FASTER Awards 2023 டைட்டில் ஸ்பான்சராக ஏசர்! அஸோஸியேட் ஸ்பான்ஸர்களாக கோ-புரோ, டபிள்யூடி40
உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி பிராண்டான ஏசர், ஃபாஸ்டர் விருதுகள் 2023க்கு டைட்டில் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது. கோப்ரோ மற்றும் டபிள்யூடி 40 ஆகியோர் இந்த விருதுக்கு அசோசியேட் ஸ்பார்ன்சர்களாக இணைந்துள்ளனர். இந்த விருதுக்கான டேட்டா டெஸ்டிங் பார்ட்னராக சென் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனமும், இந்த விருது தேர்வை மேற்பார்வை செய்ய மார்கெட்ஸ் &மார்கெட்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
ஃபாஸ்டர் என்பது இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் ஆன்லைன் தளங்களின் கூட்டமைப்பாகும். இவர்கள் இங்கிலீஷ், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் ஆட்டோமொபைல் செய்திகளை 25 கோடிக்கும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். இவர்கள் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் விருதுகளை வழங்கவுள்ளனர்.

ஏசர் பாஸ்டர் விருதுகள் 2023க்கு, கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமான ஒவ்வொரு மாடல் கார் பைக்குகளும் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறது. இந்த வாகனங்களிலிருந்து விருது பெறும் வாகனங்களை தேர்வு செய்வதற்காக நவி மும்பை பகுதியில் ஏப்ரல் 12 மற்றும் 13ம் தேதிகளில் தேர்வுகள் நடக்கவுள்ளன.
இந்த தேர்வுக்கு 7 பேர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு:
1. அமித் சங்கானி - எடிட்டர் மோட்டோராய்ட்ஸ்
2.ஆயூஷ் ஜெயின் - எடிட்டர் இந்தியன் டார்க்
3.கௌரவ் யாதவ் - எடிட்டர் காடிவாடி
4. ஜோபோ குருவில்லா - எடிட்டர், டிரைவ்ஸ்பார்க்
5.நரேந்திர ஷர்மா - எடிட்டர் கியர்ஃபிலிக்
6. ரோஹித் குரானா - எடிட்டர் கார்பிளாக் இந்தியா
7.ரோஷன் ஜோசப் - எடிட்டர், பைலட் ஆன் வீல்ஸ்

இதற்கு ஜூரியாக அறிவிக்கப்பட்ட பிஜூ நாயர் தவிர்க்க முடியாத காரணங்களால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023 மொத்தம் 4 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. தயாரிப்பு, தனிநபர் மற்றும் குழு, தொழிற்நுட்பம், விளம்பரம் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இது குறித்த விபரங்கள் பின் வருமாறு
தயாரிப்பு பிரிவு விருதுகள்:
*சிறந்த கார்
*சிறந்த பைக்
*சிறந்த ஸ்கூட்டர்
*சிறந்த 4வீலர் இவி
*சிறந்த 2வீலர் இவி
*சிறந்த பிரிமியம் கார்
*சிறந்த பிரிமியம் பைக்

தனிநபர் மற்றும் குழு பிரிவு விருதுகள்:
*சிறந்த மோட்டார் ஸ்போர்ட் பெர்சனாலிட்டி
*சிறந்த கிராப் காம் டீம்
*சிறந்த ஆட்டோமொட்டிவ் பெர்சனாலிட்டி
*சிறந்த பிஆர் டீம்
தொழிற்நுட்ப பிரிவு விருதுகள்:
*சிறந்த ஆட்டோமொட்டிவ் தொழிற்நுட்பம்
விளம்பர பிரிவு விருதுகள்:
*சிறந்த ஆட்டோமொட்டிவ் விளம்பர பிரச்சாரம்
இந்த விருது வழங்கும் விழா ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. முன்னதாக விருதுக்கான வாகனங்களை தேர்வு செய்யும் நிகழ்வு நவி மும்பையில் நடக்கிறது. இதில் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸ், பிரேக் டெஸ்டிங், வாகனத்தை கையாளும் முறை உள்ளிட்ட பல விஷயங்கள் டெஸ்ட் செய்யப்படவுள்ளன.

