இந்த லிஸ்ட்ல உங்க பெயர் வந்துடுச்சுன்னா காசு கெடுத்து டிக்கெட் எடுத்தாலும் விமானத்தில் பயணிக்க முடியாது!

விமானத்தில் சட்டவிரோதமான செயல்கள் அல்லது மற்றவர்களுக்குத் தொடர்ந்து தொந்தரவு தரும் பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து விமான நிறுவனங்களும் சேர்த்து மொத்தம் 143 பேரை பிளாக் லிஸ்ட் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்

விமான பயணம் என்பது பலருக்கு பெரும் கனவாக இருக்கிறது. டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பலர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையை நிராசையாகவே வைத்திருக்கின்றனர். இப்படியாக விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்த பலர் அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால் சிலர் என்னதான் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தாலும் விமான பயணம் என்பது அவர்களுக்கு நிராசையாகவே மாறிப்போய்விடுகிறது..

இந்த லிஸ்ட்ல உங்க பெயர் வந்துடுச்சுன்னா காசு கெடுத்து டிக்கெட் எடுத்தாலும் விமானத்தில் பயணிக்க முடியாது!

ஆனால் சிலர் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தாலும் அவர்களை விமானத்தில் ஏற்ற விமான நிறுவனங்களால் மறுக்க முடியும். இது பற்றி உங்களுக்குத் தெரியுமா? பலருக்கு இப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ஒட்டு மொத்தமாக அனைத்து விமான நிறுவனங்களும் சிவில் ஏவியேசன் ரெக்குவர்மென்ட் (CAR) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது இந்த அமைப்பு 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி விமானச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவர்களே தீர்வு காண இந்த அமைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பு விமானத்தில்
யாராவது மோசமாக நடந்து கொண்டால் விமானத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் அல்லது விமானத்தில் சக பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டால் அவர்களை இனி விமானத்திற்குள் அனுமதிக்காத வண்ணம் புதிய லிஸ்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. நோ ஃப்ளை லிஸ்ட் என்ற புதிய லிஸ்டை உருவாக்கி இதைச் செய்துள்ளது.

இந்த லிஸ்டில் ஒரு முறை ஒரு நபரின் பெயர் இடம் பெற்றுவிட்டால் அவர் அடுத்து விமானத்திலேயே பயணிக்க முடியாது. இந்த பட்டியலில் ஒரு விமான நிறுவனம் அவ்வளவு எளிதாக ஒரு நபரைச் சேர்த்துவிட முடியாது அவர் என்ன தவறு செய்தார் என்பதை அவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படி அந்த குழு ஒப்புக்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட பயணி இந்த பட்டியலில் சேர்க்கப்படுவார்.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 143 பயணிகள் இந் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சிவில் ஏவியேஷன் துறை அமைச்சர் விகே சிங் பதிலளித்த போது இது குறித்த விளக்கமான தரவுகளை வழங்கியுள்ளார். அதன் படி கடந்த 2023ம் ஆண்டு மட்டும் மொத்தம் 63 பயணிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டு துவங்கி ஒரு மாதம் தான் ஆகும் நிலையில் இதுவரை 63 பயணிகள் இந்த பட்டியலில் சேர்க்பகப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் 46 பயணிகளும், விஸ்தாரா சார்பில் 16 பயணிகளும், ஸ்பைஸ் ஜெட் சார்பில் 1 பயணியும் இந்த நோ ஃப்ளை லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் 45 பயணிகளும், விஸ்தாரா சார்பில் 19 பயணிகளும், ஏர் ஏசியா சார்பில் 2 பயணிகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது கழிவறையைப் பயன்படுத்தாமல் விமானத்திற்குள்ளேயே சிறுநீர் கழித்தவர்கள், விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை வேண்டுமென்றே திறந்தவர்கள். உள்ளிட்ட பல சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் உள்ளவர்கள் இனி விமானங்களில் பயணிக்கவே முடியாது இந்தியாவிற்குள் அவர்கள் எந்த விமானத்திலும் ஏற முடியாது. இவர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தாலும் அந்த டிக்கெட் ரத்து செய்யப்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2023, 20:08 [IST]
English summary
Airlines internal committees setup no fly list to black list passengers know details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+