புதுசா கார் வாங்கும் பிளானில் இருந்தவங்களுக்கு இந்த 2023ஆம் வருஷம் சிறப்பா இருந்துச்சு! டாப்-5 எஸ்யூவி கார்கள்

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கார்கள் நிறுவனங்கள் புதிய, புதிய வடிவங்களில் எஸ்யூவி கார்களை, வெவ்வேறான விலைகளில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.

அதாவது, அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் பெற வேண்டும் என்பதுதான் கார் நிறுவனங்களின் டார்க்கெட்டாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வருடத்திலும் கணிசமான எண்ணிக்கையில் புதிய எஸ்யூவி கார்கள் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இந்த வரிசையில், இந்த 2023ஆம் வருடத்திலும் நிறைய எஸ்யூவி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

suv cars launches in 2023

ஹோண்டா எலெவேட் (Honda Elevate): இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹோண்டா இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்திய கார் எலெவேட் ஆகும். 5 பயணிகள் தாராளமாக அமர்ந்துக் கொண்டு, தேவையான பொருட்களை வைத்துக் கொண்டு பயணிக்கக் கூடியதாக எலெவேட் காரை ஹோண்டா உருவாக்கி உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரையில் 20,000க்கும் அதிகமான எலெவேட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

suv cars launches in 2023

மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னியை இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்தது. மேலும், அப்போது இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்திற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. ஜிம்னி வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.12.74 இலட்சமாக உள்ளது. விற்பனையில் ஜிம்னிக்கு மஹிந்திரா தார் போட்டியாக உள்ளது.

suv cars launches in 2023

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள காஸ்பர் காரை இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகப்படுத்தும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற புதிய பெயரில் மைக்ரோ-எஸ்யூவி காரை இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தியது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் இந்த காருக்கு விற்பனையில் டாடா பஞ்ச் போட்டியாக உள்ளது.

suv cars launches in 2023

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி வாகனத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியீடு செய்த கார் ஃபிரான்க்ஸ் ஆகும். இந்த காருக்கும் முன்பதிவுகள் ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

suv cars launches in 2023

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் (Citroen C3 Aircross): சில வருடங்களுக்கு முன்பு சி5 ஏர்கிராஸ் கார் மூலமாக இந்திய சந்தையில் களம்புகுந்த சிட்ரோன் நிறுவனம் அதன்பின் சி3 என்ற காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, சி3 காரின் ஏர்கிராஸ் மாடலும் இந்தியாவில் இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 3 சிலிண்டர் என்ஜினை பெறும் இந்த பிரஞ்சு-ஸ்டைல் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.9.99 லட்சமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய எஸ்யூவி காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் எனில், இந்த ஐந்தில் ஒரு எஸ்யூவி காரை தாராளமாக வாங்கலாம். ஏனெனில் இவை சந்தைக்கு புதியவை என்பதால், மாடர்ன் தொழிற்நுட்பங்களை அப்டேட்டாக பெறலாம். மேலும், இந்த எஸ்யூவி கார்கள் ஐந்தும் மிடில்-கிளாஸ் மக்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 23:36 [IST]
English summary
5 new suv cars which launched in 2023 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X