இந்த கார்கள் கையில இருந்தா தினமும் தீபாவளிதான்.. மூட்-ஆஃபாக இருந்தாலும், கொஞ்ச நேரத்துல மாத்திரும்!
தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் என்ற உடன் அடுத்து நம் நினைவிற்கு வருவது வான வேடிக்கை. இந்த ரக வெடிகள் உயர பறந்து, கலர்ஃபுல்லாக வெடித்து சிதறும். கனத்த மனம்கூட அதை பார்த்த உடன் லேசாக மாறிவிடும். அத்தகைய சிறப்பு வசதியைத் தாங்கியதே இந்த ரக வெடிகள் ஆகும்.
இத்தகைய உணர்வை தினந்தோறும் உங்கள் வாழ்க்கை பயணத்தின்போது அனுபவிக்க வேண்டுமா? இந்த அம்சத்தை ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆமாங்க, ஆம்பியன்ட் லைட்டை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த அம்சம் உங்கள் காரையே கலர்ஃபுல்லானதாக மாற்றும். ஒரு வேளை நீங்கள் மூட் அப்செட்டாக இருந்தால், இந்த லைட்டுகள் உங்களின் மன நிலையையே மாற்றிவிடும்.

ஏன் சிறிய பார்ட்டியை காருக்குள் கொண்டாடவே இந்த அம்சம் வழிவகுக்கும். இத்தகைய அம்சத்தை ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் தங்களின் விலை குறைவான கார் மாடல்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களில் எத்தனை பேருக்கும். அத்தகைய மலிவு விலை கார் மாடல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருகள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): ஹூண்டாய் வெர்னா இந்த காரில் 64 வண்ணங்கள் அடங்கி ஆம்பியன்ட் லைட் வழங்கப்படுகின்றது. இது ஓர் செடான் ரக கார் மாடலாகும். இந்தியாவின் பட்ஜெட் விலை செடான் ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

சற்று பிரீமியம் வசதிகள் அதிகம் கொண்ட தேர்விலேயே ஆம்பியன்ட் லைட் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், எஸ்எக்ஸ் தேர்வில் இருந்தே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 10.96 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆம்பியன்ட் லைட் அம்சத்துடன் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், சிறப்பான கூலிங்கை வெளிப்படுத்தும் ஏசி சிஸ்ட்ம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் வெனிடிலேட் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கியா செல்டோஸ் (Kia Seltos): இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலிலும் 64வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன் லைட் வசதியே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 10.25அங்கு திரை, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், ஹெட்ஸ்-அப் திரை மற்றும் வெண்டிலேட் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. ரூ.15.2லட்சம் விலைக் கொண்ட எச்டிஎக்ஸ் தேர்விலேயே ஆம்பியன்ட் லைட் வசதி வழங்கப்படுகின்றது.
கியா கேரன்ஸ் (Kia Carens): கியாவின் மற்றுமொரு ஆம்பியன்ட் லைட் வதிக்கொண்ட கார் மாடலாக கேரன்ஸ் இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாக தற்போது இருக்கின்றது. இந்த கார் மாடலில்64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட் வசதியே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வசதிக் கொண்ட கேரன்ஸின் விலை ரூ.16.35லட்சம் ஆகும். இந்த தேர்வில் அதிக பிரீமியம் அம்சங்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

எம்ஜி ஹெக்டோர் (MG Hector): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக காராக எம்ஜி ஹெக்டர் இருக்கின்றது. இந்த காரில் 8 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட் செட்டப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் ஷார்ப் ப்ரோ எனும் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 19.45 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா ஹாரியர் (Tata Harrier): இந்தியாவின் கவர்ச்சியான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலாக டாடா ஹாரியர் இருக்கின்றது. இந்த காரில் 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட்டை டாடா வழங்கி இருக்கின்றது. இதுதவிர, இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 10.25 அங்குல முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட டிரைவர் திரை, 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார்கள் இந்த கார்கள் மட்டுமே சற்று பட்ஜெட் விலையில் ஆம்பியன்ட் லைட் வசதி உடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடலாகும். ஒரு வேளை இந்த அம்சம் உங்கள் காரில் இல்லை என்றால், ஆஃப்டர் மார்க்கெட் வாயிலாக இந்த அம்சத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதை அணுகும் சற்று கவனம் தேவை. அங்கீகாரமற்ற ஆம்பியன்ட் லைட் ஆபத்தானது ஆகும்.


Click it and Unblock the Notifications
