ரூ.6 இலட்சம் கையில் இருந்தால் போதும்ங்க!! இதில் ஒரு பெஸ்ட் மைலேஜ் காரை வாங்கிடலாம்!

இந்திய கார்கள் மார்க்கெட்டில் என்ன தான் புதுசு புதுசா மாடர்ன் கார்கள் வந்தாலும், இப்போதும் நம் இந்தியர்கள் பெரும்பாலானோர் காரை வாங்கும்போது உன்னிப்பாக காரின் மைலேஜையும், விலையையும் தான் பார்க்கின்றனர். இதனால், முன்னணி கார் பிராண்ட்கள் அனைத்தும் குறைந்தது ஒரு மைலேஜ் காரை ஆவது குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இந்த வகையில் தற்சமயம் ரூ.6 இலட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் 7 மைலேஜ் கார்கள்...

மாருதி சுஸுகி ஆல்டோ 800: இந்திய சந்தையில் மிக நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார் ஆல்டோ 800 ஆகும். அந்த அளவிற்கு, இந்தியர்களின் மனதில் நீக்காத இடம்பிடித்துள்ள இந்த அளவில் சிறிய மாருதி ஹேட்ச்பேக் கார் ரூ.3.97 இலட்சத்தில் இருந்து விற்பனைக்கு கிடைக்கிறது. ஆல்டோ 22kmpl வரையிலான மைலேஜை வழங்குகிறது. அதுவே, இதன் சிஎன்ஜி வேரியண்ட்டில் 31.5km/kg வரையிலான மைலேஜை பெறலாம்.

best mileage car under rs.6 lakhs

மாருதி சுஸுகி ஆல்டோ கே10: மேலே பார்த்த ஆல்டோ 800 காரின் மாடர்ன் வெர்சன் தான் ஆல்டோ கே10 ஆகும். மேலும், அல்டோ 800 வழங்கப்படும் 800சிசி என்ஜினை போல் அல்லாமல், ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த மாடர்ன் ஆல்டோ கார் 24.39kmpl வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

best mileage car under rs.6 lakhs

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ: மேற்கூறப்பட்ட ஹேட்ச்பேக் கார்களை போல் இல்லாமல், நன்கு உயரம் கொண்ட எஸ்யூவி போன்றதான ஹேட்ச்பேக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு எஸ்-பிரெஸ்ஸோ சிறந்த சாய்ஸ். எஸ்-பிரெஸ்ஸோவிலும் அதிகப்பட்சமாக 24kmpl-க்கும் அதிகமான மைலேஜை பெற முடிகிறது. எஸ்-பிரெஸ்ஸோ எஸ்-சிஎன்ஜி காரின் மைலேஜ் 32.73kmpkg ஆகும்.

best mileage car under rs.6 lakhs

மாருதி சுஸுகி செலேரியோ: செலேரியோவையும் நீண்ட வருடங்களுக்கு பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி அப்டேட் செய்தது. ரூ.5.36 லட்சத்தில் இருந்து விலையை கொண்ட இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 26kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட்டில் 35.6kmpkg வரையிலான மைலேஜையும் பெற முடிகிறது.

best mileage car under rs.6 lakhs

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்: ஆல்டோவை விட, சமீப ஆண்டுகளாக இந்திய மக்கள் அதிக பேரால் வாங்கக்கூடிய மாருதி கார் இதுவாகும். ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 20 யூனிட்கள் விற்பனையாகும் ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.99 இலட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த காரின் மைலேஜ் 23kmpl (பெட்ரோல்), 31kmpkg (சிஎன்ஜி) ஆகும்.

best mileage car under rs.6 lakhs

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ஹூண்டாய் கார்கள் பொதுவாகவே சற்று அதிக விலை உடன் விற்கப்படுவது வழக்கம். கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.5.84 லட்சத்தில் உள்ளது. இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரில் 21kmpl வரையிலான மைலேஜை பெற முடிகிறது. கிராண்ட் ஐ10 நியோஸும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த ஆப்ஷனில் 28kmpkg வரையிலான மைலேஜை பெற முடியும்.

best mileage car under rs.6 lakhs

ரெனால்ட் க்விட்: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில ரெனால்ட் கார்களுள் ஒன்றான க்விட்டில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 66 எச்பி மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் மூலம் 22 kmpl மைலேஜை பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கூறப்பட்ட 7 கார்களின் விற்பனையும் இந்தியாவில் சிறப்பாக உள்ளது. இத்தனைக்கும், ரெனால்ட் க்விட் கூட ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகுகிறது. இதில் இருந்து, இந்திய சந்தையில் மைலேஜ் கார்களுக்கு எந்த அளவிற்கு மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது என்பதை அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 8:00 [IST]
English summary
7 best mileage cars under rs 6 lakhs check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X