ரெடி கேஷ் கொடுத்தாலும் சரி லோன் போட்டாலும் சரி இந்த காரை நீங்க வாங்கியே ஆகனும் ஏன் தெரியுமா?

மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் புதிதாக வரப்போகும் மாருதி ஸ்விப்ட் காரில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறப் போகிறது? என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது? என்பதை குறித்த டாப் 5 தகவலை தான் இங்கே காணப் போகிறோம்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஷிப்ட் கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு நம்பிக்கையும் கவனத்தையும் வைத்துள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இந்த காரை மாருதி நிறுவனம் அப்டேட் செய்து புதிய காராக வெளியிட உள்ளது.

2024 new gen swift update

தற்போது உள்ள ஸ்விஃப்ட் காரில் இருந்து பல முக்கிய மாற்றங்களை வரப்போகும் புதிய தலைமுறை ஷிப்ட் கார் பெற உள்ளது. இப்படியாக புதிதாக வர உள்ள காரில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ஜப்பான் மார்க்கெட்டில் இந்த மாத இறுதியில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் அறிமுகமாகிறது. கிட்டத்தட்ட அதே போன்ற கால்தான் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி விரிவாக காணலாம்.

வெளிப்புறத் தோற்றம்: ஜப்பான் மார்கெட்டுக்கு அறிமுகமாக உள்ள புதிய தலைமுறை ஷிப்ட் கார் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்புறத் தோற்றத்தை பார்க்கும் போது தற்போது உள்ள மாடலில் அதே வடிவமைப்பு தான் இருக்கிறது. இதில் சில முக்கியமான மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. பின்பக்க தோலில் உள்ள கைப்பிடி ஜன்னலுக்கு அருகே இல்லாமல் பழைய இடத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

2024 new gen swift update

இதன் பானட் பகுதி கொஞ்சம் மஸ்குலராக இருக்கிறது. இதன் கிரில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர் கொஞ்சம் ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கிறது. மேலும் காரில் கேரக்டர் லைன்கள் ஸ்ட்ராங்காக கொடுக்கப்பட்டு, தற்போது அதிக மஸ்குலராகவும் ஸ்போட்டியராகவும் இருக்கும் படி இந்த புதிய ஸ்விஃப்ட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புற தோற்றம்: காரின் உட்புறத்தை பொருத்தவரை ஃபிராங்க்ஸ் மற்றும் புதிய பிரெஸ்ஸா ஆகிய கார்களில் உள்ள அதே உட்புற வடிவமைப்பு தான் இந்த புதிய ஸ்விஃப்ட் காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் சீட்டுகளும் அதே போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் உள்ளே 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

2024 new gen swift update

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளை ஆகிற்வற்றை சப்போர்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹெட்லைட், வயர்லெஸ் சார்ஜிங், ஹெட்ஸ்அப் டிஸ்ப்ள ஆகிய அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக இதன் ஸ்போர்டியர் இன்ஜின் ஆப்ஷனில் காரின் உட்புறம் சிவப்பு நிற ஆக்ஸெண்ட்டில் சீட் மற்றும் ஸ்டியரிங் வீல்களில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்ஜின்: புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரில் தற்போதைய தலைமுறையில் உள்ள அதே 1.2லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 90பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என்றும் இதில் சிஐஜி வர்ஷனும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இது மட்டுமில்லாமல் மாருதி நிறுவனம் அதிக மைலேஜ் தரும் இன்ஜினாக இருக்கும் அதே நேரத்தில் சிறப்பான பெர்பார்மென்ஸையும் வெளிப்படுத்தும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன . 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் ஹைபிரிட் சிஸ்டம்

இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஆப்ஷன் கொண்ட இன்ஜினும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட கார் அறிமுகமானால் அதன் மைலேஜ் வெகு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றால் கார் சிறந்த பெர்பார்மன்ஸ் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு: புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரில் 6ஏர் பேக்குகள் இஎஸ்சி மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகியன அனைத்து வேரியண்டுகளிலும் இடம்பெறும் வகையில் வழங்கப்படும் என்றும், இதுபோக ஹைபிம் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐஎஸ்ஓ பிக்ஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், கோலிஷன் மிட்டிகேட்டிங் பிரேக்கிங், ஹில் ஹேல்டு அசிஸ்ட், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் கிராஷ் டெஸ்டில் சிறந்த புள்ளிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் இந்த மாத இறுதிக்குள் ஜப்பானில் நடக்கும் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்க்கெட் வரும்போது கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ ஆகிய கார்களுக்கு போட்டியாக களத்தில் இறங்க உள்ளது. இந்த காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் வந்தால் ஸ்விஃப்ட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 16:59 [IST]
English summary
5 facts to understand about the upcoming swift debut
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X