விற்பனைக்கே வராத ஃப்ராங்க்ஸ் காரில் வந்திறங்கிய "கனவுக் கன்னி" ராஷ்மிகா! இந்த காரை சொந்தமா வாங்கிட்டாங்களா?
மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது பலேனோ காரின் கூபே கிராஸ் ஓவர் வடிவ எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாருதி நிறுனவத்திடம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கார்.
இந்த காரை மாருதி நிறுவனம் இந்த காருக்கு ஃப்ராங்க்ஸ் என பெயரிட்டுள்ளது. இந்த கார் அறிமுகமான பின்பு அந்த காருக்கான புக்கிங் குவியத் துவங்கியுள்ளது. தற்போது நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் இந்த காருக்கான புக்கிங்களை பெற்று வருகிறது. இந்த கார் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே சமூகவலைதளதங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் இந்த ஃப்ராங்க்ஸ் காரில் நடிகை "நேஷனல் க்ரஷ்" ராஷ்மிகா மந்தனா வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதைச் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துப் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் பாலிவுடன் என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ லேக்மீ ஃபேஷன் வீக் என்ற பெயரில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ இதில் புதிய மாருதி ஃப்ராங்க்ஸ் காரில் ராஷ்மிகா மந்தனா வந்திறங்கினார். இதை ஒரு அந்த ஷோவின் ஒரு பார்ட்டாக வைத்திருந்தனர்.
அவர் வந்திறங்கி ஃபேஷன் ஷோவில் நடக்கத் துவங்கினர். பின்னர் மெதுவாக கார் அங்கிருந்து நகர்ந்தது. அதன் பின்பு தொடர்ந்து பேஷன் ஷோ நடந்துள்ளது. அவர் காரிலிருந்து வந்திறங்கி காருடன் ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
மாருதி நிறுவனம் இந்த ஃப்ராங்க்ஸ் காரை பலேனோ என்ற ஹேட்ச் பேக் காரை அடிப்படையாகக் கொண்ட கிராஸ் ஓவர் காராக உருவாக்கியுள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் துவங்கிய நிலையில் தினமும் 250-300 புக்கிங்கள் குவிகிறது.
இந்த காரின் முன்பக்கத்தை பொருத்தவரை மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரின் லுக்கை கொடுக்கிறது. சைடு புரோஃபைலை பொருத்தவரை பலேனோ காரின் லுக்கில் இருக்கிறது. இந்த காரின் பின்புறம் எல்இடி டெயில் லைட் மற்றும் கனெக்டிங் எல்இடி பார் ஆகியன உள்ளன.
ஃப்ராங்க்ஸ் கிராஸ்ஓவர் கார் பலேனோவை விட மஸ்குலர் லுக்கில் இருக்கிறது. இந்த காரில் வீல் ஆர்ச் பகுதியில் உள்ள கருப்பு கிளாடிக் மற்றும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியன இந்த காருக்கு கிராஸ் ஓவர் லுக்கை கொடுக்கிறது. உட்புறத்தைப் பொருத்தவரை ஃப்ராங்க்ஸ் காரில் டூயல் டோன் தீம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இஸ்ன்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகிய பலேனோ காரை போலவே இருக்கிறது. மேலும் இந்த காரில் லெதர் அப்ஹோல்சரி, வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஃப்ளோட்டிங் டைப் டச் ஸ்கிரீன், ஸ்டிரீங் மவுண்டட் கண்டரோல்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டும் தான் இருக்கிறது. அதிலும் 2 ஆப்ஷன்கள் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் மற்ம் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் ஆகிய உள்ளன. இதில் பூஸ்டர் ஜெட் இன்ஜின் பலேனோ ஆர்எஸ் காருக்கு பிறகு நிறுத்தப்பட்ட நிலையில் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ இன்ஜினை பொருத்தவரை 100 பிஎஸ் பவரையும், 147 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் பொருத்தப்படுகிறது.
1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினை பொருத்தவரை 89 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. ஃப்ராங்க்ஸ் கார் தான் மாருதியிலேயே டர்போ இன்ஜின் உடன் வெளியாகவுள்ள ஒரே கார்.
இந்த ஃப்ராங்க்ஸ் காரின் விலை குறித்த தகவல்களை மாருதி நிறுவனம் வெளியிடவில்லை. இந்த காரின் விலை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது கிராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜின வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. வருங்காலத்தில் ஃப்ராங்க்ஸ் சிஎன்ஜி வெர்ஷனையும் எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications







