ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023 முடிவுகள் இன்று வெளியாகிறது!
ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் 2023க்கான வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று (மே 3) வெளியாகவுள்ளது. நவி மும்பையில் நடந்த ஜூரி சுற்றின் முடிவுகளை பொறுத்து விருதுகள் வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
ஃபாஸ்டர் என்பது இந்தியாவில் உள்ள ஆன்லைன் ஆட்டோமொபைல் தளங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 6 மொழிகளில் ஆட்டோமொபைல் செய்திகளை வழங்கி வரும் மீடியாக்கள் ஒன்றிணைந்து, இந்த ஃபாஸ்டர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் விருதுகளை வழங்கி வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டிற்கான விருதில் 2022ம் ஆண்டு அறிமுகமான கார், பைக்குகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில், நவி மும்பையில் ஜூரி சுற்று நடைபெற்றது. இந்த விருதுகளுக்கு ஜூரிகளாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு
- அமித் சங்கானி - எடிட்டர் மோட்டோராய்ட்ஸ்
- ஆயூஷ் ஜெயின் - எடிட்டர் இந்தியன் டார்க்
- கௌரவ் யாதவ் - எடிட்டர் காடிவாடி
- ஜோபோ குருவில்லா - எடிட்டர், டிரைவ்ஸ்பார்க்
- நரேந்திர ஷர்மா - எடிட்டர் கியர்ஃபிலிக்
- ரோஹித் குரானா - எடிட்டர் கார்பிளாக் இந்தியா
- ரோஷன் ஜோசப் - எடிட்டர், பைலட் ஆன் வீல்ஸ்

இதில் ஜூரியாக அறிவிக்கப்பட்டிருந்த பிஜூ நாயர் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த விருதுக்கான ஜூரி குழுவில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்த ஜூரி குழுவினர் சேர்ந்து ஏசர் ஃபாஸ்டர் 2023க்கான விருதுகளை முடிவு செய்யவுள்ளனர். மொத்தம் 4 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. தயாரிப்பு, தனிநபர் அல்லது குழு, தொழிற்நுட்பம், விளம்பரம் என இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் தயாரிப்பில் 7 விருதுகளும், தனிநபர் அல்லது குழு பிரிவில் 4 விருதுகளும், தொழிற்நுட்ப பிரிவில் ஒரு விருதும், விளம்பர பிரிவில் ஒரு விருதும் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்காக இந்தியாவின் முன்னணி லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பாளரான ஏசர் நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸராக இணைந்துள்ளது.உலகின் முன்னணி ஆக்ஷ்ன் கேமரா தயாரிப்பாளரான கோப்ரோ மற்றும் டபிள்யூடி 40 ஆகிய நிறுவனங்கள் இணை ஸ்பான்ஸர்களாக இணைந்துள்ளனர்.
இந்த விருதில் ஜூரிகளின் தரவுகளை சென் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் டேட்டா டெஸ்டிங் தொழிற்நுட்பம் மூலம் கையாண்டு தவறில்லாத துல்லியமான முடிவுகளை வெளி கொண்டு வர உதவி செய்துள்ளது. இந்த ஜூரி தேர்வை மார்கெட்ஸ் மற்றும் மார்கெட்ஸ் நிறுவனம் ஆரம்பம் முதல் கடைசி வரை கண்காணிக்கிறது.
இந்த தேர்வில் ஈடுபடும் ஜூரிகள் ஒவ்வொரு வாகனத்தையும் 13 விதமாக டெஸ்டிங் செய்துள்ளனர். அதன் செயல்திறன், பிரேக்கிங் என பலவிதமான டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருது பட்டியல் விபரம் வருமாறு:
தயாரிப்பு பிரிவு விருதுகள்:
- சிறந்த கார்
- சிறந்த பைக்
- சிறந்த ஸ்கூட்டர்
- சிறந்த 4வீலர் இவி
- சிறந்த 2வீலர் இவி
- சிறந்த பிரிமியம் கார்
- சிறந்த பிரிமியம் பைக்
.தனிநபர் மற்றும் குழு பிரிவு விருதுகள்:
- சிறந்த மோட்டார் ஸ்போர்ட் பெர்சனாலிட்டி
- சிறந்த கிராப் காம் டீம்
- சிறந்த ஆட்டோமொட்டிவ் பெர்சனாலிட்டி
- சிறந்த பிஆர் டீம்
தொழிற்நுட்ப பிரிவு விருதுகள்:
- சிறந்த ஆட்டோமொட்டிவ் தொழிற்நுட்பம்
விளம்பர பிரிவு விருதுகள்:
- சிறந்த ஆட்டோமொட்டிவ் விளம்பர பிரச்சாரம்
இந்தியாவில் வாகனம் வாங்குபவர்கள் மத்தியில் பல தவறான தகவல்கள் அல்லது போலியான விஷயங்கள் புகுத்தப்படுகிறது. மக்கள் இதை தவிர்த்து சரியான வாகனங்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் தவறான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு அடைய முடியும் என இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். எந்தெந்த வாகனங்கள் எல்லாம் விருதை தட்டி செல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்பதை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications









