திடீரென சிஎன்ஜி கார்களின் விற்பனை சரிவு... ஆஹா, ஓஹோனு விற்பனையான கார்களுக்கு ஏற்பட்ட சோகம்... என்ன காரணம்?
2023 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 2023 ஏப்ரலில் மிகக் கடுமையான சரிவை சிஎன்ஜி கார்கள் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் மிக அமோகமாக விற்பனையைப் பெற்று சிஎன்ஜி கார்களின் விற்பனையில் திடீரென ஏன் இந்த அளவு சரிவு ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையையே சிஎன்ஜி கார்களின் விற்பனை மிஞ்சிவிடும் என கூறும் அளவிற்கு மிக அமோகமான வரவேற்பை அவர் பெற்றுக் கொண்டிருந்தன. இந்த மாதிரியான சூழலில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் சிஎன்ஜி கார்கள் விற்பனை குறித்து வெளியாகி இருக்கின்றது.

திடீரென சிஎன்ஜி கார்களின் விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் 33,652 யூனிட் சிஎன்ஜி கார்கள் விற்பனையாகிய நிலையில், நடந்து முடிந்த ஏப்ரல் மாதத்தில் 29,323 சிஎன்ஜி கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
திடீரென இத்தகைய மாபெரும் சரிவை சிஎன்ஜி கார்கள் சந்தித்து இருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வாஹன் தளத்தில் பதிவான வாகனங்களின் புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் மத்திய அரசு இயற்கை எரிவாயுக்களின் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்து.

ஆகையால், ஏப்ரல் 6இல் இருந்து சிஎன்ஜி கேஸ்களின் விலை கணிசமான குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் சிஎன்ஜி கார்களின் பதிவு சதவிகிதம் பலமடங்குக் குறைந்திருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. ஆனால், முதன்மையான காரணமாக புதிய ஓபிடி2 விதியே முன் வைக்கப்படுகின்றது.
வாகனங்கள் ஓபிடி1இல் இருந்து தற்போது ஓபிடி2விற்கு மாறி இருக்கின்றன. இதன் விளைவாக புதிய வாகனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. வாகன உற்பத்தியாளர்கள் விற்பனையில் இருக்கும் தங்களுடைய கார் மாடல்களை புதிய விதிக்கு ஏற்ப அப்கிரேட் செய்துக் கொண்டிருப்பதால் அவற்றின் கிடைக்கும் தன்மைக் குறைந்துக் காணப்படுகின்றது.

இதனாலேயே வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்ற போதிலும், விற்பனைச் சரிந்துக் காணப்படுகின்றது. எனவே, வரும் காலங்களில் சிஎன்ஜி கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் சிஎன்ஜி விநியோகம் தட்டுப்பாடின்றி காணப்படுகின்றது. மேலும், முக்கிய நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் சிஎன்ஜி விற்பனையகங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
அதேவேளையில் மேலும் சிஎன்ஜி விற்பனையகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், அடுத்து சில வருடங்களில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனையே முதன்மையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாகவே மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனை இருக்கப் போகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சிஎன்ஜி கார்களுக்கு இந்தியாவில் டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றின் பராமரிப்பு செலவு குறைவு, அதேவேளையில், மைலேஜை அது மிக சூப்பராக வழங்கும். இந்த காரணத்திற்காகவே இந்தியர்கள் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுதவிர அவற்றின் மாசு வெளிப்பாடும் மிகக் குறைவாக இருக்கின்றது. எனவேதான் அரசு சிஎன்ஜி வாகன விற்பனையை தற்போது ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023 ஏப்ரலில் காணப்படும் சிஎன்ஜி வாகன விற்பனை சரிவு தற்காலிகமானதே ஆகும். விரைவில், ஏன் அடுத்த மாதத்திலேயே சிஎன்ஜி கார்களின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் மாருதி சுஸுகியே மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 35 சதவீத சந்தை பங்கினை மாருதி சுஸுகியே பிடித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications
