குழந்தைபோல பாத்துக்கணும்.. இல்லனா அவ்ளோதான் சளி பிடிக்கிற மாதிரி துருப்பிடிச்சிரும்! யோசிக்காம செஞ்சிருங்க!
நம்ம நாட்டுல மட்டும் இல்லைங்க, ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் மழை வந்தாலே அதை பெரும் தலை வலியாக பார்ப்போரே மிக அதிகமாக இருக்கின்றனர். அப்படியாகாவேதான் நம்மிலும் பலர் இந்த மழை பார்க்கின்றோம். மழையால் கிடைக்கும் நன்மைகளை நாம் யாரும் பார்ப்பதே இல்லை.
வெளியே போக முடியாது, துவைத்த துணியை காய வைக்க முடியாது, ஒரே கசகசனு இருக்கும் இப்படியாகவே நாம் இந்த மழையை பார்க்கின்றோம், வெறுக்கின்றோம். குறிப்பாக வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த மழையை தங்களின் மிகப் பெரிய எதிரியாகவும், விரோதியாகவும் பார்க்கின்றனர். ஏனெனில், ஒரு நிமிட மழையே உங்களின் புத்தம் புதிய காரை பழையதுபோல் மாற்றிவிட போதுமானதாக இருக்கின்றது.

இதுமட்டுமா, தொடர் மழை வாகனங்களில் துருவை கூட ஏற்பட செய்துவிடுகின்றன. இதனால்தான் ஒரு சில வாகன உரிமையாளர்கள் மழை வந்தாலே புலம்ப ஆரம்பித்துவிடுகின்றனர். இத்தகைய மழை காலத்தில் இருந்து உங்களின் காரை பாதுகாக்கும் சில வழிமுறைகளையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
புதிது போல் வைத்திருக்கவும், மழை நீரால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் இந்த டிப்ஸ்கள் பெரும் உதவியாக இருக்கும். இதனையே உள்நாடு, வெளிநாடு என உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வாகன உரிமையாளர்கள் ஒரு சிலர் மழைக் காலத்தின்போது தங்களின் வாகனங்களின் வெளிப்புறத்தை பராமரிக்க கையாண்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்ன சூப்பரான டிப்ஸ் அவை பார்த்துவிடலாம், வாங்க.

மழைக்கு பின்னர் ஏன் காரை சுத்தம் செய்ய வேண்டும்?, மழைக்கு முன்னரும், மழைக்கு பின்னரும் காரை சுத்தம் செய்வது என்பது மிகவும் அவசியமானது. "மழைக்கு பின்னாடி ஓகே, ஏன் முன்னாடியும் சுத்தம் செய்ய வேண்டும். எப்படியும் மழை டைம்ல கார் மறுபடியும் அழுக்காகிடுமே", என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்.
மழைக்கு முன்னால் சுத்தம் செய்வதனால் ஏற்கனவே கார் மீது படர்ந்திருக்கும் அழுக்குகள் விலக்கப்படும். அதுதவிர, மழை நீர் தேங்குவதும் தவிர்க்கப்படும். கார்களில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு மழை நீர் வாகனத்தின்மீது தேங்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன் காரணத்தினலேயே துருப்பிடித்தல் போன்ற பிரச்னைகள்கூட ஏற்படுகின்றன.

குறிப்பாக, ஒரு முறை வண்டியை ஓட்டிவிட்டு மழை காரணமாக நீண்ட நாட்களுக்கு எடுக்காமல் விட்டுவிடும்போது அது பெரும் தலைவலியாக மாறிவிடுகின்றது. ஆகையால் மழைக்கு முன்னர், கார்களின் மேல் விழும் மழைதுளிகள் எளிதில் கீழே வழிந்தோடுவதற்கான வேலைகளை செய்துவிடுவதே நல்லது. இதை செய்யக்கூடிய கெமிக்கல் மற்றும் கார் லோஷன்கள் சந்தையில் பரந்த அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அவற்றை பயன்படுத்துவதனால் துளி நீர்கூட காரின் மீது தேங்காது. இதைச் செய்ய தவிர்க்கும்பட்சத்தில் கார் மழை நேரத்தில் பொலிவிழந்து அழுக்காகக் காட்சியளிக்கும். இதே நிலையிலேயே மழைக்கு பின்னரும் கார் தென்படும். ஆகையால், மழைக்கு பின்னரும் காரை நன்கு சுத்தமாக கழுவுவதே நல்லது. கண்களுக்கு தெரியக் கூடிய இடங்களை மட்டுமே சுத்தம் செய்யக் கூடாது.
காரின் அடிப்பகுதி, குறிப்பாக, டயர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் மழையால் நீரால் சேர்ந்த மண் வெளியேற்றப்படும். சில கார்களில் டயர் பகுதிகளில் விரைவாக துருப்பிடிப்பதை நம்மால் பார்க்க முடியும். இதற்கு மழை நேரங்களில் தேங்கும் மண் மற்றும் சகதியே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகையால், அதிக பிரஷ்ஷரில் நீரை பீய்ச்சியடித்து மண் மற்றும் அழுக்குகள் அனைத்தையும் காரின் அடிப்பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
காரை நன்கு உலர்த்த வேண்டும்: காரை சுத்தமா கழுவிட்டோம், இதுபோதும் என நினைத்து காரை பார்க்கிங்கில் விட்டுவிட கூடாது. குளித்த பின்னர் பின்னர் தலை முடியை உலர்த்துவதை போல் நம் காரையும் உலர்த்த வேண்டும். குறிப்பாக, நீர் துளிகள் அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.
இதற்காக மைக்ரோஃபைபர் துணிகளை பயன்படுத்தலாம். இந்த துணிகளால் ஸ்கிராட்ச் ஏற்படாது. ஆகையால் தைரியமாக காரை வாஷ் செய்த பின்னர், அதனை உலர்த்த மைக்ரோஃபைபரை பயன்படுத்தலாம். இதனால் கார் புதிதுபோல் தென்படும். இந்த நீர் துளிகளை அகற்றாமல் அப்படியே விடும்பட்சத்தில், மீண்டும் அழுக்கு மற்றும் தூசிகள் எளிதில் படர ஆரம்பிக்கும்.
ஆகையால், இந்த விஷயத்தில் சற்று அதிக கவனம் தேவை. இந்த அனைத்து பணிகளுக்கும் பின்னர் முன்னதாக சொன்னதைப் போல காரின் பெயிண்டைப் பாதுகாக்கும் மேற்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும். மீண்டும் மழை பொழியும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளில் இருந்து உங்கள் காரை இந்த மேற்பூச்சுகள் பாதுகாக்கும்.
குறிப்பாக, பல நாட்களுக்கு உங்கள் வாகனத்தை அது புதிதுபோல் காண்பிக்கும். வேக்ஸ் மற்றும் சீலண்ட் என பல வகைகளில் அது நடைமுறையில் இருக்கின்றது. இதில் ஏதேனும் ஒன்றை மிக தாராளமாக நீங்கள் பயன்படுத்தலாம். இதனால், உங்கள் வாகனம் எப்போதும் நல்ல பாரமரிப்பு நிலையில் காட்சியளிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரோ, பைக்கோ மழை நேரங்களில் வெளியில் விடாமல் பாதுகாப்பான பார்க்கிங்கில் நிறுத்தி வைப்பதே நல்லது. மழையில் முழுமையாக நனையும்படி விடும்போத பல்வேறு சிக்கல்களும், பிரச்னைகளும் வாகனங்களில் ஏற்படுகின்றன. குறிப்பாக, டூ-வீலர்களில் சில மின்சாதனங்கள் வேலை செய்யாமல் போகும், ஏன் சில நேரங்களில் வாகனம் ஸ்டார்ட் ஆகுவதே பெரிய சிக்கலாக மாறிவிடும். ஆகையால், மழையிடம் இருந்து உங்கள் வாகனத்தை சற்று விலக்கி வைப்பதே நல்லது.


Click it and Unblock the Notifications









