ஒடிசால என்னதான் நடக்குது? ரயில் விபத்தைபோல அரங்கேறிய மிக மோசமான கார் விபத்து! நல்ல விஷயம் ஒன்னு நடந்திருக்கு!
இதுக்காகவே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை வாங்கலாம் போல என கூறும் அளவிற்கு அந்த கார் விபத்தில் மிக சூப்பராக செயல்பட்டு இருக்கின்றது. காரின் மேற்கூரைய பக்கவாட்டு பகுதி என அனைத்தும் முழுவதுமாக உரு தெரியாமல் அழிந்து நிற்கின்ற நிலையிலும் அது அதில் பயணித்தவர்களைக் காப்பாற்றி இருக்கின்றது.
டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளைப் போலவே மஹிந்தரா நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதிக பாதுகாப்பானவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இந்த அளவிற்கு பாதுகாப்பானதா என்கிற ஆச்சரியத்தையும், கேள்வியையுமே இந்த விபத்து சம்பவம் நமக்கு எழுப்பி இருக்கின்றது. மிக மிக அதீத வேகத்தில் ஸ்கார்பியோ என் வந்ததே இந்த அளவிற்கு மோசமான விபத்தை அது சந்திக்க காரணமாக இருக்கின்றது.

சமீபத்தில் மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறிய ஒடிசா மாநிலத்திலேயே இந்த விபத்து சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது. ஆனால், ரயில் விபத்தைபோல உயிர் பலி இங்கு ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களும் உயிர் தப்பி இருக்கின்றனர். இதுவே அந்த நல்ல விஷயம் ஆகும். மஹிந்திரா என் விபத்தைச் சந்தித்தபோது அக்காரில் இரு பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.
இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்கிற விபரம் துள்ளியமாக தெரியவில்லை. அதேவேளையில், அந்த கார் மணிக்கு 100கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயங்கியதே இவ்விபத்திற்கு காரணம் என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது. இதனாலேயே கார் எந்த பிராண்டுடையது என்பதுகூட தெரியாத வண்ணம் முழுமையாக உருக்குலைந்துக் காணப்படுகின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் அதிக உயரமான கார் மாடல் ஆகும். இதனால் அதீத வேகத்தின் போது திரும்புவதை சமாளிக்க முடிவதில்லை. இந்த நிலையே அக்காரின் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டை இழந்து மரங்களின் மீது தொடர்ச்சியாக மோதியதாகக் கூறப்படுகின்றது.
இதனாலேயே அக்காரின் மேற்கூரை முழுவதுமாக பேப்பரை கிழித்தெடுப்பதுபோதுல் கிழித்தெடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலும், காருக்குள் வந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பி இருக்கின்றனர் என்பதுதான் ஆச்சரியமானதாக அமைந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் இப்போது ஸ்கார்பியோவை இரு விதமான மாடல்களாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஸ்கார்பியோ என் (Scorpio-N) மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) அவை ஆகும். இதில், ஸ்கார்பியோ கிளாசிக் என்பது பழைமை மனம் மாறாத ஓர் மடாலாக உள்ளது. அதாவது, லேசான அப்டேட்டை மட்டும் பெற்று, ஸ்கார்பியோ உருவத்தை அப்படியே தக்க வைக்கப்பட்டு இருக்கும்.
ஆனால், ஸ்கார்பியோ என் அப்படி இருக்காது. இது புதிய தலைமுறை மாடல் ஆகும். பலமடங்கு உருவம் மற்றும் அதி-நவீன வசதிகள் என அனைத்திலும் பிரமாண்டமானதாக இருக்கும். நவீன காலத்திற்கு ஏற்ப இந்த ஸ்கார்பியோவை அப்டேட் செய்து மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இட வசதி, சொகுசு வசதி ஆகியவை மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக அதிகமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போதைய விபத்து சம்பவம் அமைந்திருக்கின்றது. மஹிந்திரா ஸ்கார்பியோ ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். இந்த தரமும் இந்த விபத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப சில காலமாக விபத்துகள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை இந்தியாவை விரைவில் உலகிலேயே அதிகளவில் விபத்துகள் அரங்கேறும் நாடாக மாற்றுவிடுமோ என அஞ்சப்பட வைக்கின்றது. இந்த நிலைக்கு நாம் தள்ளப்படக் கூடாது எனில் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இதனால், நம்மையும் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









