ராஜா மரியாதை உடன் காரை டெலிவரி எடுத்த நடிகர் ரமேஷ் அரவிந்த்! பழைய நடிகரா இருந்தாலும் மவுசு வேற லெவல்ல இருக்கு!
தென்னிந்திய திரை உலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ரமேஷ் அரவிந்த்-ம் ஒருவர். இவர் நடிகர் மட்டுமல்லாது, இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக ரோல்களை மேற்கொண்டிருக்கின்றார். கன்னடா மற்றும் தமிழ் என இதுவரை 140 க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்திருக்கின்றார்.
தமிழில் டூயட், சதிலீலாவதி, பஞ்ச தந்திரம் என பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். மேலும், நடிகர் கமலஹாசனை வைத்து 'உத்தம வில்லன்' என்கிற படத்தையும் அவர் இயற்றி இருக்கின்றார். இத்தகைய ஜம்பவான் நடிகரே தற்போது மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் சொகுசு காரை டெலிவரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவர் சொகுசு காரை டெலிவரி எடுக்கும் வீடியோவை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான 'சுந்தரம் மோட்டார்ஸ்', அவர்களின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வீடியோவில் ரமேஷ் அரவிந்தும், அவரது குடும்பத்தினரும் இணைந்து சொகுசு காரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் சொகுசு காரையே ரமேஷ் அரவிந்த் தற்போது வாங்கி இருக்கின்றார். ரமேஷ் அரவிந்திற்கு ராஜ மரியாதை வழங்கி அந்த கார் டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தலைப் பாகை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும் அவரை ஷோரூம் ஊழியர்கள் மரியாதைச் செய்திருக்கின்றனர். மேலும், பூங்கொத்தும் கொடுக்கப்பட்டது. இவ்வாறே சொகுசு கார் அவருக்கு டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 75 லட்சம் ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1 கோடியை நெருங்கும். அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வு எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே ரூ. 1.06 கோடிக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிக உயரிய விலைக் கொண்ட சொகுசு காரையே ரமேஷ் அரவிந்த் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இ200, இ 220டி மற்றும் இ 350டி ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் இ200 மட்டுமே பெட்ரோல் மோட்டார் ஆகும். மற்ற இரண்டும் டீசல் எஞ்ஜின்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இ200 இல் பயன்படுத்தப்பட்டு இருப்பது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகும்.
இது அதிகபட்சமாக 197 எச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் இ 200டி தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டார் ஆகும். இது 194 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். கடைசியாக இருக்கும் இ 350டி-யே இருப்பதிலேயே அதிக பவர்ஃபுல் மோட்டாராக இருக்கின்றது.
இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மோட்டார் ஆகும். இது, 286 எச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார்களுடன் 9ஜி-ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. எஞ்ஜினைப் போலவே இந்த கார் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளிலும் நம்மை அசர வைக்கும் வகையில் இருக்கின்றது.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் திரை பல்வேறு பயன்பாட்டு வசதிகளுடன் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கின்றது. இரு 12.36 அங்குல திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஒன்று டிஜிட்டல் கன்சோலாகவும், மற்றொன்று இன்ஃஃபோடெயின்மென்ட் திரையாகவும் செயல்படும். இன்ஃபோடெயின்மென்ட் திரையின் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்காக எம்பியூஎக்ஸ் யுஐ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சத்தின் வாயிலாக நேச்சுரல் வாய்ஸ் கன்ட்ரோல் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் வாயிலாக குரல் கட்டளையை விட்டு ஏசி போன்ற சில முக்கிய அம்சங்களைக் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதுதவிர, வெயிக்கிள் மானிட்டரிங், நேவிகேஷன், எமர்ஜென்சி கால் சிஸ்டம், ஜியோ ஃபென்சிங், வாகனத்தைக் கண்டறியும் வசதி என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் பென்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், ஆக்டீவ் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பார்க்ட்ரானிக் எனும் ஆக்டீவ் பார்க்கிங் அசிஸ்டன்ஸ் அம்சம், முழங்காலுக்கான ஏர் பேக், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களை பென்ஸ் அதன் இ-கிளாஸ் காரில் வழங்கி இருக்கின்றது. இதன் லாங் வீல் பேஸ் வேரியண்டையே ரமேஷ் அரவிந்த் தற்போது வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ரமேஷ் அரவிந்த் தமிழ் திரையலகில் பெரிய அளவில் தோன்றவில்லை என்றாலும், கன்னடா திரையுலகில் சிறப்பு கதாபாத்திரம், கௌரவ நட்சத்திரம் என பல சிறப்பு ரோல்களை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையிலேயே கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கி அனைவரையும் அவர் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








