பிரக்ஞானந்தாவிற்கு கார் பரிசு இல்லையா? என்னங்க ஆனந்த் மஹிந்திரா இப்படி ஒரு டுவிஸ்ட் அடிச்சிட்டாரு!

"கோவில்களுக்கு எல்லாம் காரை பரிசா கொடுக்குறீங்க அப்படியே நம்ம பிரக்ஞானந்தாவுக்கும் கொடுங்க" என சமூக வலைதளத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை நெட்டிசன்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவுக்கு காரை பரிசாகக் கொடுக்கப்போவது இல்லை என்றும், அவருக்கு பதிலாக வேறு இரு நபர்களுக்கு காரைப் பரிசாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும், இதுகுறித்த உங்கள் கருத்து என்ன என்றும் அவர் நெட்டிசன்கள் மத்தியில் கேட்டிருக்கின்றார். அவர் யாருக்கு காரை பரிசளிக்க இருக்கின்றார்? எந்த காரை பரிசாக வழங்க இருக்கின்றார்? உலக அரங்கில் இந்தியாவிற்கு தனி பெருமை சேர்க்கும் வகையில் பிரக்ஞானந்தா விளையாடியநிலையில் அவருக்கு ஏன் பரிசு வழங்கப்படவில்லை? இந்த கேள்விகளுக்கான விடையையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Electric car gift to praggnanandhaa

18 வயதே ஆன இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு இவரால் உலக கோப்பையைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றாலும், இதற்காக அவர் மேற்கொண்ட தீவிர முயற்சிக்கான பரிசாக இது அமைந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே நெட்டிசன்கள் பலர் பிரக்ஞானந்தாவிற்கு காரை பரிசாக வழங்குமாறு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு கோரிக்கையை எழுப்பத் தொடங்கினர். இவர் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளைக் குவிந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றார்.

இதுதவிர, சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களுக்குகூட அந்நிறுவனம் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரக்ஞானந்தாவிற்கும் காரை பரிசாக வழங்குமாறு என்ற கோரிக்கை வலுக்க எழும்பியது. இந்த பதிவுகளுக்கு தற்போது பதிலளித்திருக்கும் ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவிற்கு காரை பரிசளிக்கப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக வேறொருவருக்கு காரை பரிசளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர், பிரக்ஞானந்தாவின் திறமைகள் அனைத்தையும் வெளியுலகிற்குக் கொண்டு வருவதற்காக போராடிய அவரது அம்மா நாகலக்ஷ்மி மற்றும் அவரது அப்பா ரமேஷ் பாபுவுக்கே காரை பரிசாக வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். மஹிந்திராவின் சூப்பரான எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் காரே அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட இருக்கின்றது.

பிரக்ஞானந்தாவிற்கு பரிசாளிக்காமல் அவரது பெற்றோர்களுக்கு காரை வழங்குவதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் தெரிவித்து இருக்கின்றார். ஆன்லைன் வீடியோ கேம்களில் இந்த உலகமே மூழ்கி கிடக்கும் சூழலில், தங்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் சிறந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். இதற்கு அவர்களை ஊக்கிவிக்க வேண்டியே பிரக்ஞானந்தாவின் அம்மா-அப்பாவிற்கு எலெக்ட்ரிக் காரை பரிசளிக்க ஆனந்த் மஹிந்திரா முன் வந்திருக்கின்றார்.

மஹிந்திரா நிறுவனத்தின் சூப்பரான எலெக்ட்ரிக் காரே எக்ஸ்யூவி 400 இவி ஆகும். இதையே பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு பரிசாக வழங்க இருக்கின்றார் ஆனந்த் மஹிந்திரா. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த கார் அவர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

34.5 kWh மற்றும் 39.4 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 375 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று 456 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். மேலும், ரூ. 15.99 லட்சம் தொடங்கி ரூ. 18.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரின் அம்மா-அப்பாவிற்கு பரிசாக வழங்க இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில்தான் 2023 பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றி நிகத் ஜரீனுக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வீரர்களை அங்கீகரிப்பதில் மற்ற நிறுவனங்களைவிட மஹிந்திரா நிறுவனம் சற்று முன்னோடியாக இருக்கின்றது. அது தான் விற்பனைச் செய்யும் விலை உயர்ந்த காரையே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே இணையத்தில் எழும்பிய கோரிக்கைகளைத் தொடர்ந்து பிரக்ஞானந்தாவிற்கு காரை பரிசாக வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

Article Published On: Monday, August 28, 2023, 20:25 [IST]
English summary
Anand mahindra to gift xuv 400 ev to praggnanandhaa s parents
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+