சிஎன்ஜி கார்களை நிறைய பேர் வாங்க விரும்புறாங்க! இந்த 2023இல் மட்டும் இத்தனை கார் மார்க்கெட்டுக்கு வந்துருக்கா!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்று எரிபொருள் கார்களை தேடும் முயற்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டதே சிஎன்ஜி கார்கள் ஆகும். இவற்றில் பெட்ரோல் என்ஜின்கள் தான் இருக்கும் என்றாலும், பெட்ரோலை நிரப்ப தேவையில்லை. அதற்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை நிரப்பி வேண்டி இருக்கும்.

இதனால் பெட்ரோலுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பது குறையும் என்பதால் மத்திய அரசாங்கம் சிஎன்ஜி வாகனங்களில் தீவிரம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, சிஎன்ஜி வாகனங்களில் சற்று கூடுதலாகவே மைலேஜை பெறலாம். வழக்கம்போல் இந்த 2023ஆம் வருடத்திலும் நிறைய புது சிஎன்ஜி கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

cng cars launches in 2023

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): இந்தியாவின் பிரபலமான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுள் ஒன்று. மேலும், சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் கிடைக்கும் மிகவும் சில கார்களுள் ஒன்று பிரெஸ்ஸா ஆகும். பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. சிஎன்ஜி மோடில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎஸ் மற்றும் 121.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

cng cars launches in 2023

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா அல்ட்ராஸ் கார் 2020 ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டாலும், அல்ட்ராஸின் சிஎன்ஜி வெர்சன் கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து இந்த வருடத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பெரிய சிலிண்டராக வழங்கப்படாமல், டாடா சிஎன்ஜி கார்களில் இரு சிலிண்டர்கள் சிறிய அளவுகளில் கொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அல்ட்ராஸ் சிஎன்ஜி காரிலும் பூட் ஸ்பேஸ் பகுதியில் நிறைய இடவசதி கிடைக்கிறது.

cng cars launches in 2023

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்/ மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா: இவை இரண்டும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும். அதாவது, பிரெஸ்ஸா காரை விட இவை அளவில் பெரியதாக இருக்கின்றன. இவை இரண்டும் சந்தைக்கும் புதியவை. இவை இரண்டும் சிஎன்ஜி பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன. குறிப்பாக, மாருதி கிராண்ட் விட்டாரா இந்தியாவின் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் முதல் காராக சிஎன்ஜி ஆப்ஷனை பெற்றது.

cng cars launches in 2023

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா நிறுவனம் கடைசியாக அறிமுகப்படுத்திய சிஎன்ஜி கார், பஞ்ச் சிஎன்ஜி ஆகும். மற்ற டாடா சிஎன்ஜி கார்களை போல், பஞ்ச் சிஎன்ஜி காரிலும் ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. அதேபோல், டாடா சிஎன்ஜி கார்களில் நேரடியாக சிஎன்ஜி மோடில் காரை ஸ்டார்ட் செய்ய முடியும். பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

cng cars launches in 2023

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் எக்ஸ்டர் ஆகும். பஞ்ச் சிஎன்ஜி காருக்கு போட்டியாக விளங்கும் விதமாக, எக்ஸ்டர் உடனடியாகவே சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எக்ஸ்டர் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஹூண்டாய் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.24 இலட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆதலால், தைரியமாக சிஎன்ஜி கார்களை வாங்கலாம். மேற்கூறப்பட்ட 5 சிஎன்ஜி கார்கள் இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆதலால், இவற்றில் தொழிற்நுட்ப அம்சங்களும் சிறப்பானதாக கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 10:42 [IST]
English summary
5 cng cars which launched in this 2023 year check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X