண்டிருந்ததால் கஸ்டமர்கள் ஷோரூம்களை தேடி வந்தனர்.

ஒரு சமயத்தில் கார்கள் என்றாலே பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய ஒன்று என்ற நிலை இருந்தது. அதனை மாற்றிய புரட்சிக்கர கார்களுள் ஒன்றாக மாருதி 800-ஐ நிச்சயமாக சொல்லலாம். மிடில்-கிளாஸ் மக்களும் ஓர் மூடிய இயங்கும் அரங்கத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தனர். குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக மாருதி 800 காரின் அளவு சிறியதாக கொடுக்கப்பட்டது.

40-year-old maruti 800 Showcased

யார் வேண்டுமானாலும் அளவில் சிறியதாக கார்களை உருவாக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை இருந்தால்தான் அந்த காரால் மார்க்கெட்டில் ஜெய்க்க முடியும். அதனை திறம்பட கையாண்ட கார் மாருதி 800. இத்தகைய காரை மாருதி சுஸுகி நிறுவனம் முதன்முதலாக 1983 டிசம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இந்த 2023 டிசம்பர் 14ஆம் தேதியோடு, இந்திய கார்கள் மார்க்கெட்டை புரட்டிப்போட்ட கார் விற்பனைக்கு வந்து 40 வருடங்கள் உருண்டோடி விட்டன. விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 3- 4 வருடங்களில் மாருதி 800 கார்களின் உற்பத்தி எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்துவிட்டது. 10 வருடங்களில் 5 இலட்ச மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. அடுத்த 5 இலட்ச மாருதி கார்கள் அடுத்த 4 வருடங்களிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விட்டன.

40-year-old maruti 800 Showcased

அதாவது, 1997ஆம் ஆண்டில் மாருதி 800 கார்களின் உற்பத்தி எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது. அடுத்த 5 இலட்ச மாருதி 800 கார்கள் உற்பத்தி இன்னும் விரைவாக 3 வருடங்களிலேயே 2000ஆம் ஆண்டில் கடந்தது. அதேபோல், அடுத்த 10 இலட்ச மாருதி 800 கார்கள் 6 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. அதாவது, 2006ஆம் ஆண்டில் மாருதி 800 கார்களின் உற்பத்தி எண்ணிக்கை 25 இலட்சத்தை கடந்தது.

இதை ஏன் கூறுகிறோம் என்றால், அந்த அளவிற்கு மக்கள் போட்டிப் போட்டு வாங்கியதினால் மாருதி சுஸுகி நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், 25 இலட்சத்தை தாண்டிய பிறகு மாருதி 800 கார்களின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விற்பனைக்கு வந்த மாடர்ன் கார்கள் ஜொலிக்க ஆரம்பித்தன.

40-year-old maruti 800 Showcased

ஒருவர் எத்தனை காலத்திற்குதான் ராஜாவாக இருக்க முடியும்? 2014 ஜனவரி 18ஆம் தேதி அன்று மாருதி 800 கார்களின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளப்பட்டது. அந்த நாள் வரையில், மொத்தமாக 26.8 லட்ச மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதாவது, கடைசி 8 வருடங்களில் 6.8 லட்ச மாருதி 800 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.

இருப்பினும், அப்போதும் கூட மாதத்திற்கு சராசரியாக 7000 - 8000 மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக, மாருதி 800 கார் 31 வருடங்கள் உற்பத்தியில் இருந்தது. இந்தியாவிற்கான கார் என கூறினாலும், இந்த 31 வருடங்களில் சுமார் 2.4 லட்ச மாருதி 800 கார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

40-year-old maruti 800 Showcased

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட்டில் இந்தியா முதல் உலக கோப்பையை வென்ற போது அறிமுகம் செய்யப்பட்ட கார், இடையில் சச்சின் டெண்டுல்கரின் முதல் காராக இடம்பிடித்து, இந்தியா 2வது உலக கோப்பையை வென்ற பிறகும் சில காலத்திற்கு விற்பனையில் இருந்துள்ளது. மாருதி 800 கார் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு 40 வருடங்கள் ஆனதை நினைவுக்கூரும் விதமாக டெல்லியில் உள்ள மாருதியின் தலைமையகத்தில் பழைய மாருதி 800 கார்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Source: NamasteCar/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2023, 18:30 [IST]
English summary
40 year old maruti 800 showcased at maruti suzuki headquarters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X