கோவா என்னங்க அசோக் லேலண்டின் இந்த வாகனம் கையில இருந்தா இந்தியாவையே சுத்திட்டு வந்திடலாம்!
அசோக் லேலண்ட் நிறுவனம் சிஎன்ஜியால் இயங்கக் கூடிய 12 சீட்டர் மினி பஸ்ஸை 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக வெளியீடு செய்தது. இந்த புத்தம் புதிய வாகனம் பற்றிய கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
வர்த்தக மற்றும் கனரக வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம், அதன் புத்தம் புதிய 12 சீட்டர் சிஎன்ஜியால் இயங்கும் மினி பேருந்தை இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் இந்த வாகன கண்காட்சி தளத்தைப் பயன்படுத்தி தனது 7 அட்வான்ஸ்டு புதிய வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

நகரம், ஹை-வே ரெண்டுத்துக்குமே பயன்படும்
அதில், ஒன்றே நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் மினி பேருந்து. படா தோஸ்த் எக்ஸ்பிரஸ் சிஎன்ஜி எனும் பெயரில் இந்த மினி பஸ்ஸை அசோக் லேலண்ட் காட்சிப்படுத்தியது. நகரம் மற்றும் ஹை வே என எந்த விதமான பயன்பாட்டிற்கு வேண்டுமானாலும் இந்த மினி பயணிகள் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கேற்பவே அசோக் லேலண்ட் படா தோஸ்த் எக்ஸ்பிரஸ் சிஎன்ஜி வாகனத்தை வடிவமைத்து இருக்கின்றது.
தாராளமான இட வசதிக் கொண்ட 12 இருக்கைகள்
இது ஓர் 12 இருக்கைகள் கொண்ட மினி பேருந்தாகும். வழக்கமான 12 சீட்டர் மினி பேருந்துகளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஸ்பெஷலான 12 சீட்டராக இதனை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. குடும்பத்துடன் நீண்ட தூர சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை அசோக் லேலண்ட் தயாரித்திருக்கின்றது. சொகுசான இருக்கைகள், லக்சூரியான உட்பகுதி என அட்டகாசமாக இந்த வாகனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி மோட்டார்
இந்த வாகனத்தில் பி15 பிஎஸ்6 தர சிஎன்ஜி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆமாங்க, அசோக் லேலண்டின் இந்த 12 சீட்டர் மினி பஸ் சிஎன்ஜியால் இயங்கக் கூடியது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 58 எச்பி பவரையும், 158 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். பேருந்தின் வீல் 2800 மிமீட்டராக இருக்கின்றது.
வழுக்கி விடாது
ஆகையால், இது எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளித்தும் விடும் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. இந்த மினி பேருந்தில் பாதுகாப்பிற்காக எக்கசக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், பாதுகாப்பு கைப் பிடிகள், ஆண்டி ஸ்கிட் ஃப்ளூர் (வழுக்கி விடாத தரை) போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
எவ்வளவு சிஎன்ஜி நிரப்பலாம்
இதுமட்டுமின்றி, இந்த வாகனத்தில் டிராக்கிங் சிஸ்டம், தரமான ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தையும் வழங்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலையில்கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த மினி பேருந்தை 13.5 மீட்டர் நீளத்திலும், 4X2 தொழில்நுட்பத்திலும் உருவாக்கி இருக்கின்றது. இந்த பேருந்தில் சுமார் 1500 லிட்டர் (255 கிலோ) சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ளும் வகையில் பெரிய சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரேஞ்ஜ்
இவை வாகனத்தின் ஃப்ரேமிலேயே பொருத்தியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுமையாக சிஎன்ஜியை நிரப்பும் பட்சத்தில் சுமார் 1,000 கிமீ ரேஞ்ஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நிறுவனம் கூறி இருக்கின்றது. இது மட்டுமில்லைங்க பர்சனல் யூஸுக்காக பெரிய குடும்பத்தினர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக முற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.
ஆகையால், தனி நபர்களையும் இந்த வாகனம் கவர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த சூப்பரான மினி பேருந்தின் விலையையும், அதன் விற்பனை விபரங்கள் பற்றிய தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








