ரூ.15 இலட்சம் கூட செலவாகாது!! இதில் ஒரு டீசல் காரை வாங்கிடலாம் - எல்லாமே ஆட்டோமேட்டிக் கியர் கொண்டவை!

என்னத்தான் புதுசு புதுசாக பெட்ரோல் கார்கள் வந்தாலும் டீசல் கார்களை ஓட்டுவது எப்போதும் தனி சுகம் தான். பயணம் அனுபவம் சிறப்பாக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, மைலேஜையும் டீசல் கார்கள் அதிகமாக வழங்குகின்றன. இதன் காரணமாகவே, கூடுதல் செலவாகினாலும் பரவாயில்லை என நிறைய பேர் டீசல் கார்களை விரும்பி வாங்குகின்றனர்.

இருப்பினும், சமீப காலமாக அளவில் சிறிய கார்கள் டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளே முக்கிய காரணம் ஆகும். இருப்பினும், இப்போதும் சில டீசல் கார்களை ரூ.15 இலட்சத்திற்குள் வாங்க முடியும். அவற்றுள், ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்கும் 3 டீசல் எஸ்யூவி கார்களை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

affordable diesel automatic suv cars

மஹிந்திரா எக்ஸ்யூவி300: ரூ.12.31 லட்சத்தில் இருந்து ரூ.14.76 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் டீசல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி300 கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் டீசல் கார் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் ஆகும்.

மஹிந்திராவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300-இல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 117 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. எக்ஸ்யூவி300 காரில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஏசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

affordable diesel automatic suv cars

கியா சொனெட்: டீசல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கியா சொனெட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.05 லட்சம் - ரூ.14.89 லட்சம் ஆகும். கியா சொனெட்டில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 116 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த டீசல் என்ஜினை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். அதேபோல், ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ஆட்டோமேட்டட்) கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் சொனெட் டீசல் கார் கிடைக்கும். கிளட்ச் பெடல் இல்லாமல் வழங்கப்படும் ஐஎம்டி உங்களுக்கு ஓகே என்றால், கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ் கார்களையும் டீசல் என்ஜின் உடன் ரூ.15 இலட்சத்திற்கு கீழ் வாங்க முடியும்.

affordable diesel automatic suv cars

டாடா நெக்ஸான்: இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி காரான நெக்ஸானும் டீசல் - ஆட்டோமேட்டிக் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த ஆப்ஷனில் நெக்ஸானின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.30 இலட்சத்தில் இருந்து ரூ.15.50 இலட்சம் வரையில் உள்ளன. நெக்ஸானில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

115 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டாடா நெக்ஸானில் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் டீசல் கார்களுக்கு எப்போதுமே ஓர் டிமாண்ட் உள்ளது. இருப்பினும், காற்று மாசடைவதை தவிர்க்கும் விதமாகவும், உலக வெப்பமயமாதலை குறைக்கும் விதமாகவும் டீசல் கார்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் பெட்ரோல் கார்களின் பயன்பாடும் குறைக்கப்படும் என்பது உறுதி. ஆனால், அதற்கு முன்னதாக டீசல் கார்கள் குறைக்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 8:30 [IST]
English summary
Affordable diesel automatic suv cars under rs 15 lakhs check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X