மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க

டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியின்கீழ் மாருதி சுஸுகி நிறுவனம் உருவாக்கிய கார் மாடலே கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இந்த கார் மாடலுக்கு இப்போது இந்திய சந்தையில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பாக இது மாறி இருக்கின்றது.

அதாவது, ஸ்விஃப்ட், எர்டிகா போன்ற நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களின் வரிசையில் கிராண்ட் விட்டாராவும் இணைந்து இருக்கின்றது. இந்த காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றாக காரின் விலைகள் உள்ளன. ரூ. 10.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையிலேயே அதிக பீரிமியம் தர வசதிகளை கிராண்ட் விட்டாராவில் மாருதி சுஸுகி வாரி வழங்கி உள்ளது.

ஜப்பான்

ஜப்பான் தூதரே வாங்கியிருக்காரு

இதன் விளைவாகவே இந்த புதிய கார் மாடலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சிறப்பு வசதிகளின் வாயிலாக சில முக்கிய பிரமுகர்களின் கவனத்தையும் இந்த கார் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஜப்பான் தூதரக தலைவருக்கு கிராண்ட் விட்டாரா காரை டெலிவரி கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த படங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன.

சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஜெட்டா பிளஸ், ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா பிளஸ் எனும் ஆறு விதமான வேரியண்டுகளில் கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றில் அவர் எதை வாங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை. ஆகையால், ஜப்பான் தூதரக தலைவர் வாங்கியிருக்கும் கிராண்ட் விட்டாராவின் துள்ளியமான விலை மற்றும் சிறப்புகள் பற்றிய விபரங்களை எங்களால் வழங்க முடியவில்லை. அவர் உயர்நிலை தேர்வையே தேர்ந்தெடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பான்

சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கும்

இதிலேயே நிறுவனம் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்குகின்றது. ஆமாங்க, மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவை மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்குகின்றது. இதில், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் குறைவான விலைக் கொண்டதாகவும், ஸ்ட்ராங் ஹைபிரிட் அதிக விலைக் கொண்ட உயர் நிலை தேர்வாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றுடன் சேர்த்து கூடுதல் தேர்வாக சிஎன்ஜி ஆப்ஷனும் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவின் மைல்டு ஹைபிரிட் தேர்வுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இது ஓர் 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்ஜின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஜப்பான்

ஆல் வீல் டிரைவ் இதுல மட்டும்தான் கிடைக்கும்

ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆப்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பு தொழில்நுட்பமாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இந்த மோட்டார் டொயோட்டாவிடம் இருந்து பெறப்பட்டதாக உள்ளது. இது அதிகபட்சமாக 114 பிஎச்பியை வெளியேற்றும் திறன் கொண்டது. இ-சிவிடி டிரான்ஸ்மிஷனே இதனுடன் வழங்கப்படுகின்றது. கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி அதிகபட்சமாக 86 பிஎச்பி மற்றும் 121 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பு வசதிகளின் விபரம்

இந்த காரில் சிறப்பு வசதிகளையும் மாருதி சுஸுகி மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட் கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டுகள், கார் இணைப்பு தொழில்நுட்பம், எஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராண்ட் விட்டாராவின் உயர்நிலை தேர்வில் பல தொழில்நுட்ப வசதிகளை கூடுதலாக காண முடியும்.

அந்தவகையில், உயர்நிலை தேர்வுகளில் வெண்டிலேட் அம்சம் கொண்ட இருக்கை, 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை (ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பம் கொண்டது), ஹெட்ஸ் அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், காரின் பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, சாவி இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களிலும் கிராண்ட் விட்டாரா மிக சிறப்பான மாருதி தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகிய உயர்நிலை ட்ரிம்களில் 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், டே-நைட் ஐஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான காரையே தற்போது ஜப்பான் தூதரக தலைவர் டெலிவரி பெற்று இருக்கின்றார்.

Most Read Articles
English summary
Ambassador of japan got delivery maruti suzuki grand vitara suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X