பெட்ரோல் காருதான் ஆனா ஒரு துளிகூட இல்லாம 103 கிமீ தூரம் போகும்! இந்த மாதிரி தொழில்நுட்பம்கூட கை வசம் இருக்கா!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் பிஎம்டபிள்யூ (BMW). இந்த ஜெர்மானிய லக்சூரி கார் உற்பத்தி நிறுவனம், ஒட்டுமொத்த கார் காதலர்களையும் அசர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் அதன் 5 சீரிஸ் (5 series) லக்சூரி செடான் ரக காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

530இ (530e) மற்றும் 550இ (550e) எனும் தேர்வுகளில் இந்த கார் சந்தையைக் களம் காண இருக்கின்றது. குறிப்பாக ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமலேயே 90 கிமீ முதல் 103 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் திறன் இந்த சொகுசு கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது எப்படி? மற்றும் இந்த காரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

BMW 5 series plug in hybrid sedan

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றே 5 சீரிஸ் இருக்கின்றது. இந்த கார் மாடல் ப்யூர் மின்சார வாகனமாகவும் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அறிமுகம் சென்ற ஆண்டிலேயே அரங்கேறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே, பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது 5 சீரிஸ் மாடலின் எட்டாம் தலைமுறையை சொகுசு கார் காதலர்களுக்காக உருவாக்கி அதனை தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது.

இந்த வாகனத்தை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவும் பிஎம்டபிள்யூ உருவாக்கி இருக்கின்றது. பிளக்-இன் ஹைபிரிட் (Plug-in Hybrid Electric Vehicle) வசதிக் கொண்ட காராகவே எட்டாம் தலைமுறை 5 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ தயார் செய்திருக்கின்றது. அதாவது, இந்த வாகனம் எரிபொருளிலும் ஓடும்.

அதேசமயத்தில், மின்சாரத்திலும் ஓடும். இதை நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளும் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பெட்ரோல் அல்லது ப்யூர் எலெக்ட்ரிக் மோடிற்கு மாற்றிக் கொள்ளும் வசதி இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன், ப்யூர் எலெக்ட்ரிக் மோடை பயன்படுத்தும்போது 103 கிமீ தூரம் வரை நம்மால் ரேஞ்ஜ் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய அதீத ரேஞ்ஜைத் தருவதற்கு என தனித்துவமான பெரிய பேட்டரி பேக் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த பேட்டரி பேக் ஃபுல் சார்ஜில் இருக்கும் எனில் மட்டுமே நம்மால் இந்த 103 கிமீ தூரம் தடையின்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடனேயே எரிபொருளில் ஓடும் மோட்டாரும் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், 550இ தேர்வில் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 6 பெட்ரோல் மோட்டாரும், 530இ தேர்வில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 550இ தேர்வில் உள்ள பெட்ரோல் மோட்டார் 483 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட வெர்ஷன் ஆகும். ஆகையால், ப்யூர் எலெக்ட்ரிக் மோடில் இதனால் 90 கிமீ தூரம் வரை மட்டுமே டிராவல் செய்ய முடியும். ஆனால் 530இ முழுமையாக 103 கிமீ ரேஞ்ஜை வெளியேற்றும். இதிலும், சில நேரங்களில் ரேஞ்ஜ் திறன் சற்றுக் குறைய நேரிடலாம்.

அதிக பவரை வெளியேற்றும் வகையில் சொகுசு காரை இயக்கினால் இந்த நிலை கட்டாயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 530இ திறன் வெளிப்பாடு 295 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்காக உள்ளது. இந்த காரில் தனி பேட்டரி பேக் ப்யூர் இவி மோடுக்காக வழங்கப்பட்டு இருப்பதாக முன்னதாக கூறி இருந்தோம்.

19.4 kWh பேட்டரி பேக்கே இந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை 7.4 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், வீட்டில் வழக்கமான மின்சார பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய 12 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த விஷயங்களில் மட்டுமில்லைங்க, சொகுசு விஷயத்திலும், கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்களிலும் இந்த கார் நம்மை அசர வைக்கும் வகையிலேயே இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் ஹைபிரிட் வகை கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், பிளக்-இன் ஹைபிரிட் கார்களைக் காட்டிலும் ஸ்ட்ராங் ஹைபிரிட் வகை கார்களே அதிக அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த வகை கார்கள் இயக்கத்திலேயே தனக்கான மின்சாரத்தை பெற்றுக் கொண்டு பேட்டரி பேக்கை சார்ஜ் செய்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 28, 2023, 15:25 [IST]
English summary
8th gen bmw 5 series phev breaks cover with 103 km ev range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+