கார் டீலர் சொன்ன மந்திரம்... தல தோனியின் சொகுசு காரை வாங்கிய முன்னாள் டிவி ஷோ ஜட்ஜ்!

தல தோனி மிகப் பெரிய கார் லவ்வர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவரிடத்தில் எண்ணற்ற அரிய மற்றும் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இத்தகைய மிகப் பெரிய கார் பிரியரிடம் இருந்தே அஷ்னீர் கவுர் எனும் நபர், அவர் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் (அஷ்னீர் கவுர்) பாரத் பே நிறுவனத்தின் முன்னாள் மேனேஜிங் டைரக்டர் ஆவார்.

புகழ்பெற்ற ஷார்க் டேங்க் ஷோவில் நடுவராகவும் இவர் இருந்திருக்கின்றார். ஆகையால், இவரும் இந்தியாவின் முக்கியமான செலிபிரிட்டிகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையே அவரை விலையுயர்ந்த கார் லவ்வராக உயர்த்தி இருக்கின்றது. இதுவே அவர் தல தோனி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் சொகுசு காரை வாங்கவும் காரணமாக இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி காரையே அஷ்னீர் கவுர் தற்போது வாங்கியிருக்கின்றார்.

தோனி

ஃபேன்ஸி நம்பரை வச்சே உறுதியா சொல்றாங்க

முன்னதாக இந்த காரை தோனி பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஃபேன்ஸி எண் மற்றும் ஜார்கண்ட் பதிவை வைத்தே இது அவருக்கு சொந்தமான காராக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அனீஷ் கவுரும் இதையே சமீபத்தில் யுட்யூப் சேனல் ஒன்றின் பேட்டியின்போது தெரிவித்துள்ளார். ஓர் கார் டீலர் வழங்கிய அறிவுரையின் பேரிலேயே அவர் பயன்படுத்திய பென்ஸ் காரை வாங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அப்படி என்ன சொன்னார் அந்த டீலர்னு கேக்குறீங்களா?, புதிய கார் மாடலைக் காட்டிலும் செகண்ட் ஹேண்டில் சொகுசு காரை வாங்கும்போது பல மடங்கு குறைவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த மந்திரமே அஷ்னீர் பயன்படுத்திய சொகுசு காரை வாங்க காரணமாக இருந்திருக்கின்றது. உண்மையில் சொகுசு கார்கள் பயன்படுத்திய சந்தையில் பாதிக்கும் பாதி குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

தோனி

பல பிரபலங்கள் யூஸ்டு காரை வாங்குறாங்க

இந்த காரணத்தினால்தான் பலர் சொகுசு கார்களை செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும், அஷ்னீர் கவுர் மட்டுமின்றி சில முன்னணி பிரபலங்கள்கூட சொகுசு கார்களை யூஸ்டு மார்க்கெட்டில் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே எம்எஸ் தோனி பயன்படுத்தியதாகக் கருதப்படும் சொகுசு காரையும் அஷ்னீர் கவுர் வாங்கி இருக்கின்றார். ஆனால், இந்த கார் ஓர் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.

இது ரியல் எஸ்டேட் கம்பெனியால் தல தோனிக்கு பரிசாக வழங்கி இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதை வாகனத்தின் ஃபேன்சி நம்பர் உறுதி செய்யும் வகையில் இருப்பதாக அஷ்னீர் கவுர் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியிருக்கும் சொகுசு காரின் தெளிவான படங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, இது முந்தைய தலைமுறை ஜிஎல்எஸ் சொகுசு காராக இருக்கக் கூடும் என யூகிக்க முடிகின்றது. இந்த சொகுசு எஸ்யூவி ரக காரில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

இவ்ளோ கார வச்சிருக்காரா?

இதுமட்டுமின்றி இந்த சொகுசு காரில் வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற சிறப்புகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அஷ்னீர் கவுர் ஜிஎல்எஸ் சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த சொகுசு கார் மாடல் மட்டுமின்றி அவரிடத்தில் இன்னும் பல சொகுசு கார் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், மேபேக் எஸ்650, போர்ஷே கேமேன், ஆடி ஏ6, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட சொகுசு கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவர் பயன்படுத்திக் கொண்டிருப்பதிலேயே மிக சூப்பரான கார் மாடலாக போர்ஷேவிந் கேமேன் இருக்கின்றது. இது ஓர் இரு கதவுகள் கொண்ட சொகுசு ஸ்போர்ட்ஸ் கூபே ரக கார் மாடலாகும். இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தம மோட்டார் மிக மிக அதிக திறனை வெளியேற்றக் கூடியது. 295 பிஎச்பி பவர் வரை அது வெளியேற்றும். இத்துடன், அவரிடத்தில் மெர்சிடிஸின் மேபேக் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா?

இந்த கார் தற்போது இந்தியாவில் ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த செடான் கார் மட்டுமல்ல அதிக பவர்ஃபுல் எஞ்ஜினைக் கொண்ட வாகனமும்கூட. இதில், 4.0 லிட்டர் வி8 பை-டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 469 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், அனைத்து வீல்கள் இயக்கம் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் போன்ற வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 8:52 [IST]
English summary
Ashneer grover bought ms dhoni mercedes gls suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+