மொத்த இந்திய மார்க்கெட்டையும் அடுத்து கலக்க போகின்ற மாருதி கார்... கேமராவில் சிக்கியது!! படங்கள் வைரல்!

விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புத்தம் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் இந்தியாவில் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் முற்றிலும் புதிய 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை உலகளவில் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் இந்த நவம்பர் மாத துவக்கத்தில் வெளியீடு செய்தது. புதிய ஸ்விஃப்ட் காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனம் அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறது.

4th generation maruti suzuki swift

இந்த நிலையில், முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் புதிய ஸ்விஃப்ட் கார் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஸ்பை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை வைத்து பார்க்கும்போது, புதிய 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், சோதனை செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரின் தோற்றம் டோக்கியோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காருடன் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது. தற்போதைய ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடுகையில், புதிய ஸ்விஃப்ட் காரில் பின்பக்க பம்பர் மற்றும் டெயில்லேம்ப்களின் வடிவம் மாற்றப்பட்டு உள்ளது.

4th generation maruti suzuki swift

சில தினங்களுக்கு முன் இதேபோன்று ஒரு ஸ்விஃப்ட் காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. அந்த படங்களில், காரில் இருந்த முன்பக்க க்ரில் மற்றும் கோண வடிவிலான ஹெட்லேம்ப்கள் கிட்டத்தட்ட க்ளோபல் ஸ்விஃப்ட் காரை ஒத்துக் காணப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் சோதனை ஸ்விஃப்ட் காரில் கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் மற்றும் வழக்கமான கதவு கைப்பிடிகள் உள்ளன.

இதே டிசைனிலான சக்கரம் மற்றும் கதவு கைப்பிடிகளை தான் புதிய ஸ்விஃப்ட் காரிலும் எதிர்பார்க்கிறோம். மற்றப்படி, தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் காரின் உட்பக்கத்தை காண முடியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய ஸ்விஃப்ட் காரில் ரீ-டிசைனில் டேஸ்போர்டை மாருதி சுஸுகி வழங்கி இருக்கும். மாருதி சுஸுகி பலேனோ, பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் கார்களில் இருப்பதை போன்றதான டேஸ்போர்டை புதிய ஸ்விஃப்ட் காரிலும் எதிர்பார்க்கிறோம்.

4th generation maruti suzuki swift

இப்போது இருப்பதை காட்டிலும் புதிய டேஸ்போர்டை இன்னும் வளைவானதாக, ஏசி வெண்ட்ஸ் மற்றும் செண்டர் கன்சோல் பகுதிகளுக்கான இடவசதி உடன் மாருதி சுஸுகி வழங்கும். அத்துடன், புதிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் புதிய ஸ்விஃப்ட்டில் எதிர்பார்க்கலாம். அதேபோல், 9-இன்ச்சில் நன்கு பெரியதாக ஸ்மார்ட்பிளே புரோ+ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இந்த காரில் எதிர்பார்க்கிறோம்.

புதிய ஸ்விஃப்ட் காரின் விலைமிக்க வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். மேலும், ஸ்விஃப்ட்டின் டாப் வேரியண்ட்களில் அடாஸ் (ADAS) வசதியும் கொடுக்கப்படலாம். க்ளோபல் மார்க்கெட்டில் புதிய ஸ்விஃப்ட் காரை புத்தம் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இசட்-சீரிஸ் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த என்ஜினை இந்தியாவிலும் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துமா என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பேர் வாங்கக்கூடிய கார்களுள் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். இதனாலேயே, ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் மாருதி சுஸுகி செயல்படுகிறது. ஆதலால், புதிய 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாடர்ன் தரத்தில், அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்களுடன் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 23:38 [IST]
English summary
4th generation maruti suzuki swift spied in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X