இந்த டெஸ்டில் எடுக்கப்படும் தரவுகளை சென் மைக்ரோ சிஸ்டம் டேட்டா டெஸ்டிங் மூலம் கையாண்டு தவறில்லாத முடிவுகளை பெறவுள்ளது. இதற்காக அந்நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் சமந்த், நேரடியாக டெஸ்டிங் செய்யும் இடத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த ஜூரி தேர்வை மார்கெட்ஸ் &மார்கெட்ஸ் நிறுவனம் ஆரம்பம் முதல் கடைசி வரை கண்காணிக்கவுள்ளது.
இந்த ஜூரி தேர்வில் மொத்தம் 13 விதமான டெஸ்டிங்கள் நடக்கவுள்ளது. அதில் வரும் முடிவுகளை பொருத்தே இந்த விருதுக்கான வாகனங்கள் செய்யப்படும். ஃபாஸ்டர் விருதுகள் இந்தியாவின் ஆட்டேமொபைல் துறையின் ஒரு முக்கியமான விருதாக மாறியுள்ளது.
இது குறித்து ஃபாஸ்டர் அமைப்பின் சேர்மன் அமித் சங்கானி கூறுகையில்,"இந்த விருதை வழங்க முடிவு செய்தபோது நம்பகத்தன்மை வாய்ந்த, எந்த பக்கமும் சாராத விருதாக வழங்க முடிவு செய்தோம். இதன் மூலம் சிறந்த வாகனங்களை மக்கள் தேர்ந்து எடுக்க உதவி செய்ய நினைக்கிறோம்.
இதற்காக அனைத்து வகையிலும் வாகனங்களை டெஸ்ட் செய்து சிறந்த வாகனங்களுக்கு கெளரவமான விருதை வழங்கவிருக்கிறோம். இதற்காக ஃபாஸ்டரில் இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்டோமொபைல் செய்தி வெளியீட்டாளர்கள் இணைந்து ஒருங்கிணைந்த குரலாக, கார் மற்றும் பைக் வாங்குபவர்களுக்கு முடிவை எடுக்க உதவி செய்யவிருக்கிறோம்.
இந்தியாவின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த வாகனங்களுக்கான விருதுகளாக இவை இருக்கும்" என்றார்.
இந்த அமைப்பின் செயலாளர் நரேந்திர ஷர்மா கூறுகையில்,"ஃபாஸ்டர் ஆட்டோ விருதுகளின் நோக்கமே சிறந்த வாகனங்களுக்கான விருதை வழங்கி அந்த கேட்டகிரியில் வாகனம் வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வை அடையாளம் காட்டுவதுதான். இதற்காக 6 மொழிகளில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் இணைந்துள்ளோம். ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023 இந்திய மக்களுக்குப் பயனுள்ள ஒரு விருதாக இருக்கும்" என்றார்.
இந்த விருதுக்கு டைட்டில் ஸ்பான்ஸரான ஏசர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் வங்கதேச மார்கெட்டிங் பிரிவு தலைவர் சூரஜ் பாலகிருஷ்ணன் கூறுகையில்,"ஃபாஸ்டர் விருதுகள் 2023க்கு டைட்டில் ஸ்பான்ஸராக இருப்பதில் சந்தோசப்படுகிறோம். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து பல மைல்கற்களை பதித்து வரும் நிறுவனமான ஏசர், இந்த விருதுகளுக்கு ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறது. உலகின் சிறந்த ஆட்டோமொபைல்களின் சாதனைகளை கொண்டாட தயாராகவுள்ளோம். மறக்க முடியாத தருணத்திற்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.
இந்தியாவில் கார், பைக் வாங்குபவர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கும் முன்பு டிஜிட்டல் மீடியாவை ஆய்வு செய்கின்றனர். அதை வைத்தே தாங்கள் எந்த வாகனத்தை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆட்டோமொபைல் தகவல்கள் இருந்தாலும் அதில் பல போலியான தகவல்களும் இருக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் ஒரு நம்பகதன்மையை உருவாக்கி, தரமான ஆட்டோமொபைல் ஜர்னலிசத்தை மக்களுக்கு எந்த வித சார்பும் இல்லாமல் எடுத்து செல்வதே இந்த ஃபாஸ்ட்ர் அமைப்பின் நோக்கம். அதற்காகவே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இது முற்றிலும் வாகனத்தின் செயல்பாடு மற்றும் திறனை ஆய்வு செய்து வழங்கப்படும் விருதுகள் ஆகும். எந்தெந்த வாகனங்கள் இந்த விருதை பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்
இந்தியாவில் கார் வாங்குபவர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கும் முன்பு டிஜிட்டல் மீடியாவை ஆய்வு செய்கின்றனர். அதை வைத்தே தாங்கள் எந்த வாகனத்தை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் ஆட்டோமொபைல் தகவல்கள் இருந்தாலும் அதில் பல போலியான தகவல்களும் இருக்கின்றன.
இதனால் மக்கள் மத்தியில் ஒரு நம்பகதன்மையை உருவாக்கி, தரமான ஆட்டோமொபைல் ஜர்னலிசத்தை மக்களுக்கு எந்த வித சார்பும் இல்லாமல் எடுத்து செல்வதே இந்த ஃபாஸ்ட்ர் அமைப்பின் நோக்கம். அதற்காகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் வாகனத்தின் செயல்பாடு மற்றும் திறனை ஆய்வு செய்து வழங்கப்படும் விருதுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வாகனங்கள் இந்த விருதை பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications









