ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023 அறிவிப்பு! விருதை தட்டி சென்ற கார், பைக்குகள் எது எதுன்னு தெரியுமா?
ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023க்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது. 7 ஜூரிகள் சேர்ந்து நடத்திய பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் தளங்கள் இணைந்து ஃபாஸ்டர் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. மக்கள் மத்தியில் உள்ள கார்/பைக் குறித்த தவறான தகவல்கள் மற்றும் புரிதல்களை மாற்றி, அவர்கள் சரியான வாகனத்தை வாங்கும் முடிவை எடுக்க உதவும் வகையில், ஃபாஸ்டர் விருதுகள் 2023 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்படும் இந்த விருதுக்கு, இந்தியாவின் முன்னணி லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஏசர் நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராகவும், உலகின் முன்னணி ஆக்ஷன் கேமரா நிறுவனமான கோ ப்ரோ மற்றும் டபிள்யூடி40 ஆகியவை இணை ஸ்பான்ஸர்களாகவும் இருந்தன.
கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமான கார்/பைக்குகள் எல்லாம், இந்த விருதிற்கான தேர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. 7 பேர் கொண்ட ஜூரி குழு, கடந்த ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், நவி மும்பையில் வைத்து கார்/பைக்குகளை டெஸ்டிங் செய்தனர். கிட்டத்தட்ட 13 வகையான சோதனைகளுக்கு பிறகு அவர்கள் தங்களது முடிவை பதிவு செய்தனர்.

இந்த விருதுக்கான தேர்வில் பங்கெடுத்த ஜூரிகளின் பட்டியல்
- அமித் சங்கானி - எடிட்டர், மோட்டோராய்ட்ஸ்
- ஆயூஷ் ஜெயின் - எடிட்டர், இந்தியன் டார்க்
- கௌரவ் யாதவ் - எடிட்டர், காடிவாடி
- ஜோபோ குருவில்லா - எடிட்டர், டிரைவ்ஸ்பார்க்
- நரேந்திர ஷர்மா - எடிட்டர், கியர்ஃபிலிக்
- ரோஹித் குரானா - எடிட்டர், கார்பிளாக் இந்தியா
- ரோஷன் ஜோசப் - எடிட்டர், பைலட் ஆன் வீல்ஸ்
ஜூரியாக அறிவிக்கப்பட்ட பிஜூ நாயர் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளவில்லை.ஜூரிகள் தங்கள் முடிவுகளை தவறில்லாமல் தரவுகளாக வழங்க சென் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் டேட்டா டெஸ்டிங் சாஃப்ட்வேர் மூலம் தரவுகளை கையாண்டது. இந்த ஜூரிகளின் முழு தேர்வுகளையும், ஆரம்பம் முதல் முடிவுகள் வரை மார்கெட்ஸ் அண்ட் மார்கெட்ஸ் நிறுவனம் மேற்பார்வை செய்தது.

இந்த விருதுகளை அறிவிக்கும் நிகழ்ச்சி குர்கானில் நடைபெற்றது. நிகழ்ச்சியை எம்ஸி ரவீன் குண்டு என்பவர் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில், டூவீலர், 4வீலர் தயாரிப்பாளர்கள், பிஆர் ஏஜென்ஸிகள், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டீம் மற்றும் ஆட்டோமோட்டிவ் பெர்சனாலிட்டிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஏசர் ஃபாஸ்டர் 2023 விருது விபரங்கள் பின்வருமாறு:
- சிறந்த கார்: ஹூண்டாய் டுஸான்
- சிறந்த பைக்: டிவிஎஸ் ரோனின்
- சிறந்த பிரீமியம் கார்: மெர்சிடீஸ்-பென்ஸ் இக்யூஎஸ்
- சிறந்த எலெக்ட்ரிக் கார்: கியா இவி6
- சிறந்த ஆட்டோமொபைல் தொழிற்நுட்பம்: ஹோண்டா சிட்டியில் உள்ள இ:எச்இவி ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழிற்நுட்பம்
- துறை சார்ந்த சிறந்த நபர்: ராஜேஷ் ஜெஜூரிகர் (மஹிந்திரா நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் சிஇஓ)
- சிறந்த மோட்டார்ஸ்போர்ட் பிரபலம்: ஜெஹன் டாரூவாலா (எஃப்2 டிரைவர் & ரிவர்ஸ் டிரைவர் - மஹிந்திரா ரேஸிங் ஃபார்முலா இ டீம்)
- சிறந்த சிஎஸ்ஆர் முன்னெடுப்பு: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்
- சிறந்த கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டீம்: மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்
- சிறந்த பிஆர் டீம்: ஃபர்ஸ்ட் பார்ட்னர்ஸ்
- சிறந்த விளம்பரம்: டாடா காஸிரங்கா எடிசன்
இந்த விருது குறித்து ஃபாஸ்டர் அமைப்பின் சேர்மன் மற்றும் மோட்டோராய்ட்ஸ் எடிட்டர் அமித் சங்கானி கூறுகையில்,"ஆட்டோமொபைல் மீடியாக்களில் மக்கள் அதிகம் நம்பும் நபர்கள் ஃபாஸ்டரில் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்லைனில் சென்சேஷனுக்காக தவறான தகவல்களை வெளியிடுபவர்களிடம் இருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். நாங்கள் ஒன்றிணைந்து, இணையதளத்தை பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக மாற்ற முடியும் என நம்புகிறோம்'' என்றார்.
இதுகுறித்து ஃபாஸ்டர் அமைப்பின் செயலாளரும், கியர்ஃபிலிக் எடிட்டருமான நரேந்திர ஷர்மா கூறுகையில், "சிறந்த வாகன தயாரிப்பாளர்கள், கம்யூனிகேஷன் டீம்கள், பிஆர் நிறுவனம், ஆட்டோமோட்டிவ் பிரபலம் என இந்திய ஆட்டோமொபைல் துறையின் தலைசிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லாம் கடந்த 12 மாதங்களில் புதிய உச்சங்களை தொட்டவர்கள். இந்த ஏசர் ஃபாஸ்டர் விருதுக்கு ஆட்டோமொபைல் துறையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த, எந்த பக்கமும் சாராத விருதுகளாக இந்த ஃபாஸ்டர் விருதுகள் இருக்கும்"என்றார்.
ஃபாஸ்டர் ஜூரி குழுவின் உறுப்பினரும், டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எடிட்டருமான ஜோபோ குருவில்லா கூறுகையில்,"ஏசர் ஃபாஸ்டர் 2023க்கான விருதுகளை வழங்குவதில் சந்தோஷப்படுகிறோம். இந்திய ஆட்டோமொபைல் துறைக்கே இது ஒரு கொண்டாட்டமான தருணம். உண்மையில் சிறந்த வாகனங்களுக்கு விருது கிடைப்பதை, எங்களுடைய சிறந்த டெஸ்டிங் மற்றும் டேட்டா கலெக்ஷன் முறைகள் உறுதி செய்துள்ளன. இந்தியாவின் ஆட்டோமொபைல் மீடியா துறையில் பிரபலமான நபர்கள் எங்கள் ஜூரி உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்திய ஆட்டோமொபைல் துறையின் கடின உழைப்பு மற்றும் புதுமையான யோசனைக்கு கிடைத்த பரிசு இது. வரும் ஆண்டுகளிலும் இந்த விருது தொடர்ந்து வளரும்" என்றார்.


Click it and Unblock the Notifications









