டிரைவரே இல்லாமல் தானா ஓடும் மஹிந்திரா எக்ஸ்யூ 700 கார்! இது எப்படி சாத்தியம்?
இந்தியாவில் சமீபகாலமாக அட்டோமெட்டிக் டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் பிரபலமாகி வருகிறது. பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் அந்த தொழிற்நுட்பத்தை உட்புகுத்தி வருகின்றனர். இந்த சிஸ்டம் கார்களில் டிரைவர்கள் சிறு சிறு தவறுகள் செய்தாலும் அது குறித்து எச்சரித்தும் தானாகத் தவறுகளைச் சரி செய்தும் விபத்துக்களைத் தவிர்க்கும் சிஸ்டமாகும்.
இந்தியாவில் இந்த அடாஸ் தொழிற்நுட்பம் பிரபலமடைந்துவரும் நிலையில் இந்த தொழிற்நுட்பம் உள்ள கார்களை பயன்படுத்துபவர்கள் இதைத் தவறாகப் பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பயணித்த ஜோடி இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்தான முறையில் கார் ஓட்டிய வீடியோ வைராலாக பரவியது.

இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. இந்த தொழிற்நுட்பத்தில் க்ரூஸ் கண்ட்ரோலை பயன்படுத்தி காரை தானாக இயங்க வைக்க முடியும். ஆனால் கார் தானாக இயங்கினாலும் டிரைவர் எப்பொழுது வேண்டுமானாலும் காரின் கண்ட்ரோலை எடுக்கும்படி சீட்டில் தயாராக இருக்கவேண்டும். ஆனால் இந்த வீடியோவில் டிரைவர் சீட்டில் ஒருவர் இல்லாமலேயே காரை இயக்கியுள்ளார்.
அவர் முன் பயணிகள் சீட்டில் அமர்ந்த படி அதுவும் டேஷ்போர்டில் சாய்ந்து கொண்டு கால்களைப் பயணிகள் சீட்டின் ஹெட்ரெஸ்டில் வைத்துக்கொண்டு செல்போனை நோண்டிய படியே பயணம் செய்கிறார். கார் வேகமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் க்ரூஸ் கண்ட்ரோல் முறையில் சென்று கொண்டிருக்கிறது.
அவர் பயணிகள் சீட்டில் சீட் பெல்ட் பொருத்தப்பட்ட நிலையில் பயணம் செய்கிறார். ஆனால் இந்த பயணத்தில் சீட் பெல்ட் பயனே இல்லாமல் போய் விடுகிறார். அவர் எதிர்மறையான திசையில் அமர்ந்திருக்கிறார். காரின் பின் சீட்டில் மற்றொருவர் அமர்ந்திருக்கிறார். அவர் தான் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதுவும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் தான். இப்படியாகப் பயணிப்பது அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்லும் மற்ற கார் ஓட்டிகளுக்கும் ஆபத்தானதும் கூட இப்படியாக மற்ற கார்களில் செல்ல முடியாது. இந்த அடாஸ் தொழிற்நுட்பம் கொண்ட கார்களில் மட்டுமே செல்ல முடியும். இந்த தொழிற்நுட்பம் இல்லாத கார் இதே சாலையில் செல்லும் பட்சத்தில் இந்த கார் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

பலர் முதலில் இந்த வீடியோவை பார்த்ததும் இது சாத்தியமே இல்லை. ஏதோ கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்றே நினைத்தனர். ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இது சாத்தியம் தான். அந்த காரில் உள்ள அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் பிரேக் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட் ஆகியன இதற்கு உதவும்
கார் குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் போது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை ஆன் செய்துவிட்டால் கார் அதே வேகத்தில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை மதிக்காமலேயே செல்லும். மேலும் எதிரில் வேறு கார் சென்றால் அதன் வேகத்திற்கு ஏற்ப இந்த காரும் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு தொடர்ந்து பயணிக்கும்.

அது போல ஏதாவது குறுக்கே வந்தால் எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் தானாக பிரேக் பிடித்து காரை நிறுத்திக்கொள்ளும். இது மட்டுமல்ல திருப்பங்களில் லேன் அசிஸ்ட் மூலம் சாலையில் உள்ள லேனை கவனித்து காரே தன்னை தான சரியான பாதையில் திருப்பிக்கொள்ளும். அதனால் பலர் தைரியமாக காரின் டிரைவர் சீட்டிலிருந்து நகர்ந்து விடுகின்றனர்.
ஆனால் இந்த சிஸ்டம் இந்தியாவில் தற்போது அசிஸ்ட் அளவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. காரை தானாக டிரைவ் செய்யும் தொழிற்நுட்பங்கள் இல்லை. டிரைவர் இந்த சிஸ்டத்தை பயன்படுத்தினாலும் எப்பொழுது வேண்டுமானாலும் காரை கண்ட்ரோலில் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் பலர் இதை மீறி இப்படியாகச் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இப்படியாக வீடியோ வெளியிட்டும் கலாச்சாரம் தற்போது அதிகமாகி வருகிறது. இப்படியாக கார் ஓட்டுவது முற்றிலும் தவறு நீங்கள் இதைத் தயவு செய்து முயற்சி செய்து பார்க்க வேண்டாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








