புதுசா கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வரிசையாக லயன் கட்டி வராங்க!
இந்தியாவில் எஸ்யூவி மார்க்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கி விட்டது. முக்கியமான பல நிறுவனங்கள் தங்கள் புதிய எஸ்யூவி கார்களை அடுத்த ஆறு மாதத்தில் அப்டேட் செய்து வெளியிடப்போகிறது. அதன்படி டாடா, ஹுண்டாய், கியா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் விரைவில் வெளியிடப் போகும் எஸ்யூவி கார்களைப் பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெக்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் அதிகமான மாற்றங்கள் வர உள்ளன. நாம் எதிர்பாராத வகையில் இது வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய அப்டேட்டாக அடாஸ் தொழில்நுட்பம் இணைக்கப்பட உள்ளது.
கியா சோனட் ஃபேஸ்லிப்ட்: கியான் நிறுவனம் தனது சோனட் காரின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு முதல் பாதையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் உள்ள டிசைனை சர்வதேச அளவில் கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் எஸ்யூவி காரின் டிசைனை ஒத்து மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இந்த காரின் உட்புறத்தில் பல புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஆனால் இன்ஜினை பொறுத்தவரை தற்போதுள்ள அதே இன்ஜின் தான் இந்த புதிய கியா சோனட் காரில் இடம் பெற உள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்: டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் அடுத்த ஒரு சில மாதங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த காரில் ஹாரியர் இவி கான்செப்ட் காரின் டிசைன் இன்ஸ்பயர் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படுகிறது.
மேலும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள சில அம்சங்களும் இதை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உள்ளே உள்ள கேபின் புதிய இரண்டு ஸ்போக்ஸ் ஸ்டியரிங் வீல், கெப்பாசிட்டிவ் கிளைமேட் கண்ட்ரோல் உடனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டாடா பஞ்ச் மற்றும் கர்வ் இவி: டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் தனது கர்வ் இவி காரையும் அடுத்தா அக்டோபர் மாதம் பஞ்ச் இவி காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதே நேரம் கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
ஆனால் இதன் அறிமுக தேதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதில் கருவ் கார் மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 என்ற காருக்கும் சிட்ரோன் இசி3 என்ற காருக்கும் போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை வாங்க பலர் காத்திருக்கிறார்கள்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட்: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்தை அந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் காரில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு உருவாக்கியுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை டாடா நெக்ஸான் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் கியா சோனட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் வழியில் அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அப்டேட் வந்தால் இந்த காரின் விற்பனை பல மடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 டோர் மஹிந்திரா தார்: மஹிந்திரா நிறுவனம் தனது கார் காரை 3 டோர் வெர்ஷனாக ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த காரின் சைடு ஒரு வெர்ஷனை 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள 3 டோர் வெர்ஷன் காரில் இருந்து அதிகமான கேபின் ஸ்பேஸ் நீளமான வீல் பேஸ் ஆகியன இந்த காரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி சுஸூகி ஜிம்னி லைஃப்ஸ்டைல் எஸ்யூவி காருக்கு போட்டியாக களத்தில் இறங்க உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது எஸ்யூவி காரர்களுக்கான மார்க்கெட் அதிகமாகி வருகிறது. மக்கள் பலர் ஹேட்ச் பேக், செடான் கார்களுக்கு மாற்றாக எஸ்யூவி காரர்களையே வாங்க அதிகம் விரும்புகின்றனர். அதிக இட வசதி மற்றும் நல்ல லுக் காரணமாக இந்த காரைகளையே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இதனால் அதிகமான எஸ்யூவி கார்கள் வரிசையாக கலந்திருக்கிறது


Click it and Unblock the Notifications








