புதுசா கார் வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா? 6 மாசத்துக்குள்ள இத்தனை கார் வரப்போது! இதுல ஒன்ன வாங்கலாம்!
இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் ஹுண்டாய், கியா, டாடா உள்ளிட்ட பல முக்கியமான நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை களம் இறக்க தயாராக உள்ளன. அந்த கார்களை பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம்.
தற்போது ஆட்டோமொபைல் உலகம் தன்னைத்தானே புதுமையாக புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி எஸ்யூவி கார்கள் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெறுவதால் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து எஸ்யூவி காரர்களை தான் களம் இறக்கி வருகின்றனர். அதன்படி அடுத்த ஆறு மாதங்களில் ஐந்து முக்கியமான எஸ்யூவி கார்கள் களமிறங்க உள்ளது. இந்த கார்கள் பற்றிய தகவல்களை கீழே பட்டியலாக காணலாம்.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: ஹூண்டாய் நிறுவனத்தின் நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரின் இரண்டாம் தலைமுறைகார் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமானது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கார் அப்டேட்டை பெறப்போகிறது. அதன்படி ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரின் வெளிப்புறம் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டிசைன் கொண்டும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் லெவல் 2 அடாப்ஸ் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொறுத்தவரை புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் புதிதாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட்: கியா நிறுவனம் தனது சோனட் காரை ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து 2024-ம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த காரின் உட்புறமும் வெளிப்புறமும் நீங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த கார் முற்றிலும் புதிய வைபை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இந்த காரின் உட்புறத்தில் புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இருக்கும் வகையிலும் இந்த கார் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை அதே இன்ஜின் தான் இருக்கும். மேலும் இந்த கார் குறித்த அடுத்தடுத்த விரிவான தகவல்கள் அடுத்த ஒரு சில நாட்களுக்கு பிறகு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கர்வ் இவி: டாடா நிறுவனம் தனது கர்வ் காரை எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் கொண்ட இரண்டு வெர்ஷனிலும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் எலெக்ட்ரிக் கார் தான் முதலில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பெரிய பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கார் 500 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் காராக உருவாக்கப்படலாம்.
ஏற்கனவே அறிமுகமான டாடா கர்வ் காரின் கான்செப்ட் மாடலை போல தான் அதன் புரோடெக்ஷன் மாடல் காரும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாகவே அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.

டாடா பஞ்ச் இவி: டாடா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக இந்த பஞ்ச் கார்தான் இருக்கிறது. இந்த கார் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் தான் முதன்முறையாக டாடா நிறுவனம் சார்ஜிங் ஃபோர்ட்டை முன் பக்கம் வைத்துள்ளது. மேலும் இந்த காரின் கம்பஷன் இன்ஜின் காருக்கும் எலெக்ட்ரிக் காருக்கும் வித்யாசப்படுத்தும் வகையில் சில டிசைன் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் இரண்டு விதமான பேட்டரி பேக்குகள் இடம் பெற உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 350 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அறிமுகமான நெக்ஸான் இவி காரில் உள்ள ஏகப்பட்ட அம்சங்கள் இன்ஸ்பயர் செய்யப்பட்டு இந்த காரிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்: டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் டைசர் காரை 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் காரின் ரீபேட்ஜ் வெர்ஷனாக டொயோட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட உள்ளது.
இந்த 5 சீட்டர் காரை விட ஒரு படி மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்கள் தயாரிக்கும் ஸ்டைலையே மாற்றி தற்போது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்து வருகின்றனர். கார்களுக்கு மவுசு அதிகமாக இருப்பதால் அதிகம் எஸ்யூவி ரக கார்கள் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் தற்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் அடுத்த ஆறு மாதத்திற்குள் மேலே உள்ள பட்டியலில் கார்கள் எல்லாம் விற்பனைக்கு வர உள்ளன.


Click it and Unblock the Notifications









