மக்களை கவர இந்த 2023இல் அப்கிரேட் செய்யப்பட்ட கார்களின் லிஸ்ட்!! டாடா கார்கள் தான் அதிகமா இருக்கு!

முற்றிலும் புதிய கார்களை அறிமுகம் செய்வது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சற்று கடினம் காரியம். அதாவது, அதுவரையில் இல்லாத புதிய டிசைனில், புதிய தொழிற்நுட்பங்களுடன், புதிய என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் காரை அறிமுகப்படுத்த நிறைய ஆய்வுகளையும், சோதனைகளையும் செய்ய வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக, விற்பனையில் இருக்கும் கார்களை புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்ட அவற்றை அவ்வப்போது ஃபேஸ்லிஃப்ட்டுக்கு அப்டேட் செய்துவிடுகின்றன.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் (Honda City Facelift): இந்தியாவின் பிரபலமான & அதேநேரம் பழமையான செடான் கார் ஹோண்டா சிட்டி ஆகும். தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஜென்ரேஷன் சிட்டி கார் 2020இல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, இந்த 2023ஆம் வருடத்தில் சிட்டி செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

facelift car launches in 2023

டாடா நெக்ஸான் & நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon & Nexon EV Facelift): இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனைகும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான டாடா நெக்ஸான் இந்த 2023இல் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றிருந்தது. நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சனான நெக்ஸான் இவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

facelift car launches in 2023

டாடா ஹெரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் (Tata Harrier & Safari Facelift): இந்த 2023இல் டாடா நிறுவனத்தில் இருந்து ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்ற மற்றொரு இரு கார்கள் இவை ஆகும். இவை இரண்டும் டாடா விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார்களாக உள்ளன. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலமாக டாடா ஹெரியர், சஃபாரி கார்கள் இரண்டும் முன்பை விட மாடர்ன் தோற்றத்தை பெற்றுள்ளன. குறிப்பாக, முன்பக்க ஹெட்லைட்கள் மெல்லியதான வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

facelift car launches in 2023

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift): இந்தியாவில் கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் காரான செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்டோஸ் காருக்கு ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், காரின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றத்தையும் கியா கொண்டுவரவில்லை. இருப்பினும், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பெரிய டர்போ-பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது.

facelift car launches in 2023

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ ஃபேஸ்லிஃப்ட் (Mercedes-Benz GLE Facelift): இந்தியாவில் பிரபலமான மெர்சிடிஸ் கார்களுள் ஒன்றான ஜிஎல்இ-இன் வெளிப்பக்க தோற்றத்தில் சில அப்டேட்கள் இந்த 2023இல் கொண்டுவரப்பட்டன. அதேபோல், காருக்கு உள்ளே புதிய டிசைனில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் லேட்டஸ்ட் எம்பக்ஸ் (MBUX) இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டன.

facelift car launches in 2023

ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் (Hyundai i20 Facelift): ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான ஐ20 ஐரோப்பாவில் இருப்பதை போன்று அப்கிரேட் செய்யப்பட்டு இந்த வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, நம் நாட்டில் ஐ20 காரின் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

facelift car launches in 2023

எம்ஜி ஹெக்டர்/ ஹெக்டர் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector/ Hector Facelift): இந்தியாவில் இந்த எம்ஜி கார்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் அப்டேட் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த 2023இல் இவை இரண்டும் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டன. முன்பக்கத்தில் வழக்கத்தை காட்டிலும் பெரிய க்ரில் பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதை விட முக்கியமாக, லெவல்-2 அடாஸ் தொழிற்நுட்பம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

facelift car launches in 2023

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 2023ஆம் ஆண்டில் இவற்றுடன் இன்னும் சில கார்களும் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்று இருந்தன. ஆனால், இவை முக்கியமான மாடல்களாக இருப்பதால், இவற்றை இந்த லிஸ்ட்டில் பார்த்துள்ளோம். வருகிற 2024ஆம் ஆண்டிலும் பல கார்கள் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெறவுள்ளன. குறிப்பாக, கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2023, 10:47 [IST]
English summary
7 facelift cars which launched in 2023 in india check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X