பழம்பெரும் நடிகைகிட்ட இவ்ளோ விலை உயர்ந்த காரா! அடேங்கப்பா இந்த வயசுலையும் எவ்ளோ அழகா இருக்காங்க!

இந்தியாவின் பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் ரேகா. நாங்கள் பாலிவுட் நடிகை ரேகாவைப் பற்றியே இங்கு பேசி கொண்டிருக்கின்றோம். 68 வயதான இந்த பழம்பெரும் நடிகை இப்போதும் இளமையான ஓர் நபராக வலம் வந்துக் கொண்டு இருக்கின்றார். இன்றைய கால நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் இளமையாகவும், அழகாகவும் அவர் காட்சியளிக்கின்றார்.

இவர் முன்னாள் ராஜ்ய சபா எம்பி-யும் ஆவார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரே மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கப்பல் போன்ற அதிக ஆடம்பரம் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த ஓர் அழகான காரையே நடிகை ரேகா வாங்கி இருக்கின்றார்.

Rekha buys bmw i7

அவர் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு செடான் ரக காராகும். இது ஓர் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகம். இந்த காரின் விலை ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள இந்த காரில் ரேகா வந்ததை அடுத்தே அவர் ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்கி இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ரேகா வாங்கி இருக்கும் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் கார் சேம்பைன் கிரே ஷேடில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான நிறத் தேர்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

Rekha bmw i7

வெளிப்புறத்தைப் போலவே அந்த காரின் உட்புறமும் அதிக கவர்ச்சியான மற்றும் பிரீமியம் நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், காரின் உட்பக்கம் பழுப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் நீளமான மற்றும் அதிக லக்சூரி அம்சங்களைக் கொண்ட சொகுசு எலெக்ட்ரிக் கார் இது என்பது கவனிக்கத்தகுந்தது.

வளைவான டிவி போன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்த எலெக்ட்ரிக் காரில் 8கே தொழில்நுட்ப வசதிக் கொண்ட 31.3 அங்குல திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை சினிமாவில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர இன்னும் சில குட்டி குட்டி திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 5.5 அங்குல தொடுதிரை கன்ட்ரோல் கதவு பேனல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை வாயிலாக இன்ஃபோடெயின்மென்ட், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை பயணிகளால் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும்.

இதுதவிர, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் இருக்கைகள் போன்ற அம்சங்களையும் இந்த காரில் பிம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இந்த இருக்கை ஞாபக சக்தி மற்றும் மாசஜ் செய்யும் ஆகியவற்றைக் கொண்டது. இருக்கையின் ஞாபக சக்தியின் வாயிலாக ஒரே க்ளிக்கில் இருக்கையை தேவைக்கேற்ப பொசிஷனுக்குக் கொண்டு வந்துவிட முடியும்.

இத்தகைய மிக சூப்பரான சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே பழம் பெரும் நடிகை ரேகா தற்போது வாங்கி இருக்கின்றார். இவர் எப்போது வாங்கினார் என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இவரின் இந்த கொள்முதல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகையும் திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ தூரம் முதல் 625 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மின் மோட்டாரை பொருத்தவரை இரண்டு மோட்டார்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஒன்று முன் பக்க ஆக்ஸிலிலும், மற்றொன்று பின் பக்க ஆக்ஸிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இணைந்து 544 பிஎஸ் பவர் மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இந்த காரை ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் என இரு விதமான ஆப்ஷன்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்று ஏகப்பட்ட சிறப்பு வசதிகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை ரூ. 2.03கோடி ஆக இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மாபெரும் தொகையை கொடுத்தே ரேகா அக்காரை வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 14, 2023, 21:34 [IST]
English summary
Actress and ex mp rekha buys bmw i7 electric luxury sedan here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+