Porsche 911 Turbo S சூப்பர் காரை வாங்கிய நடிகை! விராட் வாங்க தயங்கும் காரை வாங்கி அசத்திய பழம்பெரும் நடிகை!

விராட் கோலி மிகப் பெரிய வாகன காதலர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கிரிக்கெட் வீரர் அவருடைய விளையாட்டின் மீது வைத்திருப்பதை போலவே பல மடங்கு அதிக காதலை வாகனங்கள் மீதும் வைத்திருக்கின்றார். இதற்கு அவரிடம் இருக்கும் அரிய வகை மற்றும் விலை உயர்ந்த உயர் ரக வாகனங்களே சான்றாக இருக்கின்றன.

இத்தகைய வாகன மிகப் பெரிய வாகன காதலர் சூப்பர் கார்கள் பிடிக்காமல் போய்விட்டதாகக் கூறப்படுகின்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில்கூட இதையே அவர் கூறினார். குடும்பங்களுக்கு ஏற்ற எஸ்யூவி ரக காரையே அவர் வாங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் விராட்டின் சில சூப்பர் கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்கப்பட்டன.

Madhuri dixit

இதற்கான காரணம் இப்போதுதான் நமக்கு தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், இன்னும் பலர் சூப்பர் கார்களை வாங்க தயக்கம் காட்டுவதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழலில் பிரபல பாலிவுட் நடிகையான மாதுரி தீக்ஸித் சூப்பர் கார் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.

போர்ஷே நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் கார் மாடலான போர்ஷே 911 டர்போ எஸ் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் விலை ரூ. 3.08 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கலாம்.

Porsche 911 turbo s

அதிக சிறப்பு வாய்ந்ததே இந்த போர்ஷே 911 டர்போ எஸ் ஆகும். இதில் அதிகபட்சமாக 330 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகம் காரணமாக உலகின் அதிக வேகத்தில் செல்லும் சூப்பர் காபராக போர்ஷே 911 டர்போ எஸ் காட்சியளிக்கின்றது.

இந்த காரால் வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதீத வேக திறனுக்காக போர்ஷே 911 டர்போ எஸ் சூப்பர் காரில் ட்வின் டர்போசார்ஜட் 6 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 8 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய தரமான காரை மாதுரி தீக்ஸித் வாங்கியதன் காரணத்தினாலேயே ஒட்டுமொத்த இந்திய வாகன உலகின் பார்வையும் நடிகையின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

இந்த காரின் வெளிப்புற தோற்றம் அதிக வேகத்திற்கு வழிகொடுப்பதற்கு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் இந்த காருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறத்தை போலவே காரின் உட்பக்கத்திற்கும் ஸ்போர்ட்டியான தோற்றமே வழங்கப்பட்டு இருக்கின்றது. 18 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிக் கொண்ட லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கை, கார்பன் ஃபைபர் இன்செர்டுகள், உயர் ரக எம்பளங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்கள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, ஜிடி ஸ்போர்ட்ஸ் ஸ்டியரிங், போஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்கள் போர்ஷே 911 டர்போ எஸ் சூப்பர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் 20 அங்குல அல்லது 21 அங்குல அலாய் வீல் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நடிகர், நடிகைகள் கிட்ட எங்க இருந்துதான் பணம் வருமோ என நினைக்கின்ற அளவிற்கு அவர்கள் விலை உயர்ந்த ஆடம்பர ரக கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும், மாதுரி தீக்ஸித் வாங்கி இருக்கும் இந்த கார் தகவல் ஒட்டுமொத்த வாகன காதலர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 19, 2023, 14:19 [IST]
English summary
Actress madhuri dixit spotted with porsche 911 turbo s super car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+