இந்த அப்டேட் வந்துச்சுன்னா ஒலா, ஏத்தர் மார்கெட்டெல்லாம் காலியாகிடுமே! மாஸ்டர் ஸ்டாக் போடும் ஆம்பியர்!

கிரீவீஸ் காட்டன் நிறுவனம் ஆம்பியர் என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது பிரிமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் வேரியன்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. . இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஆம்பியர் பிராண்டில் பிரிமஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது அதன் முன் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்கூட்டர் ஆம்பியர் நிறுவனத்தின் ஹைஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.

Ampere Primus Disc Variant

இந்நிலையில் ஆம்பியர் நிறுவனம் இதில் புதிய வேரியன்டான டிஸ்க் பிரேக்கை முன் வீலில் மட்டும் வைத்து வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டர் இந்தாண்டு இறுதியில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் இது குறித்து ஃபீட்பேக் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகமாக வாடிக்கையாளர்கள் விரும்பினால் டிஸ்க்பிரேக் வேரியன்ட் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த டிஸ்க் டிரேக் ஸ்கூட்டரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை, ஆனால் டிரம் பிரேக் வேரியன்டை விடச் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Ampere Primus Disc Variant

தற்போது டிரம்பிரேக் வேரியன்ட் ஸ்கூட்டர் ரூ1.09 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. மேலும் ஆம்பியர் நிறுவனம் வெறும் பிரேக்கை மட்டும் அப்டேட் செய்யப்போவதில்லை மாறாக இந்நிறுவனம் முழுமையாக சில மாற்றங்களைச் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி ஆம்பியர் ஸ்கூட்டர்களில் டச்ஸ்கிரீன் கிஸ்டரை கொண்டு வரவும், அதில் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் மார்கெட்டில் உள்ள ஒலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க முடியும் என ஆம்பியர் நிறுவனம் நம்புகிறது.

இப்படியாக முழுமையாக அம்சங்களைக் கொண்ட எலெக்டரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி வரும் செக்மெண்டில் சப் செக்மெண்ட் வாரியாக வாகனங்களை அறிமுகப்படுத்தி அதிகமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இந்த இடத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க இந்நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தற்போது ஆம்பியர் நிறுவனம் பி2பி மற்றும் பி2சி ஆகிய இரண்டு வகை ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது .

தற்போது அந்நிறுவனத்திடம் பிரிமஸ், மேக்னஸ் இஎக்ஸ், ஸீல் இஎக்ஸ், உள்ளிட்ட ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிறுவனம் விரைவில் தனது ஸ்கூட்டர் லைன் அப்களை அதிகரிக்கும்பட்சத்தில் விரைவில் மார்கெட்டில் ஒரு கணிசமான பங்கைப் பெற்றுவிடும் என்பதில் அச்சமில்லை!

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 18:30 [IST]
English summary
Ampere likely to update primus electric scooter with disc brake
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+