மாருதி கார்கள் இருந்தாலும், நிறைய பேர் மஹிந்திராவை தான் சூஸ் பண்றாங்க!! சேல்ஸ் ரிப்போர்ட் என்னா சொல்லுது?

இந்தியாவில் அளவில் சிறிய கார்களுக்கே சிறப்பாக வரவேற்பு கிடைக்கும் என்பது உண்மை தான். இருப்பினும், 7 இருக்கைகளை கொண்ட அளவில் சற்று பெரியதான கார்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 7-சீட்டர் கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

7 இருக்கைகளை கொண்ட கார்கள் என்றால், அவை எஸ்யூவியாகவும் இருக்கலாம், அல்லது எம்பிவி ஆகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, எர்டிகா, கேரன்ஸ் உள்ளிட்டவை எம்பிவி ரக கார்கள், அதுவே ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 போன்றவை எஸ்யூவி ரக கார்கள் ஆகும். இவற்றுள் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 7-சீட்டர் கார் எர்டிகா ஆகும்.

7-seater cars sales in october

மாருதி சுஸுகியின் எம்பிவி காரான எர்டிகா இந்தியாவில் மக்கள் பலரால் அதிகம் வாங்கப்படும் எம்பிவி காராக கடந்த சில வருடங்களாகவே முதலிடம் வகித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 14,209 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 10,494 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் எர்டிகா கார்களின் விற்பனை ஆனது 35% அதிகரித்துள்ளது. எர்டிகாவுக்கு அடுத்து 2வது இடத்தில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 13,578 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபரில் வெறும் 7,438 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

7-seater cars sales in october

3வது மற்றும் 4வது இடங்களிலும் மஹிந்திராவின் கார்களே உள்ளன. மஹிந்திரா பொலிரோ 9,647 யூனிட்கள் விற்பனை உடன் 3வது இடத்தை தனதாக்கி உள்ளது. 2022 அக்டோபரில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பொலேரோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் உள்ள மஹிந்திரா கார் எக்ஸ்யூவி700 ஆகும். இது கடந்த அக்டோபரில் மொத்தம் 9,297 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

அதுவே, 2022 அக்டோபரில் எக்ஸ்யூவி700 காரின் விற்பனை எண்ணிக்கை 5,815 மட்டுமே ஆகும். இந்த வகையில், கடந்த மாதத்தில் எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை ஆனது சுமார் 60% அதிகரித்துள்ளது. இந்த மஹிந்திரா கார்களுக்கு அடுத்து, 5வது இடத்தில் டொயோட்டா இன்னோவா உள்ளது. இன்னோவா ஹைகிராஸ் என்கிற பெயரில் ஹைப்ரீட் காராகவும் விற்பனை செய்யப்படும் இந்த 7-சீட்டர் டொயோட்டா கார்கள் கடந்த மாதத்தில் 8,183 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

7-seater cars sales in october

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனையில் இருந்த இன்னோவா கிரிஸ்ட்டா அந்த சமயத்தில் 3,739 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. 6வது இடத்தை கியாவின் கொரியன் ஸ்டைல் கேரன்ஸ் எம்பிவி கார் பிடித்து உள்ளது. 5,355 கேரன்ஸ் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

2022 அக்டோபர் சமயத்திலும் கேரன்ஸ் கார்களின் விற்பனை ஆனது இந்த அளவிற்கு தான் இருந்தது. 7வது மற்றும் 8வது இடங்களில் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் முறையே 4,367 மற்றும் 2,475 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ரெனால்ட் டிரைபர் (2,080) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (1,837) உள்ளன.

7-seater cars sales in october

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 7-சீட்டர் கார்கள் பிரிவிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமாகவே உள்ளது. ஆனால் அதேநேரம், மஹிந்திராவின் கார்களும் 7 இருக்கைகளுடன் அதிக பேரால் வாங்கப்படுகின்றன என்பது கடந்த மாத விற்பனையின் மூலம் தெரிய வருகிறது. இந்த வரிசையில் இந்த நவம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 12, 2023, 23:38 [IST]
English summary
7 seater cars sales in 2023 october check top 10 list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X