இந்தியாவில் விற்பனையாகும் 4 இல் 1 கார் இந்த அம்சம் கொண்டதுதான்.. மலிவு விலையில் உங்களாலும் வாங்க முடியும்..

இந்தியர்கள் மத்தியில் சன்ரூஃப் வச்ச கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய புள்ளி விபரங்களும் இதையேதான் உறுதி செய்கின்றன. இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் ஒரு கார் சன் ரூஃப் வச்சது என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அம்சம் (சன்ரூஃப்) பயணத்தின்போதும் வான்வெளியையை ரசித்த வண்ணம் பயணிக்க உதவுகின்றது. இந்த அம்சத்தையே இந்தியர்கள் அதிகம் நாடிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு பலர் அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். இதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு சன்ரூஃப் வச்ச கார்களுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கின்றது.

Most affordable sunroof cars

இந்த வரவேற்பிற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மலிவு விலைக் கொண்ட கார்களிலும் இந்த சன்ரூஃப் வசதியை வழங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் இந்த அம்சத்தை வாகன சொகுசு மற்றும் ஆடம்பர கார்களில் மட்டுமே காண முடியும். அந்த வாகனங்களில் மட்டுமே உற்பத்தியாளர்களும் சன்ரூஃப் வசதியை வழங்கி வந்தனர்.

ஆனால், இந்த நிலை தற்போது முழுவதுமாக மாறி இருக்கின்றது. பட்ஜெட் விலை கார்களிலும்கூட சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி குறைவான விலையில் சன்ரூஃப் வசதி உடன் கிடைக்கும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Sunroof

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடலே இது ஆகும். மிகவும் ஸ்டைலான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலிலேயே டாடா மோட்டார்ஸ் சன்ரூஃப் வசதியை வழங்குகின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த காரில் சொகுசு கார்களுக்கு இணையான ரைடு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த அளவிற்கு பிரீமியம் வசதிகளை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. டாடா அல்ட்ராஸ் ரூ. 6.60 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் ரெவோட்ரோன், 1.2 லிட்டர் டர்போ, 1.2 லிட்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் ரெவோடார்க் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata altroz

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்டர் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போதே மாதக் கணக்கில் காத்திருக்கும் அளவிற்கு அக்காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

இதற்கு இந்த காரில் சன்ரூஃப் போன்ற தரமான அம்சங்களை நிறுவனம் வழங்கி இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன் சன்ரூஃப் வச்ச தேர்வு ரூ.8 லட்சம் என கூறப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரின் ஆரம்ப நிலை தேர்வு ரூ.6.00 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த குறைவான விலைக்கே பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களை இந்த காரில் ஹூண்டாய் வாரி வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Hyundai exter

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாயின் மற்றுமொரு விலை குறைவான சன்ரூஃப் வசதிக் கொண்ட காராக இது இருக்கின்றது. இதன் விலை ரூ. 9.01 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டாடாவின் அல்ட்ராஸுக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் விற்பனைக்கு இருக்கின்றது. ஐ20-இன் உயர்நிலை தேர்விலேயே சன்ரூஃப் அம்சம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata nexon

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவின் மிகுந்த பாதுகாப்பு திறன் கொண்ட கார் மாடலாக இது இருக்கின்றது. 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காரே இதுவாகும். இந்த காரின் விலைக்கும், தரத்திற்கும் துளியும் சம்பந்தம் இருக்காது என்று கூறலாம். அந்தளவிற்கு வசதிகளை அதிகளவில் நெக்ஸான் கொண்டிருக்கின்றது.

அதிக இடவசதி, மாடர்ன் கால அம்சங்கள், ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இதுதவிர, சன்ரூஃப் உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் சன்ரூஃப் வச்ச தேர்வின் விலை ரூ. 9.50 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.

Mahindra xuv300

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300): இந்தியாவின் மற்றுமொரு பாதுகாப்பான மற்றும் சன்ரூஃப் வசதிக் கொண்ட விலை குறைவான கார் மாடலாக மஹிந்திராவின் இந்த தயாரிப்பு இருக்கின்றது. இதன் சன்ரூஃப் வச்ச தேர்வு ரூ. 10 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த மிக சிறந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சன்ரூஃப் வச்ச கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உணர்ந்தே ஹூண்டாய் மற்றும் டாடா உள்ளிட்ட முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சன்ரூஃப் வசதியை விலை குறைவான கார்களிலும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை சன்ரூஃப் வச்ச கார்களுக்கான தேவையை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2023, 14:00 [IST]
English summary
Affordable sunroof equipped cars list in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X