இந்த கார் இனி அதிகாரப்பூர்வமா இந்தியால விற்பனைக்கு கிடைக்குமா? இத வாங்கினோம்னா அம்பானியே திரும்பி பார்ப்பாரு!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் (Aston Martin), அதன் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான டிபி12 (DB12)-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக அக்காருக்கு ரூ. 4.59 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலே அஸ்டன் மார்ட்டின் டிபி12 ஆகும். இத்தகைய கார் மாடலையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, அஸ்டன் மார்ட்டின். நிறுவனம் இந்த காரை டிபி11 மாடலை தழுவியே உருவாக்கி இருக்கின்றது.

ஆகையால், டிபி11 மாடலில் இருக்கும் அம்சங்கள் பலவற்றை டிபி12 மாடலிலும் நம்மால் காண முடியும். டிபி11 மாடலை போலவே மிகவும் தாழ்வான முகப்பு பகுதியையே டிபி12 கொண்டிருக்கின்றது. இதுவே இந்த கார் டிபி11-ஐ தழுவி டிபி12 உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான மிக முக்கியமான சான்றாக இருக்கின்றது.
அதேவேளையில், புதிய மாற்றமாக புதிய அஸ்டன் மார்ட்டின் லோகோ அந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசத்தையும் பெரிய அளவில் டிபி11 மற்றும் டிபி12 இடையில் நம்மால் காண முடியவில்லை. ஆமாங்க, இரண்டும் சிறிய சிறிய வித்தியாசங்களுடன் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கின்றன.

வெளிப்புறத் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் வேண்டுமானால் இந்த இரு கார்களுக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததைப் போல் தென்படலாம். ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் தென்படுகின்றது. அந்தவகையில், 4 லிட்டர் டர்போ வி8 எஞ்ஜினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டாரால் 670 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும். சஸ்பென்ஷன் விஷயத்திலும் புதிய அம்சங்களை அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் இந்த காரில் சேர்த்திருக்கின்றது. ஆகையால், முந்தைய அஸ்டன் மார்ட்டின் கார்களையும் இதில் மிக சிறந்த ரைடிங் அனுபவம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதிய அஸ்டன் மார்ட்டின் டிபி12 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டதே இந்த டிபி12 ஆகும். மூன்று விதமான டிரைவிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஜிடி, ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் ஆகியவையே அவை ஆகும். இதில், ஸ்போர்ட் பிளஸ் மோடை பயன்படுத்தும்போதே அக்காரின் உச்சபட்ச வேகமான மணிக்கு 325 கிமீ வேகத்தை நம்மால் எட்ட முடியும். இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி12 இருக்கின்றது.
இதனால் இதன் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது. இதனை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது அஸ்டன் மார்ட்டின் நிறுவனம். ஆகையால், ஆன்-ரோடில் இதன் விலை ரூ.5 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிக சிசி திறன் கொண்ட கார் மாடல்களுக்கு மிக மிக அதிக தொகை வரியாக இந்தியாவில் வசூல் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் மற்றும் சொகுசு கார்களுக்கு செல்வந்தர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அஸ்டன் மார்ட்டின் அதன் புதிய டிபி12 உலக புகழ்பெற்ற கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை வாங்கினால் கட்டாயம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துவிட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








