3.5 கோடி ரூபா காரை அசால்டாக டிரக்கில் வீட்டுக்கு எடுத்து வந்த பிரபல நடிகை.. யாருயா அந்த நடிகை?
இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ரகுல் பிரீத் சிங்-கும் ஒருவர் ஆவார். இவருக்கே ரூ. 3.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர அம்சங்கள் நிறைந்த சொகுசு கார் ட்ரக் வாயிலாகக் கொண்டு வரப்பட்டு வீடு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, சொகுசு கார் டெலிவரிதான் செய்யப்பட்டு இருக்கின்றது.
பொதுவாக நம்மில் ஒருவர் காரை வாங்க வேண்டும் என்றால் மிகப் பெரிய திட்டமிடலைச் செய்ய வேண்டும். முதலில் எந்த நிறுவனத்தின் காரை வாங்க வேண்டும் என்கிற ஆய்வை மேற்கொள்ள வேண்டும். முன்னதாக ஒவ்வொரு ஷோரூமாக சென்று பிரபலமான கார் மாடல்களை தேர்வு செய்து அவற்றை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும்.

இதன் பின்னர் பிடித்த காரை தேர்வு செய்துவிட்டு, டீலரிடத்தில் உரிய ஆவணங்களைச் செலுத்த வேண்டும். இதற்கு கட்டாயம் நாம் ஷோரூம் சென்றே ஆக வேண்டும். அதேவேளையில், டெஸ்ட் டிரைவ் செய்ய ஷோரூம் போயே ஆக வேண்டும் என்கிறநிலை தற்போது தவிர்க்கப்பட்டு உள்ளது. வீடு தேடி வந்து கார்கள் டெஸ்ட் டிரைவ் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு நாம் ஆன்-லைன் அல்லது ஷோரூம் வாயிலாக டெஸ்ட் டிரைவிற்கு புக்கிங்கைக் கொடுக்க வேண்டும். ஆனால், விலை உயர்ந்த காரை வாங்கப் போகின்றீர்கள் என்றால் உங்களை இந்த கார் விற்பனையாளர்கள் ட்ரீட் செய்யும் விதமே வேறு ஆகும்.

நீங்கள் எதற்காகவும் ஷோரூமுக்கு சென்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஏன் ஆவணங்களைக்கூட அவர்கள் வீட்டிற்கே வந்து கலெக்ட் செய்துக் கொண்டு போவார்கள். இதுபோன்று இன்னும் பல ஆப்ஷன்கள் அவர்களுக்கு வழங்கப்படும். வேண்டும் ஷோரூமிலேயே டெலிவரி நிகழ்வு திருவிழாவைப் போல் வழங்கப்படும் அல்லது வீட்டிற்கே மிகுந்த பாதுகாப்பான முறையில் அந்த கார் டெலிவரி வழங்கப்படும்.
இந்த மாதிரியான ஓர் டெலிவரியே முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது செய்யப்பட்டு இருக்கின்றது. அவர் வாங்கி இருப்பது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடலான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS600) சொகுசு எஸ்யூவி ரக காராகும்.
இந்த காரை டீலர் டெலிவரி செய்த விதம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இப்படிதான் மிக மிக விலையுயர்ந்த கார்களை சொகுசு கார் விற்பனையாளர்கள் டெலிவரி செய்துக் கொண்டிருக்கின்றனர். மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரின் ஆன்-ரோடு விலை ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் ஆகும்.
இத்தகைய விலையுயர்ந்த காரையே ரகுல் பிரீத் சிங் வாங்கி இருக்கின்றார். தமிழ், தெலுங்கு என பலமொழி திரைப்படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். ஆகையால், இவருக்கு தீவிர ரசிக பட்டாளம் இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுகின்றது. மேலும், இவரின் இந்த சொகுசு கார் கொள்முதலுக்கு பலர் பாராட்டுக்குளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த காரின் பர்சேஸின் வாயிலாக பி-டவுன் நபர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார். சேம்பைன் பாட்டிலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கான சிறிய குளிர்சாதன பெட்டி, எலெக்ட்ரானிக் பனோரமிக் ஸ்லைடிங் சன் ரூஃப், வெண்டிலேட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதேபோல் பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆக்டீவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரானிக் எனும் அம்சமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆக்டீவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டீவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டீவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டீவ் ஸ்டியரிங் அசிஸ்ட் போன்றவையும் மேபேக் ஜிஎல்எஸ் 600இல் இடம் பெற்றிருக்கின்றன.
தொடர்ந்து, 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அடாப்டீவ் ஹை பீம் அசிஸ்ட், டவுன்ஹில் ஸ்பீடு ரெகுலேசன், கார் வாஷ் மோட், டிபிஎம்எஸ், ஏபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இத்தகைய தரமான சூப்பர் லக்சூரி எஸ்யூவி காரையே ரகுல் பிரீத் சிங் வாங்கி இருக்கின்றார்.
இந்த காரில் லேசான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 558 எச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வாயிலாக இது இயங்குகின்றது. இதன் ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி இருப்பது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஷாக்களிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை அம்பானி போன்ற முன்னணி தொழிலதிபர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications