கோயிலுக்கு கருப்பு நிற காரில் வந்திறங்கிய சமந்தா... இதுக்காகதான் வந்தாங்களா! வைரலாகும் வீடியோ!
முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கருப்பு நிற காரில் கோவிலுக்கு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அது என்ன கார்?, ஏன் இந்த திடீர் விசிட்?, என்பது உள்ளிட்ட சுவாரஷ்யமான தகவல்களைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் நடிகை சமந்தா. மயோசிட்டிஸ் எனும் அரிய வகை வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது தீவிர சிகிச்சை எடுத்து குணமாக தொடங்கி இருக்கின்றார். இதைத்தொடர்ந்து, திரைப்படங்களிலும் அவர் பிசியாக தொடங்கிவிட்டார்.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் கருப்பு நிற காரில் கோவில் ஒன்றிற்கு வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த வீடியோவை சமந்தாவே அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தெலுங்கில் உருவாகி இருக்கும் சகுந்தலம் திரைப்படத்தில், நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இது ஓர் வரலாற்று திரைப்படம் ஆகும். இந்த புதிய திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி திரை அரங்குகளில் திரையிடப்பட இருக்கின்றது. இப்படம் வெற்றி அடைய வேண்டியே அவர் சிறப்பு பூஜை செய்ய கோவிலுக்கு வந்திருக்கின்றார்.

அப்போதே, தன்னுடைய கருப்பு நிற காரை பயன்படுத்தி அவர் வந்திருக்கின்றார். காரில் வரும்போது படம் குறித்தும், தனக்கு இருக்கும் தெய்வ நம்பிக்கை குறித்தும் அவர் பேசி இருப்பார். அந்த வீடியோவையே அவர் தற்போது பகிர்ந்திருக்கின்றார். நடிகை சமந்தா பயன்படுத்தியது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி ரக காராகும்.
இது மிக மிக அதிக சொகுசு வசதிகள் நிறைந்த லக்சூரி வாகனம் ஆகும். வெளிப்புறம் கருப்பு நிறத்தாலும், உட்புறம் சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்ததாகவும் இருக்கும். இந்த பிரீமியம் நிறத்திற்கே பலர் இந்த கார் மீது அடிமையாக இருக்கின்றனர். சமந்தாவிடம் இந்த சொகுசு கார் மட்டும் இல்லைங்க இன்னும் பல ஆடம்பர வகை கார்கள் அவரிடம் பயன்பாட்டில் இருக்கின்றன.

போர்ஷே 718 கேமேன் ஜிடிஎஸ், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 உள்ளிட்ட மிக மிக விலையுயர்ந்த கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சிறப்பு பூஜைக்காக ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவியையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார். ஸ்ரீ பெத்தம்மா தல்லி கோயிலுக்கே அவர் சென்றிருக்கின்றார். இந்த கோவில் தெலங்கானா மாநிலத்திலேயே இருக்கின்றது.
புதிய திரைப்படம் வெற்றிகரமாகவும், நல்ல வசூலை பெற வேண்டியே இந்த கோவிலுக்கு திடீர் விசிட்டை அவர் கொடுத்திருக்கின்றார். அவர் பயன்படுத்திய ஆடம்பர காரில் சொகுசு வசதிகள் பல இருக்கின்றன. குறிப்பாக, மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட 825 வாட் மெரெடிசியன் சவுண்ட் சிஸ்டம், அனைத்து இருக்கைகளுக்குமான பெரிய பெரிய திரைகள், பனோரமிக் சன்ரூஃப் என எக்கசக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் 5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல், 4.4 லிட்டர் வி8 டீசல் உள்ளிட்ட ஆகிய மோட்டார் தேர்வுகளிலும் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்போது இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரே விற்பனையில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications