காரா இல்ல கப்பலா.. 2 கோடி ரூபா கொடுத்து சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை.. இவங்க யாருனு உங்களுக்கு தெரியுதா?

பாலிவுட் திரை உலகின் முன்னணி மற்றும் நட்சத்திர நடிகைகளில் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ்-ம் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் மட்டும் அல்ல சொகுசு கார்களை வைத்திருப்பதிலும் பெரிய ஆளாக இருக்கின்றார். ஆமாங்க இந்த நடிகை இடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே மேலும் ஓர் விலை உயர்ந்த லக்சூரி காரை தன்னுடைய சொகுசு கார் சேகரிப்பில் அவர் இணைத்திருக்கின்றார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அது என்ன கார் என கேட்கின்றீர்களா?, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.

Jacqueline fernandez buys bmw i7

அதாவது, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் லேட்டஸ்டாக வாங்கி இருக்கும் காரின் விலை என்ன?, அதில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன? மற்றும் அவர் அந்த காரை வாங்கியது எப்படி தெரிய வந்தது? என்பது போன்ற சுவாரஷ்யமான தகவல்களையேக் காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) சொகுசு எலெக்ட்ரிக் காராகும். இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த லக்சூரி கார் இந்தியாவில் ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

சமீபத்தில் இந்த காரில் ஜாக்குலின் பயணித்ததை வைத்தே அவர் அக்காரை வாங்கி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மிகவும் ஆடம்பரமான மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த காராக பிஎம்டபிள்யூ, ஐ7 செடான் எலெக்ட்ரிக் காரை வடிவமைத்திருக்கின்றது.

இதன் தோற்றம் கார் காதலர்களைக் கவரக் கூடியதாகவே இருக்கின்றது. சொல்லப் போனால் முதல் பார்வையிலேயே மனதை மயக்கின்ற வகையிலான வடிவமைப்பை ஐ7 பெற்றிருக்கின்றது. இந்த கவர்ச்சியான தோற்றத்தில் மயங்கியே நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார்.

இந்த காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் வெற லெவல் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் வளைவான திரைகள் மனதை கொள்ளைச் செய்கின்றன. 12.3 அங்குலத்தில் ஓர் திரையும், 14.9 அங்குலத்தில் ஓர் திரையும் என மொத்தம் இரு திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, காரின் உட்பகுதியில் 31.3 அங்குல 8கே திறன் கொண்ட திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை அமேசான் ஃபையர் டிவி வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், பின் பக்க கதவுகளில் 5.5 அங்குலத்தில் தொடுதிரைகள் வழங்கப்பட்டிருக்கும். இதனை பின்னிருக்கையாளர்கள் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டெம்ப்ரேச்சர்களை செட்டிங்குகளை மாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கார் தொழில்நுட்ப வசதியில் மட்டுமில்லைங்க ரேஞ்ஜ் தருவதிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

இந்த ஐ7 சொகுசு கார் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ தொடங்கி 625 கிமீ வரையில் ரேஞ்ஜ் தருகின்றது. இதற்காக 101.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த கார் மணிக்கு 239 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைப் பெற்றிருக்கின்றது.

இந்த மோட்டாரால் வெறும் 4.7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று ஏகப்பட்ட சிறப்புகளைத் தாங்கிய காராக பிஎம்டபிள்யூ ஐ7 காட்சியளிக்கின்றது. இதனால்தான் செல்வந்தர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் இந்த காருக்கு நல் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாக்குலின் ஃபெர்னான்டஸைப் போலவே இன்னும் பல திரை நட்சத்திரங்கள் இந்த எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதன் சொகுசு வசதிகளுக்காகவும், ஒரு சிலர் இந்தியாவின் பசுமை இயக்கத்தில் பங்களிக்கும் இந்த கார் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், இது ஓர் பூஜ்ஜியம் உமிழ்வு திறன் கொண்ட எலெக்ட்ரிக் காராகும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 11, 2023, 8:30 [IST]
English summary
Actress jacqueline fernandez seen with brand new bmw i7 electric car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+