இந்த காரை மட்டும் எப்படியாவது வாங்கிவிட்டால் எல்லார் கண்ணும் உங்க மேல் தான்!! விலை அவ்வளவு இருக்கு...

அஸ்டன் மார்டின் நிறுவனம் அதன் டிபி12 ஸ்போர்ட்ஸ் காரின் அடுத்த தலைமுறை வெர்சனை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் புதிய டிபி12 ஸ்போர்ட்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எம்மாடியோவ்... இந்த அளவிற்கு ஸ்பெஷலானதா இந்த டிபி12!!

இந்திய சந்தை சமீப காலங்களில் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பட்ஜெட் விலை கார்களிலும் நன்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் வழங்கப்படும் அதேநேரம், உயர் தரத்திலான சொகுசு கார்களும் புதியவை, புதியவைகளாக இந்தியாவில் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

aston martin db12 details

இந்த வகையில், தற்போது முற்றிலும் புதிய அஸ்டன் மார்டின் டிபி12 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்டன் மார்டின் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ள முதல் கார் டிபி12 ஆகும். கூபே உடலமைப்பை கொண்ட இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.59 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு விலையை ஒரு கார் கொண்டுள்ளது என்றால், அதில் எந்த அளவிற்கான இயக்க ஆற்றல் கிடைக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இதற்கேற்ப அஸ்டன் மார்டின் டிபி12 காரின் தோற்றம் நன்கு ரக்டாக உள்ளது. இந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின்-டர்போ என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 680 பிஎஸ் மற்றும் 800 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

aston martin db12 details

இந்த காரின் சஸ்பென்ஷன் சிஸ்டத்தில் புதிய இண்டெலிஜண்ட் அடாப்டிவ் டேம்பர்கள் உள்ளன. அத்துடன், எலக்ட்ரானிக் ரியர் டிஃப்ரென்ஷியல் மற்றும் அஸ்டன் மார்டினின் பிரத்யேக 21 இன்ச் மெசெலின் பைலட் ஸ்போர்ட்ஸ் 5 எஸ் டயர்கள் போன்றவையும் புதிய டிபி12 காரில் இடம்பெறுகின்றன. காருக்கு உள்ளே மிக முக்கியமான அம்சமாக, அஸ்டன் மார்டின் நிறுவனத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டேஸ்போர்டில் கொடுக்கப்படுகிறது.

கேபினை மேலும் அழகாக காட்ட, ஓட்டுனருக்கு எதிரே காக்பிட் வழங்கப்பட்டிருக்க, அதிநவீன தொழிற்நுட்பங்களுக்கும், லக்சரி வேலைப்பாடுகளுக்கும் இந்த காரின் உள்ளே எந்தவொரு குறையும் இல்லை. கிட்டத்தட்ட ரூ.5 கோடியில் வாங்கும் காரில் என்னென்ன எதிர்பார்க்கலாமோ... அத்தனையும் இருக்கு. இந்த காரின் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

aston martin db12 details

இந்த காரில் 0-இல் இருந்து 96kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடலாம். காரின் டாப்-ஸ்பீடு 325kmph ஆகும். ஈரம், ஜிடி, ஸ்போர்ட், ஸ்போர்ட்ஸ் பிளஸ் மற்றும் இண்டிவிடியூவல் என 5 விதமான டிரைவிங் மோட்களை இந்த காரில் பெறலாம். இந்த ஸ்போர்ட்ஸ் காரின் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்கள் மூலமாக கொலிஷன் வார்னிங், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் உள்பட ஏகப்பட்ட வசதிகளை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அஸ்டன் மார்டின் நிறுவனம் அதன் பிரபலமான டிபி11 காரை அடிப்படையாக கொண்டு டிபி12 காரை உருவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், டிபி11 காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகவே டிபி12 பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், இந்த காரின் உருவாக்கத்தில் அஸ்டன் மார்டின் நிறுவனம் எந்த அளவிற்கு வேலை செய்திருக்கும் என்பதை யோசித்து பார்க்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 14, 2023, 20:37 [IST]
English summary
Aston martin db12 sports coupe full details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X