வந்ததும் தெரியல, போனதும் தெரியல!! கஸ்டமர்ஸை ஈர்க்காமல் மார்க்கெட்டில் காணாமல் போன 5 மஹிந்திரா கார்கள்!

மஹிந்திரா (Mahindra), இந்த பெயரை கேட்டாலே 'வெற்றி' என்பதுதான் பொருள் என்பதுபோல் தோன்றும். அந்த அளவிற்கு பல்வேறு துறைகளில் மஹிந்திரா பிராண்ட் கொடிக்கட்டி பறக்கிறது. ஆட்டோமொபைல் துறையிலும் மஹிந்திரா சமீப காலத்தில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, எஸ்யூவி கார்களை இந்த நிறுவனம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறது.

இதனாலேயே நம்மில் சிலர், மஹிந்திரா கார்கள் என்றாலே ஸ்கார்பியோ போன்றதான கம்பீரமான எஸ்யூவி கார்கள் மட்டும்தான் என நினைத்துக் கொண்டு இருப்போரும் இருக்கின்றனர். ஆனால், கடந்த காலங்களில் செடான் & ஹேட்ச்பேக் ரக கார்களையும் மஹிந்திரா இந்திய சந்தையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தது. அவற்றுள் சில தோல்வியடைந்த கார்களும் இருக்கின்றன. அவ்வாறு இந்தியர்களை கவராமல் போன 5 மஹிந்திரா கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

5 mahindra flop cars

வெரிடோ வைப்: 2013இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா வெரிடோ ஓர் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். விலையுயர்ந்த கூபே-ஸ்டைல் கார்களை போன்றதான தோற்றத்தை கொண்டிருந்த போதிலும் இந்த காரால் ஆரம்பத்தில் இருந்ததுபோல் பின்னர் காலத்தில் விற்பனையாக முடியவில்லை. இருப்பினும், தட்டித்தட்டி 2019 வரையில் 6 ஆண்டு காலத்திற்கு வெரிடோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெரிடோ வைப் காரில் 1.5 லிட்டர் கே9கே ஐ4 என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டது. மஹிந்திரா வெரிடோ காரின் நீளம் 3,991மிமீ ஆக இருந்தது. இந்த காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,630மிமீ ஆகும். இ-வெரிடோ என்ற பெயரில் இந்த காரின் எலக்ட்ரிக் வெர்சனை கூட விற்பனை செய்ய மஹிந்திரா முயற்சித்தது. ஆனால், இந்த எலக்ட்ரிக் காரின் விற்பனையும் பெரியதாக போகவில்லை.

5 mahindra flop cars

நுவோ ஸ்போர்ட்: இப்படியொரு பெயர் கூட நம்மில் பலருக்கு ஞாபகம் இருக்காது. முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா குவான்டோ காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாக நுவோ ஸ்போர்ட் சந்தையில் அறிமுகமாகியது. 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் 2020 வரையில் விற்பனையில் இருந்துக் கொண்டுதான் இருந்தது. நுவோ ஸ்போர்ட்டின் சிறப்பம்சமே இந்த காரில் 7 இருக்கைகள் வழங்கப்பட்டதுதான்.

5 mahindra flop cars

குவாண்டோ: நுவோ ஸ்போர்ட்டுக்கு முன்பு அந்த இடத்தில் விற்பனையில் இருந்த மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி கார் குவாண்டோ ஆகும். 2012இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரும் 7 இருக்கைகளை கொண்டது. மாருதி வேகன்ஆர் போல நன்கு நிமிர்ந்த தோற்றம் கொண்ட இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.

5 mahindra flop cars

அல்டுராஸ் ஜி4: சொகுசு கார்கள் மார்க்கெட்டில் நுழைய மஹிந்திரா முயற்சி செய்துப் பார்த்த கார் இதுவாகும். ஆனால், அதிக இலட்சங்கள் கொடுத்து மஹிந்திரா காரை வாங்க நம் நாட்டில் நிறைய பேர் தயாராக இல்லை. தென் கொரிய காரான ஸ்ஸாங்யோங் ரெக்ஸ்டனை அப்படியே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காரான அல்டுராஸ் ஜி4-இன் உற்பத்தி 2018இல் இருந்து 2022 வரையில் இருந்தது.

5 mahindra flop cars

கேயூவி100 நெக்ஸ்ட்: மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடைசியாக விற்பனை நிறுத்தப்பட்ட கார் இதுவாகும். இந்திய அளவிலேயே, முதல் மைக்ரோ-எஸ்யூவி கார் மஹிந்திரா கேயூவி100 ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தான் கேயூவி100 நெக்ஸ்ட். 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட கேயூவி100 நெக்ஸ்ட் காரின் விற்பனை இந்த 2023இல்தான் நிறுத்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை கார்கள் தோல்வியுற்று இருந்தாலும், இப்போது அதை பற்றியெல்லாம் மஹிந்திரா கவலைப்படாது. ஏனெனில், அவ்வளவு பிசியாக ஸ்கார்பியோ, பொலிரோ போன்ற எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், மேலே கண்ட தோல்வியுற்ற கார்களை பார்த்ததில் இருந்து ஒன்று புலப்படுகிறது, மஹிந்திரா நிறுவனம் எந்த காராக இருந்தாலும் முடிந்தவரையில் 7 இருக்கைகளை வழங்க முயற்சிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 14, 2023, 23:59 [IST]
English summary
5 mahindra flop cars in indian market history check all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X