Mohanlal Range Rover காரின் விலை இவ்வளவா! ரஜினிகாந்தே வாங்க யோசிக்கும் காரை அசால்டாக வாங்கிய மோகன்லால்!
பல கோடிகளை சம்பளமாக வாங்கினாலும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழக் கூடிய நபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார், நடிகர் ரஜினிகாந்த். இவர் இப்போதும் தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா (Toyota Innova) போன்ற மிகவும் சாதாரணமான காரையே பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற திரை நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இதுவும் மிக சாதாரணமான காரே ஆகும். இந்தியாவில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர்கள்கூட பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி என மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிகளை வாரி இறைப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த மாதிரியான சூழலில் சாதாரண உடை மற்றும் எளிய கார் என முற்றிலும் தன்னை எளிமையான மனிதனாக காட்சிப்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு காசு, பணம் கைகளில் இருந்தாலும், எப்படி ஏழ்மையாக வாழ்வது என்பதற்கு மிக சிறந்த உதாரணமாகவும் அவர் இருக்கின்றார்.
இவருக்கு அப்படியே நேர் எதிரானவராக இருக்கின்றார், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால். இவரிடத்தில் ஏற்கனவே நிறைய சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். ஓர் காரை பிடித்துவிட்டால் அந்த காரை என்ன விலையாக இருந்தாலும் யோசிக்காமல் வாங்கக் கூடிய நபராகவும் அவர் இருக்கின்றார்.

அந்தவகையிலேயே நடிகர் மோகன்லால் சற்றும் யோசிக்காமல் புதிதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.39 கோடிகள் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே வாங்கி அனைவரையும் மோகன்லால் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.
தன்னுடைய கராஜை அலங்கரிக்கும் விதமாக இந்த புதிய காரை அவர் வாங்கி இருக்கின்றார். கொச்சினில் உள்ள முத்தூட் ஜேஎல்ஆர் லேண்ட் ரோவர் கார் விற்பனையாளர் வாயிலாகவே தனக்கான ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரை மோகன்லான் வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோ-பயோகிராஃபி ஆகும்.

இது ஓர் அதிக பவர்ஃபுல் எஞ்ஜினைக் கொண்ட கார் மாடல் ஆகும். இதனால் மணிக்கு 255 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இத்தகைய சூப்பரான மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய காரையே மோகன்லால் தற்போது 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி இருக்கின்றார்.
இந்த காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 530 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவி கார் அதிக லக்சூரி வசதிக் கொண்டதும்கூட. மிக அதிக சொகுசான இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த இருக்கைகளில் ஹீட், வெண்டிலேட் வசதி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதுதவிர, மசாஜ் செய்யும் வசதி, ஹெட்ரெஸ்ட், கால்களுக்கான ரெஸ்ட் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இருக்கையின் பிரீமியம் தோற்றத்திற்காக செமி-அனிலைன் லெதர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்களைக் கொண்டதாக மோகன்லால் வாங்கி கார் காட்சியளிக்கின்றது.
13.1 அங்குல தொடு திரை, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன், அடாப்டீவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஏர் சஸ்பெஷன். அடாப்டீவ் டைனமிக்ஸ், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் மெரிடியின் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் ஆட்டோபயோகிராஃபியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளை கொண்ட காரையே மோகன்லால் வழங்கி இருக்கின்றார். இத்தகைய அதிகபட்ச வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதன் விலையும் மிக மிக அதிகமாகக் காட்சியளிக்கின்றது. மோகன்லால் இடத்தில் கியா கார்னிவல் உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









