குடும்பத்தோட போகலாமே.. இனி 8 இருக்கைகள் கொண்ட காரை நம்மால் வாங்க முடியாதா?.. என்னென்ன பண்றாங்க பாருங்க!

இனி தனி நபர்களால் குடும்பத்துடன் ஒன்னாக பயணிக்க உதவும் 8 இருக்கைகள் கொண்ட கார்களை வாங்க முடியாது என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவலின் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் முன்னணி கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross) ஆகிய இரு கார் மாடல்களிலும் 8 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

8 Seater vehicles only for cab service

அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்கள் பயன்பெறும் விதமாக இந்த முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த இரண்டு எம்பிவி ரக காருக்கும் இந்தியாவில் வரவேற்பு மிக அதிகம் ஆகும். இந்த நிலையிலேயே அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக நிறுவனம் இரண்டிலும் 8 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசாங்கம் ஓர் புதிய விதியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எட்டு அல்லது எட்டுக்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட கார்களை கால் டாக்சி பிரிவிற்காக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே அந்த புதிய விதி ஆகும்.

Toyota innova crysta safety

ஆமாங்க, 8 அல்லது அதற்கும் மேற்பட்ட இருக்கை வசதிக் கொண்ட கார்களை தனி நபர் பயன்பாட்டிற்கு பதிவு செய்வதை தடை செய்வதற்கான பிளானிலேயே அரசு களமிறங்கி இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கை பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதேவேளையில், 8 சீட்டர் கார்களை தனி நபர் பயன்பாட்டிற்கு பதிவு செய்யப்படுவது ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 22 ஆம் தேதியில் இருந்து இது செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அரசின் பாரிவாஹன் தளத்தில் 8 இருக்கைகள் கொண்ட காரை தனி நபர் பயன்பாட்டிற்கு பதிவு செய்வதற்கான ஆப்ஷன்களும் நீக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், இனி அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களை தனி நபர்களால் வாங்க முடியாது என்கிற சூழல் நாட்டில் உருவாகி இருக்கின்றது. எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட கார்களை அரசு ஆம்னிபஸ் கேட்டகரியின் (Omnibus category) கீழ் சேர்த்து இருக்கின்றது.

இது, டிரான்ஸ்போர்ட் (Transport) பிரிவின்கீழ் வரும். இப்பிரிவின் கீழ் உள்ள அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஃபிட்னஸ் சான்று பெற வேண்டும் என்பது அவசியம் ஆகும். தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான எம்பிவி ரக கார்கள் 6 அல்லது 7 இருக்கைகள் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில கார் மாடல்களில் மட்டுமே 8 இருக்கை ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை அனைத்தும் இனி ஆம்னி பஸ் பிரிவின்கீழே விற்கப்பட இருக்கின்றன. குறிப்பாக, டாக்சி சேவைக்காக மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன. இந்த அரசின் இந்த நடவடிக்கை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு வாகன உலகம் சார்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விரைவில் புதிய பிஎஸ்7 மாசு உமிழ்வை அது நடைமுறைப்படுத்த இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த புதிய மாசு உமிழ்வு நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 17:49 [IST]
English summary
8 or more seater cars can only be registered for cab service
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+