இது அவருக்காக வாங்கப்பட்ட 7வது புல்லட் ப்ரூஃப் கார்! இதோட விலையை கேட்டு ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாக் ஆகிருச்சு!
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருக்கின்றார். இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக அதிகம் என்பதால் அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அரசாங்கம் சார்பில் 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கூடுதல் பாதுகாப்பு வளையங்களை முகேஷ் அம்பானி தன்னைச் சுற்றிலும் உருவாக்கி இருக்கின்றார்.
அந்தவகையில், மிகப் பெரிய கார் அணி வகுப்பு இவரின் கான்வாயில் பயன்படுத்தப்படுகின்றது. அனைத்து கார்களும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்தவையும்கூட. அதேவேளையில், முகேஷ் அம்பானியின் பயன்பாட்டில் சில புல்லட் ப்ரூஃப் கார்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஆறு புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார்கள் பயன்படுத்தி வந்தநிலையில் தற்போது ஏழாவதாக ஓர் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட காரும் புதிதாக இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார்? அதன் சிறப்புகள் என்ன? விலை எவ்வளவு உள்ளிட்ட விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes Benz S680 Guard) புல்லட் ப்ரூஃப் காரே முகேஷ் அம்பானியின் பயன்பாட்டிற்காக தற்போத வாங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் செடான் ரக காராகும். துப்பாக்கி புல்லட்டில் இருந்து மட்டுமல்ல கையெறி குண்டுகள் மற்றும் தீ விபத்துகளில் இருந்தும் இந்த கார் அதன் பயணிகளைக் காப்பாற்றும் திறன் கொண்டது.

Source: CarCarzyIndia/Instagram இதுமட்டுமில்லைங்க, விஆர்10 (VR10) வகை பாதுகாப்பு அம்சத்தையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த அம்சம் காருக்கு மிக அருகில், அதாவது, 2 மீட்டர் இடைவெளியில் சுமார் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் வெடித்துச் சிதறினால்கூட அதைத் தாக்குபிடிக்கும். இந்த திறனுக்காக காரின் அடிப்பக்கம் மிகவும் உறுதியானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இது தவிர, விஷ வாயு தாக்குதலில் இருந்தும்கூட இந்த கார் தன்னுடைய பயணிகளைப் பாதுகாக்கும். மேலும், காரின் பாடி பேனல்கள் மட்டுமல்ல ஜன்னல் கண்ணாடிகளும் மிக உறுதியானவையாக இருக்கின்றது. அது சுமார் 3.5 இன்ச் முதல் 4 இன்ச் வரை இருக்கும்.
இந்த அதீத அடர்த்தியே புல்லட்டை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய மிக தடிமனான கண்ணாடிகளே ஜன்னல், விண்ட் ஷீல்டாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பாதுகாப்பு வசதிக் கொண்ட காரையே முகேஷ் அம்பானி தற்போது வாங்கி இருக்கின்றார்.ஸஇந்த கார் மினு மினுப்பான கோல்டன் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரில் மிகப் பெரிய வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 எச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருக்கு மிகவும் பேன்சியான 999 என்கிற பதிவெண் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த அதீத பாதுகாப்பு வசதிக் கொண்ட காரின் மதிப்பு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இத்தகைய அதிக விலைக் கொடுத்து முகேஷ் அம்பானி ஓர் காரை வாங்குவது எல்லாம் முதல் முறையல்ல. இதுபோன்ற ஏகப்பட்ட மிக மிக விலை உயர்ந்த மற்றும் அரிய வகை கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி இடத்தில் சொகுசு கார்கள் மட்டுமல்ல ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானம் உள்ளிட்டவையும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் வரிசையிலேயே தற்போது புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது மேலே சொன்னதைவிட இன்னும் அதிக பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications








