கிரெட்டா காரிலிருந்து பென்ஸ் காருக்கு மாறிய அடா ஷர்மா! தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாற்றமா
'தி கேரளா ஸ்டோரி' சமீப காலமாக ஒட்டுமொத்த இந்தியாவின் ஹாட் டாபிக்காக இந்த திரைப்படமே மாறி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்த படத்தில் நடித்ததன் காரணத்தினாலேயே அடா சர்மாவையும் சர்ச்சைகள் சுற்றிக் கொண்டன.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது முழுக்க முழுக்க வெறுப்புணர்வை காட்டும் வகையில் திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையும், ஒரு சில பகுதிகளில் வரவேற்பும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த படத்திற்கு எதற்கு தடை என்கிற கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்தின் திரையிடலுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த அடா சர்மாவின் வாழ்க்கையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, கடந்த காலங்களில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த இவர் தற்போது சற்றே லக்சூரியான வாழ்க்கைக்கு மாறி இருக்கின்றார். இதில் என்ன ஆச்சரியம் பொதுவா நடிகை மற்றும் நடிகர்கள் வாழ்க்கையில் இது சாதாரணம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அடா சர்மாவின் இந்த திடீர் வாழ்க்கை மாற்றம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

அடா சர்மா தற்போது மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு கார் பயன்பாட்டிற்கே மாறி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரின் மதிப்பு ரூ. 56 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. நடிகை சொகுசு கார் பயன்பாட்டிற்கு மாறியிருக்கும் வீடியோவை கார்ஸ் ஃபார் யூ எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டு இருக்கின்றது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக வந்தபோதே அவர் சொகுசு காருடன் காட்சியளித்திருக்கின்றார். அவர் பயன்படுத்தி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 250 மாடல் ஆகும். இது ஓர் சொகுசு எஸ்யூவி ரக காராகும். அடா சர்மா முன்னதாக பயன்படுத்தி வந்த கிரெட்டா எஸ்யூவியைக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனம் என இதைக் கூறலாம்.
மேலும், அதிக வேகத்தில் செல்லும் காராகவும் இந்த பென்ஸ் சொகுசு கார் காட்சியளிக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 250 சொகுசு காரில் 2143 சிசி, 4 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. 4 மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த மோட்டாருடன் பென்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது.
சமீபத்திலேயே அடா சர்மா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு பின்னரே சொகுசு கார் வாங்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காருக்கு அவருக்கு சொந்தமானதுதானா அல்லது அவருடைய நண்பர்களுக்கு சொந்தமானதா என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் சில தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அட சர்மா வாங்கிய கார் இது என்பது தெரிகின்றது.
செகண்ட் ஹேண்ட் சந்தையில் பாதிக்கும் குறைவான விலையில் இந்த கார் தற்போது விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, பென்ஸ் நிறுவனம் இந்த காரின் விற்பனையை நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றன. ஆகையால், செகண்ட் ஹேண்டில் மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 250 சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி இருக்கின்றது. இதைவிட பலமடங்கு அதிக சொகுசு வசதிகள் நிறைந்ததாக அடா சர்மா வாங்கி இருக்கும் பென்ஸ் சொகுசு கார் இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே அடா சர்மா இந்த காரை தேர்வு செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








