சும்மாகூட பிடிக்கலைனு சொல்ல மனசு வராது.. அவ்வளவு அழகான காரை தயாரிக்கும் பழம்-பெரும் கார் உற்பத்தி நிறுவனம்!
உலகின் பழம் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான ஏசி கார்ஸ் (AC Cars), கோப்ரா ஜிடி ரோட்ஸ்டர் (Cobra GT Roadster) எனும் மிகவும் அழகிய ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இங்கிலாந்தைச் சேர்ந்த மிகவும் பழைமையான கார் உற்பத்தி நிறுவனம் ஏசி கார்ஸ் (AC Cars). 122 வயதுடைய மிகவும் பழைமையான கார் உற்பத்தி நிறுவனம் இது ஆகும். இந்த நிறுவனத்திடமே கோப்ரா எனும் பெயருக்கான உரிமம் இருக்கின்றது. இது வெகு விரைவில் தனது புதுமுக ஸ்போர்ட்ஸ் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் ஒரு சில மாதங்களில் காரின் வெளியீடு அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே காரின் வெளியீட்டிற்கு முன்னதாகவே தனது புதுமுக ஸ்போர்ட்ஸ் காரின் படங்களை ஏசி கார்ஸ் வெளியீடு செய்திருக்கின்றது. மிக மிக அழகிய வாகனமாக புதுமுக கார் உருவாக்கப்பட்டிருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த கார் கோப்ரா ஜிடி ரோட்ஸ்டர் (Cobra GT Roadster) எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இது ஓர் ஸ்போர்ட்ஸ் ரக காராகும். பெயருக்கேற்ற மிகவும் சக்தி வாய்ந்த வி8 மோட்டாரே இந்த ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் ஏசி கோப்ரா 378 சூப்பர் ப்ளோவர் எம்கேஐஐவி (AC Cobra 378 Superblower MkIV) மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் செவ்ரோலட் மோட்டாரைக் காட்டிலும் இது அதிக பவரை வெளியேற்றும் என கூறப்படுகின்றது. நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 654 பிஎச்பி பவரையும், 575 ஐபி எஃப்டி திறனையும் இது வெளியேற்றும். மேலும், வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இது எட்டிவிடும். அந்த அளவிற்கு அதி வேக மோட்டாரே கோப்ரா ஜிடி ரோட்ஸ்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

6 ஸ்பீடு மேனுவல் அல்லது 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. ஏசி கார்ஸ் நிறுவனம் இந்த காரை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உருவாக்க ஏசி கார்ஸ் திட்டமிட்டு உள்ளது. ஆகையால், மிகக் குறைவான நபர்களினாலேயே இந்த காரை வாங்க முடியும் என தெரிகின்றது.
மேலும், இதற்கு 285,000 பவுண்டுகள் விலை நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ரூபாய் மதிப்பில் 2.79 கோடிக்கும் அதிகமான விலையில் அது விற்கப்பட இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த கார் ஆகும். இதன் இலகு ரக எடைக்காக கார்பன் ஃபைபரால் ஆன பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

1960களில் பயன்பாட்டில் இருந்த கார் மாடல்களைப் போல் இதனை ஏசி கார் நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. அதேவேளையில், நவீன வசதிகள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். அவ்வாறு பயணிக்கும்போது வாண்வெளியின் அழகை ரசித்த வண்ணம் கோப்ரா ஜிடி ரோட்ஸ்டரில் பயணிக்க முடியும். தேவைப்படும் நேரத்தில் கூரையை விரித்துக் கொள்ளவும் முடியும்.
ஒரே ஒரு பட்டனை தட்டினால் போதும் இந்த வேலையை காரே தானாக செய்துவிடும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் இத்தாலிய நிறுவனங்களான ஐகோனா டிசைன் குழுமம் மற்றும் செகோம்ப் ஆகியவை முக்கியவை பங்காற்றி இருக்கின்றன. இவையே ஏசி கோப்ரா ஜிடி ரோட்ஸ்டரின் கண்கவர் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









