ஹூண்டாய் மூட்டை, முடிச்சை கட்ட வேண்டியதுதான்!! டாடா மோட்டார்ஸின் புது கார்கள் ஒவ்வொன்றும் தரம்...!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்த 2023இல் பல்வேறு புதிய கார்களை சந்தையில் டாடா அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வரிசையில், வருகிற 2024ஆம் ஆண்டிலும் பல்வேறு புதிய கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

அவ்வாறு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் 5 கார்களை பற்றி இங்கே காணலாம். இவற்றில் எஸ்யூவி, ஹேட்ச்பேக் உடலமைப்பை கொண்ட கார்களுடன், புதிய டாடா எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம், வாங்க.

tata cars expected 2024 launch

டாடா கர்வ் கான்செப்ட்: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களுள் கர்வ் எஸ்யூவி கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் கார்களும் அடங்குகின்றன. டாடா கர்வ் கான்செப்ட் கார்கள் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி எலக்ட்ரிக் வெர்சனிலும் வெளிவரவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கூட கர்வ் கான்செப்ட் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

tata cars expected 2024 launch

டாடா பஞ்ச் இவி: டாடா பஞ்ச் எலக்ட்ரிக் காரின் சோதனை மாதிரிகள் ஏற்கனவே சிலமுறை சாலையில் காட்சியளித்துள்ளன. சிட்ரோன் இ-சி3 மற்றும் எம்ஜி கோமெட் எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த டாடா மைக்ரோ-எஸ்யூவி எலக்ட்ரிக் கார் அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய பேட்டரியை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெயினை தவிர்த்து, மற்றவை அனைத்தும் வழக்கமாக பஞ்ச் காரில் வழங்கப்படுவையே புதிய பஞ்ச் இவி காரிலும் கொடுக்கப்படும்.

tata cars expected 2024 launch

டாடா ஹெரியர் இவி: 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹெரியர் எலக்ட்ரிக் காரில் இரட்டை-மோட்டார் செட்-அப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி இந்த புதிய டாடா எலக்ட்ரிக் கார் குறித்த விரிவான விபரங்கள் தற்போதைக்கு இல்லை. ஹெரியர் எலக்ட்ரிக் காரின் ரேஞ்சை 500கிமீ என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். டாடாவின் ஜென்ரேஷன்-2 இவி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் காரில், வழக்கமான ஹெரியர் காருடன் ஒப்பிடுகையில், தோற்றத்தில் சில மாற்றங்கள் இருக்கும்.

tata cars expected 2024 launch

டாடா அல்ட்ராஸ் ரேஸர்: விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் ரேஸர் வெர்சனை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்டிப்படுத்தியது. டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் இந்த காரில் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த புதிய அல்ட்ராஸ் காரில் சன்ரூஃப், கருப்பு நிறத்தில் பொனெட்டையும் எதிர்பார்க்கிறோம்.

tata cars expected 2024 launch

டாடா சஃபாரி இவி: ஹெரியர் எலக்ட்ரிக் காரை தொடர்ந்து, டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் கார். தற்போதைய சஃபாரி காருக்கும், புதிய சஃபாரி எலக்ட்ரிக் காருக்கும் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. ஹெரியர் இவி-இல் இருந்து சில பாகங்கள் சஃபாரி இவி-இலும் வழங்கப்படலாம். சஃபாரி இவி-இன் அறிமுகம் அடுத்த 2024ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 டாடா கார்களும் வருகிற 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என ஆணித்தனமாக கூற முடியாது. ஆனால், இந்த ஐந்தில் சில கார்களாவது குறைந்தப்பட்சம் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படும். இவை மட்டுமின்றி, சியாரா மற்றும் அவென்யூ கான்செப்ட் மாதிரிகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் புது கார்கள் 2025இல் இருந்து அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 8:00 [IST]
English summary
5 tata cars which expected launch in 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X