இவருக்கு தமிழ்நாட்ல ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குதே! இவர் இப்படியொரு காரை வாங்கிட்டாரா?

தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் ரவி தேஜா புதிதாக பிஒய்டி அட்டோ 3 காரை வாங்கியுள்ளார். அதற்காக அவர் ஃபேன்ஸி நம்பரையும் வாங்கியுள்ளார். இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரவிதேஜா, இவர் கார் கலெக்ஷனில் பெயர் போனவர். இவரிடம் ஏராளமான கார்கள், இருக்கிறது. முக்கியமாக பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என ஏகப்பட்ட சொகுசு கார்களை வாங்கி தனது கரோஜ்ஜில் வைத்துள்ளார். இவரிடம் உள்ள கார் கலெக்ஷனை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும். அந்த அளவிற்கு சூப்பரான கார்களை எல்லாம் இவர் வைத்திருக்கிறார்.

Ravi Teja BYD Atto 3

இந்நிலையில் இவர் தனது கராஜ்ஜில் முதன் முறையாக ஒரு எலெக்ட்ரிக் காரை சேர்த்துள்ளார். சீன நிறுவனமான பிஓய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை சமீபத்தில் இவர் வாங்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமல்ல இவர் இந்த காருக்கு இவர் ஃபேன்ஸியான நம்பரையும் வாங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இவர் இந்த காரை பதிவு செய்துள்ளார். அம்மாநிலத்தில் பேன்ஸி நம்பரை வாங்க இ-ஏலத்தில் பங்கேற்க வேண்டும். அந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கே இந்த நம்பர் வழங்கப்படும். அதில் நடிகர் ரவி தேஜாவும் கலந்து கொண்டு தனது பிஒய்டி அட்டோ 3 காருக்கு 2628 என்ற நம்பரை வாங்கியுள்ளார்.

Ravi Teja BYD Atto 3

இந்த நம்பரை அவர் ரூ17,628க்கு வாங்கியுள்ளார். தனது பிஓய்டி அட்டோ காரை ரூ34.49 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் வாங்கிய காரை பற்றி காணும் முன் அவரது புக் செய்தநம்பரை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது அதைபற்றி காணலாம்.

நடிகர் ரவிதேஜா 2628 என்ற நம்பரை ஒன்றும் சும்மா வாங்கவில்லை. இந்த நம்பர் அவருக்கு லக்கி நம்பராக கருதுகிறார். இந்த நம்பரின் கூட்டு தொகை 9, பலருக்கு 9 என்ற எண் லக்கி என்பது போல ரவி தேஜாவும் இந்த 9 என்ற எண்ணை லக்கி நம்பராக நினைக்கிறார். இந்த நம்பர் அவருக்கு பாசிடிவ் எனர்ஜியையும், நல்ல விஷயங்களையும் கொண்டு வரும் என நம்புகிறார்.

பிஒய்டி அட்டோ 3 காரை பொருத்தவரை ஒரு பிரிமியம் ரக எஸ்யூவி கார். இது 5 சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் கார். இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்று . இந்த காரில் 60.48 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த காரின் மோட்டார் 201பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 80 கிலோ வாட் டிசி அல்லது 7.2 கிலோ வாட் ஏசி சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இந்த காரை தற்போது ரவி தேஜா வாங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை பெரும் பிரபலங்கள் வாங்குவதில் ஆச்சரியமில்லை அதிக விலை மதிப்பு கொண்ட கார் இது. இருந்தாலும் சிறப்பான அம்சங்களா தனித்துவம் பெற்ற கார். சீன நிறுவனம் இந்தியாவில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி மிகப்பெரிய அளவில் தனது விற்பனையை விஸ்தரிப்பு செய்ய முடிவு செய்து அதில் ஒரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 27, 2023, 16:17 [IST]
English summary
Actor ravi teja buys all new byd atto 3 electric car and a fancy number
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+